அரசியல்வாதிகளின் உதவி கேட்டு சென்னை வந்த மாற்றுத் திறனாளி பெண்..; நிதியுதவி அளித்த சூப்பர் ஸ்டார்

Rajinikanthதிருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் கெளரி ராமையா. இவர் ஒரு மாற்றுத்திறனாளி.

இவர் தன் குழந்தையின் கல்வி செலவுக்காக உதவி கேட்டுள்ளார்.

இவரின் மகன் 11வது வகுப்பு & மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

பள்ளிகள் திறக்காமல் இருப்பதால் ஆன்லைன் கிளாஸ் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

ஆனால் செல்போன் வாங்குவதற்கு கையில் பணம் இல்லை.

மேலும் இவரது கணவருக்கு ஆஸ்துமா நோய். அவருக்கு மருந்து வாங்க முடியாத ஒரு அவல நிலையில் இருக்கிறார்.

ரஜினி முடிவு என்ன? அரசியலுக்கு வருவாரா?.. போயஸ் கார்டன் இல்லத்தில் தமிழருவி மணியன் பேட்டி

இதனால் சென்னைக்கு வந்து அரசியல் தலைவர்களை சந்தித்து உதவி பெற வந்துள்ளார்.

குறிப்பாக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து உதவி கேட்க நினைத்துள்ளார்.

இதனையறிந்த ரஜினி தனது உதவியாளர் மூலம் அவருக்கு நிதியுதவி அளித்துள்ளார்.

மேலும் குடும்ப விவரங்களை பெற்றுக்கொண்டு அவர்களின் பிள்ளைகளுக்கும் உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளாராம்.

Rajinikanth helped differently-abled women and her family

Overall Rating : Not available

Latest Post