‘சிட்டிசன்’ படத்தில் அஜித்துக்கு முன்பு நடிக்கவிருந்தவர் இவரா.? அடடா வெறித்தனமா இருந்திருக்குமே.!!

‘சிட்டிசன்’ படத்தில் அஜித்துக்கு முன்பு நடிக்கவிருந்தவர் இவரா.? அடடா வெறித்தனமா இருந்திருக்குமே.!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்தின் ஆரம்ப கால படங்களில் திருப்புமுனை ஏற்படுத்திய படம் ‘சிட்டிசன்’.

இந்த படத்தில் மீனா நாயகியாக நடிக்க சரவண சுப்பையா இயக்கியிருந்தார்.

இந்த படத்திகற்கு ஏபிசிடி உள்ளிட்ட சில படங்களை இயக்கியிருந்தார் சரவணா சுப்பையா. ஆனால் அவை பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

தற்போது பல படங்களில் கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது சமீபத்திய பேட்டியில் ‘சிட்டிசன்’ படம் குறித்து பேசியிருக்கிறார்.

அதில்… “சிட்டிசன் படத்தில் முதலில் கமலை நடிக்க வைக்க அணுகினேன்.. அவர் ‘ஹேராம்’ செய்துக் கொண்டிருந்தார்.

எனவே முதலில் காத்திருக்க சொன்னார். ஒரு கட்டத்தில் அவர் நடிக்கும் முடியாமல் சூழ்நிலை ஏற்படவே அஜித் நடித்தார்.

அதே சமயம் அஜித்தின் மேக்கப்புக்கு பெரிதும் உதவியாக இருந்தார் கமலஹாசன்” என தெரிவித்துள்ளார் சரவண சுப்பையா.

நடிகர் அஜித்தும் தன்னுடைய முழு உழைப்பையும் அந்த படத்தில் கொட்டி இருந்தார்.. ஆனாலும்

ஒருவேளை கமல் நடித்திருந்தால் படத்தின் வெற்றியும் இந்திய அளவில் பேசப்பட்டிருக்கும். மேலும் அனைத்து கதாபாத்திரங்களிலும் கமல் கச்சிதமாக பொருந்தி இருப்பார்.

கமல் நடித்திருந்தால் அபூர்வ சகோதரர்கள், இந்தியன், தசாவதாரம், அவ்வை சண்முகி பட வரிசையில் கண்டிப்பாக ‘சிட்டிசன்’ இணைந்திருக்கும்.

கமல்

Do you know Before Ajith Who will be hero in Citizen

JUST IN அஜித்தை சந்தித்த சிவகார்த்திகேயன.; என்ன நடந்தது.?

JUST IN அஜித்தை சந்தித்த சிவகார்த்திகேயன.; என்ன நடந்தது.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்.

இவரது ‘துணிவு’ படம் விரைவில் வெளியாக உள்ளது. அந்த படத்தின் பணிகளில் பிஸியாக இருக்கிறார் அஜித்.

இந்த நிலையில் நடிகர் அஜித்தை சந்தித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இது தொடர்பான ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இத்துடன்..

“நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித்தை சந்தித்தேன். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. உங்களது பாசிட்டிவான வார்த்தைகளுக்கு நன்றி” என சிவகார்த்திகேயன் தன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Sivakarthikeyan met Ajith Photo goes viral

—-

Met AK sir after long time ❤️ yet another meeting with sir, to cherish for life ?? Thank you for all the positive words and wishes sir ❤️❤️?? https://t.co/yVaYIc3Ca5

‘வாரிசு’ சூட்டிங் விவகாரம்: ரிப்போர்ட்டரை கடத்தி மிரட்டிய டீம்.; ECR சரவணன் தலைமறைவு.; 3 பேர் கைது

‘வாரிசு’ சூட்டிங் விவகாரம்: ரிப்போர்ட்டரை கடத்தி மிரட்டிய டீம்.; ECR சரவணன் தலைமறைவு.; 3 பேர் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு & தெலுங்கு இயக்குனர் வம்சி ஆகியோரது கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘வாரிசு’.

விஜய் ராஷ்மிகா ஜோடியாக இணைந்து நடித்து வரும் இந்த படத்தை அடுத்த ஆண்டு 2023 பொங்கல் தினத்தில் வெளியிட உள்ளனர்.

தற்போது இதன் சூட்டிங் பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் நடந்து வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த செய்தியாளர்கள் அங்கு செய்தி சேகரிப்பதற்காக சென்றுள்ளனர்.

ஆனால் அங்கு செய்தியாளர்களுக்கும் படக்குழுவினருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் உரிய அனுமதியின்றி யானைகளை படப்பிடிப்பில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து கேள்வி எழுப்பியதே தகராறுக்கு வழிவகுத்து உள்ளது.

இதறால் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் செய்தியாளர்கள் மீது வெறித்தனமான தாக்குதல் நடத்தி அவர்களை கடத்தி சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து தாக்குதலை நிறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இத்துடன் செய்தியாளர்களை மீட்டுள்ளனர்.

மேலும் செய்தியாளர்களை தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவுமாக விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி உள்பட 7 பேர் மீது எப் ஐ ஆர் போட்டுள்ளனர். இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

விஜய் மக்கள் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள இசிஆர் சரவணன் என்பவர் இந்த தகவலை அடுத்து தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும் வேட்டையில் போலீசார் இறங்கியுள்ளனர்.

BREAKING விஜய் மீது பாயும் வழக்குகள்.: வனத்துறை & போக்குவரத்து துறை நோட்டீஸ்.; அபராதம் விதிப்பு

BREAKING விஜய் மீது பாயும் வழக்குகள்.: வனத்துறை & போக்குவரத்து துறை நோட்டீஸ்.; அபராதம் விதிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதன் படப்பிடிப்பு சென்னை புறநகர் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இதன் படப்பிடிப்பில் அனுமதி இல்லாமல் சமயபுரம் ஜெயா என்ற யானை கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் யானையை கோயில் பூஜைக்கு கொண்டு செல்வதாக அவர்கள் பொய் சொன்னதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இதனையடுத்து உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்ப வனத்துறை முடிவு.

மேலும்..

கடந்த நவம்பர் 20 ஆம் தேதி பனையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது போக்குவரத்து விதிகளை மீறி நடிகர் விஜய் காரின் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இந்த தகவலையடுத்து நடிகர் விஜய்யின் கார் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அபராதம் அனுப்பப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறியதாக நடிகர் விஜய்க்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாம்.

1 Min Music : பாடகியும் நடிகையுமான சிவாங்கியின் 1 மில்லியன் சாதனை

1 Min Music : பாடகியும் நடிகையுமான சிவாங்கியின் 1 மில்லியன் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்ஸ்டாகிராமின் புதிய ட்ரெண்ட் ‘#1MinMusic’ , ரீல்ஸ் வடிவத்துடன் இசை வீடியோக்களை வெளியிட படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களுடன் இணைந்துள்ளது.

ரீல்ஸ் மற்றும் ஸ்டோரிகளில் பயன்படுத்துவதற்குப் இன்ஸ்டாகிராம் பிரத்தியேகமாக அதன் பிளாட்ஃபார்மில் கிடைக்கும் மியூசிக் டிராக்குகள் மற்றும் வீடியோக்களின் தொகுப்பு #1MinMusic’, இதில் இந்தியா முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தனது ஒரு நிமிட பாடல்களைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டுவருகிறார்கள்.

இன்ஸ்டாகிராம் தமிழுக்காக Silver Tree இணைந்து 25 கலைஞர்களுடன் பணியாற்றுகிறது.

அந்த வரிசையில் பிரபல தமிழ்த் திரைப்பட பின்னணி பாடகர் மற்றும் நடிகை சிவாங்கியினுடைய ‘தீவானா’ என்ற #1MinMusic சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயக்குனர் குமரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த பாடலை அனி வீ இசையமைத்துள்ளார்.

சிவாங்கி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ 1 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து வைராலாகி வருகிறது.

Singer Sivaangis recent viral Deewana song cross 1M views

https://www.instagram.com/reel/ClOSGNOrPOd/?igshid=MTg0ZDhmNDA=

Instagram’s new trend ‘1MinMusic’, teams up with creators and artists to help them reimagine music videos with the Reels format. A collection of music tracks and videos available exclusively on Instagram for use in Reels and Stories, features over 200 artistes across India regularly releasing their one-minute songs. Instagram has partnered with Silvertree for Tamil and Silvertree is working with 25 artists.

Recently, Popular Tamil film Playback singer and Actress Shivangi’s #1MinMusic titled ‘Deewana’ was released and has been well received by fans. This song is directed by Director Kumaran, and composed by Ani Vee. Sivaangi shared her Deewana Song on her Social Media, which has now crossed 1M views.

RRR படம் & ராஜமௌலியின் தீவிர ரசிகன் நான்.; ஹாலிவுட் இயக்குனர் ஓபன் டாக்

RRR படம் & ராஜமௌலியின் தீவிர ரசிகன் நான்.; ஹாலிவுட் இயக்குனர் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்றிரவு, ராஜமௌலி லாஸ் எஞ்செல்ஸ் இல் நடந்த கவர்னர்ஸ் விருது விழாவில் கலந்து கொண்டார்.

உலகம் முழுவதும் அறியப்பட்ட பல திரைப்பட படைப்பாளிகளை சந்தித்தார்.

அவர் ஸ்டார் வார்ஸ், மிஷன் இம்பாசிபிள் குறிப்பிடத்தக்க ஹாலிவுட் திரைப்படங்களின் இயக்குனர் ஜேஜே ஆப்ராம்ஸை சந்தித்தார், அவர் RRR இன் மிகப்பெரிய ரசிகர் என்று ராஜமௌலியிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

RRR உலகளாவிய பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், ஜேஜே ஆப்ராம்ஸ் போன்ற பெரிய ஜாம்பவானிடம் இருந்து பாராட்டை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows