நடிகர் சங்க கட்டிடத்திற்கு ஒரு கோடி வழங்கிய அமைச்சர் உதயநிதி

நடிகர் சங்க கட்டிடத்திற்கு ஒரு கோடி வழங்கிய அமைச்சர் உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (15.02.24) அவரது முகாம் அலுவலகத்தில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளிடம் நடிகர் சங்க கட்டட பணியைத் தொடர்வதற்காக சங்கத்துக்கு வைப்பு நிதியாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார்.

இந்த நிகழ்வில் நடிகர்கள் நாசர், கார்த்தி, விஷால், கருணாஸ், பூச்சி முருகன் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதனை எடுத்து தனது எக்ஸ் தளத்தில் அமைச்சரும் நடிகருமான உதயநிதிக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஷால் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்…

Dear Udhaya, I sincerely thank u as a friend, producer, actor and now sports minister of Tamil Nadu govt for your contribution to our South Indian artistes association building efforts and your willingness to finish it as early as possible and also coming forward to help in any way through the government also. Indeed a lovely gesture. God Bless. ( Actor Vishal )

Udhayanidhi donated Rs 1crore to Nadigar Sangam new building

‘அஞ்சாம் வேதம்’ அப்டேட் : குடும்பத்தில் நுழையும் மதத்தால் ஏற்படும் குழப்பங்கள்

‘அஞ்சாம் வேதம்’ அப்டேட் : குடும்பத்தில் நுழையும் மதத்தால் ஏற்படும் குழப்பங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் முஜீப் டி முகமது எழுதி இயக்கிய மலையாளத் திரைப்படமான ‘அஞ்சாம் ‘வேதம் பிப்ரவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தை ஹபீப் அபூபக்கர் தயாரித்துள்ளார், அஞ்சாம் வேதத்தின் வசனம் மற்றும் இணை இயக்கம் பினேஷ் ராஜ். சாகர் அய்யப்பன் ஒளிப்பதிவு இயக்குநர்.

அஞ்சம் வேதம் பல வகைமையான திரை அம்சங்கள் அடங்கிய படமாகும்.இது அதன் கதைக்களத்தில் பல்வேறு மர்மமான முடிச்சுகளையும், புதிர்களையும், திருப்பங்களையும் கடந்து செல்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் மலைப்பாங்கான பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

குருசுமலை என்ற கற்பனைக் கிராமத்தில் கதை விரிகிறது.

இந்தப் படம் ஒரு குடும்பத்தில் மதம் நுழைந்து ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி பேசுகிறது. மதம் சார்ந்த சித்தாந்தம் , நம்பிக்கைகள்,அடிப்படைவாதம், வன்முறை போன்றவை குடும்ப வாழ்க்கையில் நுழைந்து அவை ஏற்படுத்தும் விளைவுகள் என்னென்ன என்பதைப் பற்றியும் பேசுகிறது.

அதனால் அந்தக் குடும்பத்தில் குழப்பங்கள், விவாகரத்து, கொலை வரை விரும்பத்தகாதவை பலவும் நிகழ்கின்றன. ஒரு குடும்பத்தில் மதம் நுழைந்து அதன் இயல்பில் ஏற்படுத்தும் எதிர்மறையான விளைவுகளைப் பற்றித் துணிவாக இப்படம் பேசுகிறது.

இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஒரு சஸ்பென்ஸ் மற்றும் சிலிர்ப்பான நிகழ்வுகளின் வழியாகச் செல்லும் ரோலர்கோஸ்டர் காட்சி அனுபவமாக மாறும்.
அஞ்சாம் வேதம் திரைப்படம், சமுதாயத்தில நிலவும் சாதி, மத, அரசியல் சூழலை நகைச்சுவையுடன் தொட்டு நையாண்டி படமாகவும் அமைந்திருக்கிறது.

உடை, மொழி, சித்தாந்தம், வழிபாடு என நாம் வேறுபட்டாலும் சாதி, மதம், அரசியல் நம்பிக்கைகள் அனைத்தையும் தாண்டி மனிதர்கள் ஒருவரையொருவர் நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற செய்தியை இப்படம் உணர்த்துகிறது.

புதுமுகம் விஹான் விஷ்ணு நாயகன். நயன்தாராவின் ‘அறம்’ படத்தின் மூலம் தமிழில் பிரபலமான சுனு லட்சுமி மலையாளத்தில் இப்படம் மூலம் அறிமுகமாகிறார். மாதவி, கேம்பஸ் போன்ற பல படங்களின் மூலம் தமிழில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த சஜித்ராஜ் மற்றொரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கல்லூரி நாட்கள், பிரமுகன் போன்ற சில படங்கள் மூலம் மலையாளிகளுக்கும் அறிமுகமானவர் சஜித்ராஜ்.
தமிழில் இலை மற்றும் சாத்தான் படத்தின் மூலம் இயக்குநராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் அறிமுகமான பினீஷ் ராஜ் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சிறிய பட்ஜெட் படங்களுக்கு விஷுவல் எஃபெக்ட்ஸ் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று என்ற பொதுவான மாயையை மாற்றி எழுதும் சிறப்பும் அஞ்சாம் வேதத்துக்கு உண்டு. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை பல காட்சிகளில் காணப்படும் சில அழகான இடங்கள் முழுக்க முழுக்க VFX மூலம் உருவாக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக இயற்கையை விவரிக்கும் ரஃபிக் அகமதுவின் வரிகளை ஜியா-உல்-ஹக் பாடும் பாடல் காட்சிகள் முழுக்க முழுக்க விஷுவல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருப்பது ஆச்சரியமான உண்மை. 2017 ஆம் ஆண்டு சிறிய பட்ஜெட் தமிழ்த் திரைப்படமான இலையில் தொடக்கம் முதல் இறுதி வரை பிரமாண்டமான VFX காட்சிகளை உருவாக்கி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய பினீஷ் ராஜ் ,இந்தப் பாடலில் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.

மலையாளத்தில் பினீஷ் ராஜின் அறிமுகமானது செயற்கை நுண்ணறிவின் மேம்பட்ட சாத்தியங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கவனம் பெறுகிறது. தமிழில் இரண்டு படங்களுக்குக் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள பினீஷ் ராஜ், அஞ்சாம் வேதம் படத்திற்கு வசனம் எழுதியதோடு, இப்படத்திற்கு இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்த அஞ்சாம் வேதம் விரைவில் தமிழிலும் வெளியாகிறது.

அஞ்சாம் வேதம்

Vihaan Vishnu and Sunu starring Anjaam Vedham

முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் டூயட் பாடும் ருக்மணி

முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் டூயட் பாடும் ருக்மணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகின் அடுத்த பிரம்மாண்டம், இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம். இப்போது படப்பிடிப்பில்..

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் கோலாகலமாகத் துவங்கியுள்ளது.

படக்குழுவினர் மற்றும் திரையுலக விருந்தினர்கள் கலந்து கொள்ள நேற்று பூஜை நடந்த நிலையில், இன்று படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியுள்ளது.

தமிழ் திரையுலகில், பல ப்ளாக்பஸ்டர் படங்களைத் தந்து, பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களுக்கு புதிய இலக்கணம் தந்த இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும், இந்த ஆக்சன் படத்தின் அறிவிப்பே, ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தது.

இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு பணிகள் துவக்கப்பட்ட அதிகாரப்பூர்வ செய்தி, ரசிகர்களுக்குப் பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் வித்தியாசமான களத்தில், தனது முத்திரையுடன் கூடிய பரபரப்பான திரைக்கதையில், இந்திய சினிமாவில் ஒரு புதிய பிரம்மாண்டமாக, புதுமையான களத்தில், அனைவரும் கொண்டாடும் ஆக்சன் கமர்ஷியல் எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கவுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் திரை வாழ்வில், மிகப்பிரம்மாண்டமான படமாக இப்படம் இருக்கும். இதுவரை திரையில் தோன்றிராத மிக வித்தியாசமான ஸ்டைலீஷ் தோற்றத்தில் இப்படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.

சமீபத்தில் தென்னிந்தியா முழுக்க, இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட, கன்னட நடிகை ருக்மணி வஸந்த் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவீஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில், பிரம்மாண்ட படைப்பாக, இப்படத்தைத் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சுதீப் எலமான் ஒளிப்பதிவு செய்கிறார். ஶ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளைக் கவனிக்க, அருண் வெஞ்சரமுது கலை இயக்கம் செய்கிறார். சண்டைக்காட்சிகளை மாஸ்டர் திலீப் சுப்புராயன் வடிவமைக்கவுள்ளார்.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கிப் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் முழு விவரங்கள் ஒவ்வொன்றாக, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

Murugadoss Sivakarthikeyan Anirudh combo shoot kick started

காதலர் தினத்தில் ‘ராமம் ராகவம்’ சிறப்பு.; நல்ல கதைக்காக இயக்குனராக மாறிய நடிகர் தன்ராஜ்

காதலர் தினத்தில் ‘ராமம் ராகவம்’ சிறப்பு.; நல்ல கதைக்காக இயக்குனராக மாறிய நடிகர் தன்ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமுத்திரக்கனி நடிப்பில் தமிழ் – தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் படம் ‘ராமம் ராகவம்’

ப்ருத்வி போலவரபு தயாரிப்பில் இப்படத்தை ஸ்லேட் பென்சில் ஸ்டோரிஸ் கீழ் பிரபாகர் ஆரிபாகா வழங்குகிறார்.

தெலுங்கு திரையுலகில் நடிகராக இருக்கும் தன்ராஜ் இந்த படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார்.

இந்தப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி, தன்ராஜ், ஹரீஸ் உத்தமன், சுனில் நடிக்கிறார்கள்.

காதலர் தினத்தையொட்டி, ராமம் ராகவம் படத்தின் முதல் காட்சியை சமூக வலைதளங்கள் வழியாக தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி வெளியிட்டு படம் வெற்றி பெற வாழ்த்தினார்.

மேலும், இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு பேசுகையில்..

தன்ராஜ் ஒரு நல்ல கதையை திரைப்படமாக்கியுள்ளார் . அவர் பிஸியான நடிகராக இருந்தும் இயக்குனராக தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் உள்ள உணர்ச்சிகரமான பயணத்தை விவரிக்கும் இந்தப் படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன். என்று வாழ்த்தினார்.

ராமம் ராகவம் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், அமலாபுரம், ராஜமுந்திரி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது.

‘ராமம் ராகவம்’ தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.

Ramam Raghavam

நடிகர்கள்-

சமுத்திரக்கனி, தன்ராஜ் கோரனானி, ஹரிஷ் உத்தமன், சுனில், சத்யா, மோக்ஷா சென்குப்தா, பிரமோதினி, ஸ்ரீனிவாஸ் ரெட்டி, ப்ருத்விராஜ், ராக்கெட் ராகவா, ரச்சா ரவி, இந்தூரி வாசு மற்றும் பலர்.

திரைக்கதை & இயக்கம் – தன்ராஜ் கோரனானி,

தயாரிப்பாளர்: ப்ருத்வி போலவரபு

வழங்குபவர்: பிரபாகர் ஆரிபகா

கதை- சிவபிரசாத் யானலா,

வசனம் – மாலி
இசை – அருண் சிலுவேரு

DOP – துர்கா பிரசாத் கொல்லி,
எடிட்டர்- மார்த்தாண்டன் கே வெங்கடேஷ்,

கலை- டெளலூரி நாராயணன்

பாடல்கள்- ராமஜோகய்யா சாஸ்திரி

Ramam Raghavam – Movie Glimpse

First Glimpse of Ramam Raghavam goes viral

காதலர் தின சர்ச்சை போஸ்டர் : மகிழ்ச்சியாக வாழ கணவன்-மனைவி மது அருந்துங்கள்.

காதலர் தின சர்ச்சை போஸ்டர் : மகிழ்ச்சியாக வாழ கணவன்-மனைவி மது அருந்துங்கள்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜு சந்திரா எழுதி இயக்கியிருக்கும் “பிறந்தநாள் வாழ்த்துகள்” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தை பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், ரோஜி மேத்யூ, ராஜு சந்திரா இருவரும் தயாரிக்க,
மாதன்ஸ் குழுமம் இணைந்து தயாரித்துள்ளது.

மலையாள நடிகை ஐஸ்வர்யா அனில், இப்படத்தின் மூலம் தமிழில் கதையின் நாயகியாக அறிமுகம் ஆகிறார். ஸ்ரீஜா ரவி மற்றும் ரோஜா மேத்யூ முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மலையாளத்தில் விமர்சன ரீதியாகப் பலரின் பாராட்டுகளை பெற்ற ‘ஜிம்மி இ வீட்டின்ட ஐஸ்வர்யம்’, ‘ஐ ஆம் ஏ பாதர்’ என இரண்டு மலையாள படங்களை இயக்கிய ராஜு சந்திரா, தனது மூன்றாவது படமாக தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார்!

கிராமத்து எதார்த்தத்தை, காதலுடன் காமெடி கலந்து, ஜனரஞ்சகமாக கதை எழுதி, ஒளிப்பதிவு செய்து, இயக்கியுள்ளார் ராஜூ சந்திரா. இசையை நவநீத் அமைக்க, கலையை வினோத் குமார் கையாண்டுள்ளார்.

விரைவில் திரைக்கு வர, தயாராகி வருகிறது “பிறந்தநாள் வாழ்த்துகள்”!

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கணவன் மனைவி இருவரும் தங்கள் வீட்டின் முன்பு இருந்து மது அருந்துவது போல புகைப்படம் உள்ளது.. அதன் கீழே ‘மகிழ்ச்சியாக வாழ..’ என்ற வாசகம் இடம் பெற்று இருக்கிறது.. இது பல சர்ச்சைகளை உருவாக்கும் என எதிர்பார்க்கலாம்.

பிறந்தநாள் வாழ்த்துகள்

Appukutty new movie title Pirandhanaal Vazhuthukal

மலையாள சினிமாவில் என்ட்ரி.; சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் அர்ஜுன் தாஸ்

மலையாள சினிமாவில் என்ட்ரி.; சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் அர்ஜுன் தாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அர்ஜுன் தாஸ், இயக்குநர் அகமது கபீர் இயக்கும் புதிய திரைப்படம் மூலமாக, மலையாள சினிமாவில் நாயகனாக களமிறங்குகிறார்.

அகமது கபீரின் ‘ஜூன்’, ‘மதுரம்’ மற்றும் ‘கேரளா க்ரைம் ஃபைல்ஸ் வெப் சீரிஸ்’ என, அனைத்து படைப்புகளும் பெரும் வெற்றியைக் குவித்துள்ள நிலையில், இந்த புதிய கூட்டணி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘ஹிருதயம்’, குஷி, & ஹாய் நானா ஆகிய படங்களில் மாயாஜால இசைக்கு சொந்தக்காரரான ஹேஷாம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

காதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகவுள்ளது. படத்தில் பணியாற்றவுள்ள நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. அற்புதமான இந்த கூட்டணியின் அடுத்தகட்ட தகவல்கள் பற்றி அறியக் காத்திருங்கள்.

அர்ஜுன் தாஸ்

Aarjundas is all set to make his Entry in Malayalam cinema

More Articles
Follows