தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சமீபத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையொட்டி நடிகர் விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் சென்னை கோடம்பாக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சமத்துவ பொங்கல் விழாவில் பொதுமக்களுடன் கoலந்துக் கொண்டு நடிகர் விஷால் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் பொதுமக்கள் தங்களுக்கு கடந்த சில நாட்களாக குடிக்க தண்ணீர் கிடைக்கவில்லை மிகவும் சிரமமாக இருக்கிறது என்றும் குடிதண்ணீர் ஏற்பாடு செய்து தந்தால் நன்றாக இருக்கும் என கோரிக்கை வைத்தனர்.
இக்கோரிக்கையை கேட்டுக் கொண்டே நடிகர் விஷால் தனது மேலாளர் ஹரி கிருஷ்ணனிடம் உடனே கோரிக்கைகளை நிறைவேற்றும்படி கூறினார்.
அதன் தொடர்ச்சியாக கோடம்பாக்கத்தில் கோரிக்கை வைத்த மக்களுக்கு குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டு, பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து நடிகர் விஷால் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.
Vishal solved Peoples water issue at Kodambakkam