ரஜினி முடிவு என்ன? அரசியலுக்கு வருவாரா?.. போயஸ் கார்டன் இல்லத்தில் தமிழருவி மணியன் பேட்டி

Tamilaruvi manian rajinikanthகொரோனா ஊரடங்காலும் தன் உடல் நிலையாலும் தன் அரசியல் கட்சி அறிவிப்பை தாமதப்படுத்தி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

ஆனால் அவர் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என சிலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நவம்பர் 30ந் தேதி ஆலோசனை நடத்தினார் ரஜினிகாந்த்.

அதன்பின்னர் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினிகாந்த்.

அப்போது அவர் பேசியதாவது…

“அரசியல் கட்சி தொடங்குவது குறித்து மாவட்ட நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். நான் எடுக்கும் எந்த முடிவுக்கு அவர்கள் கட்டுப்படுவதாக தெரிவித்தனர்.

அரசியல்வாதிகளின் உதவி கேட்டு சென்னை வந்த மாற்றுத் திறனாளி பெண்..; நிதியுதவி அளித்த சூப்பர் ஸ்டார்

அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு விரையில் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விரைவில் அறிவிப்பேன்” என ரஜினி பேசினார்.

இந்த நிலையில் இன்று டிசம்பர் 2ஆம் தேதி ரஜினியை காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் சந்தித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசியதாவது…

“தமிழ்நாட்டு மக்களிடம் எதையும் மறைத்து வாழ வேண்டிய அவசியம் நடிகர் ரஜினிகாந்திற்கு எள் அளவும் இல்லை.

அவர் அரசியலுக்கு வருவாரா? என அவருக்குதான் தெரியும்.. உடல் நலத்துக்கு ஊறு இல்லாத வகையில் உங்களுடைய அரசியல் முடிவை அமைத்துக் கொள்ளுங்கள் என ரஜினியிடம் கேட்டுக் கொண்டேன்..”

இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார்.

Tamilaruvi Manian meets Rajinikanth at his house

Overall Rating : Not available

Latest Post