MEGA BREAKING ரஜினி கட்சி கன்பார்ம்..; மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்.. அதிசயம் அற்புதம் நிகழும் என அதிரடி அறிவிப்பு

MEGA BREAKING ரஜினி கட்சி கன்பார்ம்..; மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்.. அதிசயம் அற்புதம் நிகழும் என அதிரடி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthகொரோனா ஊரடங்காலும் தன் உடல் நிலையாலும் தன் அரசியல் கட்சி அறிவிப்பை தாமதப்படுத்தி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

ஆனால் அவர் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என சிலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நவம்பர் 30ந் தேதி ஆலோசனை நடத்தினார் ரஜினிகாந்த்.

அதன்பின்னர் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினிகாந்த்.

அப்போது அவர் பேசியதாவது…

“அரசியல் கட்சி தொடங்குவது குறித்து மாவட்ட நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். நான் எடுக்கும் எந்த முடிவுக்கு அவர்கள் கட்டுப்படுவதாக தெரிவித்தனர்.

அரசியல்வாதிகளின் உதவி கேட்டு சென்னை வந்த மாற்றுத் திறனாளி பெண்..; நிதியுதவி அளித்த சூப்பர் ஸ்டார்

அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு விரையில் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விரைவில் அறிவிப்பேன்” என ரஜினி பேசினார்.

இந்த நிலையில் இன்று டிசம்பர் 3ஆம் தேதி தன் அரசியல் பிரவேசத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவரது ட்விட்டரில்…

* தமிழகத்தில் நேர்மையான, ஊழலற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம் – ரஜினி

Rajinikanth RARE PHOTOS

* மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல – ரஜினிகாந்த்

* அற்புதம்.. அதிசயம்.. நிகழும் – ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவு

ஜனவரியில் கட்சித் துவக்கம்,
டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.
#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்
#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல https://t.co/9tqdnIJEml

Super Star Rajinikanth’s official statement on his political entry

என் உயிர் தோழா… விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் பாடி நடித்த புரட்சி பாடல்

என் உயிர் தோழா… விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் பாடி நடித்த புரட்சி பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

En Uyir Thozhaகேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன் முதல் முறையாக இளைஞர்களுக்காக, பாடி நடித்துள்ள புரட்சி பாடலின் FIRST LOOK போஸ்டரை இன்று தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இளைஞர்களின் எழுச்சிக்காக முதன்முறையாக தனிஇசைப்பாடல் (Independent Music) ஒன்றை பாடி நடித்துள்ளார் விஜய பிரபாகரன்

இந்தப் பாடலுக்கு ஜெஃப்ரி இசையமைத்துள்ளார்.

இப்பாடலைப் பற்றி விஜய பிரபாகரன் கூறுகையில்..

தமிழை என்னுயிர் என்பேன் நான்…
தமிழ் இளைஞர்கள் எல்லோரும் என் உயிர் தோழர்கள் ஆவார்கள் என்றவர்,

இந்த பாடல் முழுக்க முழுக்க இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தப் பாடலின் First Look ஐ கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijayakanth released En Uyir Thoazha first look

விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் ரிலீசுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த மினிஸ்டர்

விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் ரிலீசுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த மினிஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Master Vijayபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.

முரளி தலைமையிலான நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு சான்றிதழ் அளித்து வாழ்த்தினார்.

அப்போது அமைச்சரிடம் உள்ளாட்சி வரியை ரத்து செய்வது, திரையரங்குகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, சிறிய படங்களுக்கு பிரத்யேக காட்சிகளை ஒதுக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை புதிய நிர்வாகிகள் முன்வைத்தனர்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு…

தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக பின்பற்றினால் டிசம்பர் மாதமே கொரோனா தமிழகத்தை விட்டு விடும்

‘மாஸ்டர்’ படம் வெளியாக வேண்டும் என்பதற்காக திரையரங்குக்கு வரும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கேட்டிருக்கிறீர்கள்.

ஆனால் ‘மாஸ்டர்’ படம் வெளிவருவதற்கு முன்பே கொரோனா இல்லாமல் போகும் என அமைச்சர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

TN minister Kadambur Raju talks about Vijay’s Master release

காலா படத்தை அடுத்து ரஞ்சித் இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ஆர்யா

காலா படத்தை அடுத்து ரஞ்சித் இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த திரைப்படத்திற்கு “சார்பட்டா பரம்பரை” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். “K9 Studios” மற்றும் “நீலம் புரடொக்‌ஷன்ஸ்” இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்.

இந்த திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடலமைப்பை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார்.

அவர் மட்டுமல்லாமல், அவரோடு நடித்திருக்கும் நடிகர்கள் ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர் ஆகியோரும் இப்படத்திற்காக கட்டுமஸ்த்தான உடற்கட்டோடு நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகியாக துஷாரா அறிமுகமாகிறார். நடிகர் பசுபதி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இவர்களோடு ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

முரளி ஒளிப்பதிவு மேற்கொண்டிருக்கிறார். கலை இயக்குநர் த.ராமலிங்கம் இப்படத்திற்காக பிரம்மாண்டமான செட்டுகளை அமைத்திருக்கிறார்.

செல்வா ஆர்.கே எடிட்டிங் செய்திருக்கிறார். இயக்குநர் பா.இரஞ்சித்துடன் இணைந்து இப்படத்தின் திரைகதை, வசனத்தை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் தமிழ்ப்பிரபா.

படத்தின் முக்கிய பலமே சண்டைக்காட்சிகள் தான் என்பதால் தேசிய விருது பெற்ற இரட்டையர்கள் அன்பறிவ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள்.

படப்படிப்பு ஆரம்பித்த நாளிலிருந்தே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இத்திரைப்படத்தின் First Look வெளியாகி சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இறுதிகட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வரும் வேளையில், மார்ச் இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.

Arya – Pa Ranjith new film first look poster is out

Sarpatta Parambarai first look poster (2)

அரசியல்வாதிகளின் உதவி கேட்டு சென்னை வந்த மாற்றுத் திறனாளி பெண்..; நிதியுதவி அளித்த சூப்பர் ஸ்டார்

அரசியல்வாதிகளின் உதவி கேட்டு சென்னை வந்த மாற்றுத் திறனாளி பெண்..; நிதியுதவி அளித்த சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthதிருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் கெளரி ராமையா. இவர் ஒரு மாற்றுத்திறனாளி.

இவர் தன் குழந்தையின் கல்வி செலவுக்காக உதவி கேட்டுள்ளார்.

இவரின் மகன் 11வது வகுப்பு & மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

பள்ளிகள் திறக்காமல் இருப்பதால் ஆன்லைன் கிளாஸ் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

ஆனால் செல்போன் வாங்குவதற்கு கையில் பணம் இல்லை.

மேலும் இவரது கணவருக்கு ஆஸ்துமா நோய். அவருக்கு மருந்து வாங்க முடியாத ஒரு அவல நிலையில் இருக்கிறார்.

ரஜினி முடிவு என்ன? அரசியலுக்கு வருவாரா?.. போயஸ் கார்டன் இல்லத்தில் தமிழருவி மணியன் பேட்டி

இதனால் சென்னைக்கு வந்து அரசியல் தலைவர்களை சந்தித்து உதவி பெற வந்துள்ளார்.

குறிப்பாக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து உதவி கேட்க நினைத்துள்ளார்.

இதனையறிந்த ரஜினி தனது உதவியாளர் மூலம் அவருக்கு நிதியுதவி அளித்துள்ளார்.

மேலும் குடும்ப விவரங்களை பெற்றுக்கொண்டு அவர்களின் பிள்ளைகளுக்கும் உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளாராம்.

Rajinikanth helped differently-abled women and her family

ரஜினி முடிவு என்ன? அரசியலுக்கு வருவாரா?.. போயஸ் கார்டன் இல்லத்தில் தமிழருவி மணியன் பேட்டி

ரஜினி முடிவு என்ன? அரசியலுக்கு வருவாரா?.. போயஸ் கார்டன் இல்லத்தில் தமிழருவி மணியன் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamilaruvi manian rajinikanthகொரோனா ஊரடங்காலும் தன் உடல் நிலையாலும் தன் அரசியல் கட்சி அறிவிப்பை தாமதப்படுத்தி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

ஆனால் அவர் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என சிலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நவம்பர் 30ந் தேதி ஆலோசனை நடத்தினார் ரஜினிகாந்த்.

அதன்பின்னர் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினிகாந்த்.

அப்போது அவர் பேசியதாவது…

“அரசியல் கட்சி தொடங்குவது குறித்து மாவட்ட நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். நான் எடுக்கும் எந்த முடிவுக்கு அவர்கள் கட்டுப்படுவதாக தெரிவித்தனர்.

அரசியல்வாதிகளின் உதவி கேட்டு சென்னை வந்த மாற்றுத் திறனாளி பெண்..; நிதியுதவி அளித்த சூப்பர் ஸ்டார்

அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு விரையில் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விரைவில் அறிவிப்பேன்” என ரஜினி பேசினார்.

இந்த நிலையில் இன்று டிசம்பர் 2ஆம் தேதி ரஜினியை காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் சந்தித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசியதாவது…

“தமிழ்நாட்டு மக்களிடம் எதையும் மறைத்து வாழ வேண்டிய அவசியம் நடிகர் ரஜினிகாந்திற்கு எள் அளவும் இல்லை.

அவர் அரசியலுக்கு வருவாரா? என அவருக்குதான் தெரியும்.. உடல் நலத்துக்கு ஊறு இல்லாத வகையில் உங்களுடைய அரசியல் முடிவை அமைத்துக் கொள்ளுங்கள் என ரஜினியிடம் கேட்டுக் கொண்டேன்..”

இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார்.

Tamilaruvi Manian meets Rajinikanth at his house

More Articles
Follows