தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை திரிஷா. இவர் 40 வயதை நெருங்கினாலும் தற்போதும் தமிழ் தெலுங்கு படங்களில் முன்னணி ஹீரோயினாக கருதப்படுகிறார்.
காரணம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கும் த்ரிஷாவின் அழகும் திறமையும் தான்.
‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் சரி பட பிரமோஷனலும் சரி ஐஸ்வர்யா ராயை விட த்ரிஷா அழகாக காணப்பட்டார் என நாடெங்கிலும் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன.
சமீபத்தில் த்ரிஷா நடிப்பில் ‘லியோ’ மற்றும் ‘தி ரோடு’ ஆகிய படங்கள் வெளியானது.
இந்த நிலையில் அடுத்த வருடம் அஜித்துடன் விடாமுயற்சி, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் ஒரு படம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் & கதையின் நாயகியாக த்ரிஷா 2 படங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே அஜித்துடன் ஜி, கிரீடம், கமலுடன் மன்மதன் அம்பு, ரஜினியுடன் பேட்ட ஆகிய படங்களில் த்ரிஷா நடித்திருக்கிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
ஆக.. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு த்ரிஷாவின் கால்ஷீட் புக்கிங் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Actress Trisha movies line ups updates