தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகர் ஆர் எஸ் சிவாஜி.
மூன்று வேடங்களில் கமல் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இவர் பேசிய வசனம் இன்றளவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.
ஜனகராஜ் உடன் இவர் இணைந்து..”தெய்வமே எங்கேயோ போயிட்டீங்க.. என்ற வசனத்தை இவர் பேசுவார். அது ரசிகர்கள் மத்தியில் பிரபலமான வசனமாகும். மேலும் ‘மைக்கேல் மதன காமராஜன்’ உள்ளிட்ட பல கமல் படங்களில் இவர் நடித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நெல்சனின் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவின் தந்தையாக நடித்திருந்தார் ஆர் எஸ் சிவாஜி. மேலும் சாய்பல்லவி நடித்து வெளியான ‘கார்கி’ படத்திலும் நாயகியின் தந்தையாக நடித்திருந்தார்.
நேற்று செப்டம்பர் 1 தேதி வெளியான யோகி பாபுவின் ‘லக்கிமேன்’ என்ற படத்திலும் இவர் நடித்திருந்தார்.
இந்த நிலையில் இவர் இன்று செப்டம்பர் 2ம் தேதி உடல்நல குறைவால் காலமானார்.
ஆர் எஸ் சிவாஜி மறைவுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரின் பதிவில்…
எனது நண்பரும், சிறந்த குணச்சித்திர நடிகருமான ஆர்.எஸ். சிவாஜி மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை கொள்கிறேன். சிறிய கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்கள் மனதில் காலம் கடந்தும் நீடிக்கும்படியான உயிரோட்டத்தை அளிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்.
எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவே பெரிதும் அறியப்பட்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Kamalhassan condolence message for Late Actor RS Sivaji