தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகர் ஆர் எஸ் சிவாஜி.
மூன்று வேடங்களில் கமல் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இவர் பேசிய வசனம் இன்றளவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.
ஜனகராஜ் உடன் இவர் இணைந்து..”தெய்வமே எங்கேயோ போயிட்டீங்க.. என்ற வசனத்தை இவர் பேசுவார். அது ரசிகர்கள் மத்தியில் பிரபலமான வசனமாகும். மேலும் ‘மைக்கேல் மதன காமராஜன்’ உள்ளிட்ட பல கமல் படங்களில் இவர் நடித்துள்ளார்.
2003 ஆம் ஆண்டு வெளியான பரமசிவன், வெள்ளை வானவில், ஆய்த எழுத்து மற்றும் அன்புதான் கடவுள் போன்ற பல தமிழ் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நெல்சனின் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவின் தந்தையாக நடித்திருந்தார் ஆர் எஸ் சிவாஜி.
நேற்று செப்டம்பர் 1 தேதி வெளியான யோகி பாபுவின் ‘லக்கிமேன்’ என்ற படத்திலும் இவர் நடித்திருந்தார்.
இந்த நிலையில் இவர் இன்று செப்டம்பர் 2ம் தேதி உடல்நல குறைவால் காலமானார்.
01-09-2023 நேற்று மாலை சென்னை தேவி கருமாரி தியேட்டரில் நடந்த உலக சினிமா விழா துவக்க விழாவில் நடிகர் ராஜேஷ், நடிகை ஷீலா ராஜ்குமார், இயக்குநர் ராசி அழகப்பன் உள்ளிட்டோருடன் நடிகர் ஆர் எஸ் சிவாஜியும் கலந்து கொண்டார். அவர் கலந்துக் கொண்ட கடைசி நிகழ்வு அதுவாகத்தான் இருக்கும்.
கூடுதல் தகவல்கள்..
இவர் 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி பிறந்தார். இவர் ப்ரொடியூசர் மற்றும் நடிகருமான சந்தானம் அவர்களின் மகன் ஆவார்.
திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, உதவி இயக்குனர் என பல்வேறு பணிகளையும் செய்துள்ளார். இவர் பி.ஏ. சைக்காலஜி படித்துள்ளார்.
Legendary Actor RS Sivaji passes away