அரசியல் அம்புட்டுதான்..; 2 இளம் இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் ‘அண்ணாத்த’

அரசியல் அம்புட்டுதான்..; 2 இளம் இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் ‘அண்ணாத்த’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2020 டிசம்பர் 29ஆம் தேதி தன் அரசியல் வருகைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்.

ரசிகர்களுக்கு அரசியல் ஆசை காட்டி அம்போ என ஆற்றில் தவிக்க விட்டு சென்றார்.

அந்த அரசியல் அறிக்கைக்கு பிறகு வெளியில் வராமல் தன் வீட்டிலேயே மறைந்து ஒளிந்து கிடந்தார் ரஜினிகாந்த்.

தன் மருமகனும் நடிகருமான தனுஷின் புது மனை பூஜையில் கலந்து கொண்டார்.

பிறகு இளையராஜாவின் புது ஸ்டூடியோவுக்கு வருகை வந்தார்.

இந்நிலையில் வரும் 8ந்தேதி ‘அண்ணாத்த’ பட படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்ளவிருக்கிறாராம் ரஜினி.

மார்ச் இறுதிவரை கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னை திரும்பும் ரஜினி சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பார்.

களத்திற்கு வராமலேயே அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டதால் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டுகிறாராம்.

2 இளம் இயக்குனர்களின் கதைகளுக்கு சம்மதம் சொல்லி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

தேர்தலுக்கு பிறகோ அல்லது முன்போ அந்த படங்களின் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Super Star Rajinikanth wish to act more films

தாஜ் நூர் இசைக்கு டூயட் பாடும் ஸ்ரீகாந்த் – ஸ்ருஷ்டி டாங்கே

தாஜ் நூர் இசைக்கு டூயட் பாடும் ஸ்ரீகாந்த் – ஸ்ருஷ்டி டாங்கே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீநிதி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி. விஜயகுமார் தயாரிக்கும் புதிய படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜே பப்பு, தேவி பிரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

மணி பாரதி இயக்கும் இப்படத்திற்கு கோகுல் ஒளிப்பதிவை கவனிக்கிறார் மற்றும் தாஜ் நூர் இசையமைக்கிறார்.

இதைத் தொடர்ந்து எடிட்டிங் பணிகளை அகமது மேற்கொள்கிறார்.

இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டு தற்போது ஊட்டியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சஸ்பென்ஸ் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்ட மற்ற விவரங்களை படக்குழுவினர் விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.

Srikanth and Srushti Dange joins for a new film

JUST IN அரசியலை விட்டு விலகும் ஜெயலலிதா தோழி சசிகலா..; ஓ… அடுத்த ரஜினியா.?

JUST IN அரசியலை விட்டு விலகும் ஜெயலலிதா தோழி சசிகலா..; ஓ… அடுத்த ரஜினியா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா.

இவர் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார்.

தண்டனைக் காலம் முடிந்து, தமிழகம் திரும்பிய அவர் தீவிர அரசியலில் ஈடுப்படுவார் என எதிர்பார்த்தனர்.

மேலும் அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துவிடுவார் எனவும் எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் சென்னை வந்த பிறகு செய்தியாளர்களையும் சந்திக்கவில்லை.

ஆனால் தற்போது, அரசியலில் இருந்து விலகி இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

“நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சி தலைவியின் எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் புரட்சி தலைவர் (எம்ஜிஆர்) மற்றும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் (ஜெயலலிதா) பொற்கால ஆட்சி தொடர, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.

நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று அம்மா நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் உண்மை தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.

அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன்.

நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை.

புரட்சி தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.

நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன்.

இவ்வாறு சசிகலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

*தமிழக அரசியலில் கடந்த 25 வருடங்களாகவே பேசப்பட்ட பெயர்களில் முக்கியமான பெயர்கள் ரஜினிகாந்த் & சசிகலா.

இவர்கள் இருவரும் நேரடி அரசியலில் ஈடுப்படவில்லை. எந்த ஒரு கட்சியிலும் பொறுப்பிலும் இல்லை. (சசிகலாவுக்கு டிடிவி தினகரனின் அமமுக -வில் பதவி தரப்பட்டது. அது சிறையிலேயே சென்றது எனலாம்.)

ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் இவர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.

ஜெ-வுக்கு பின்னால் இருந்துக் கொண்டே மறைமுகமாக அனைத்து அமைச்சர்களையும் எம்எல்ஏ-க்களையும்.. ஏன் அரசாங்கத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார் சசிகலா.

ஜெ. மறைவுக்கு பின்னர் அதிமுக-வுக்கு சில நாட்கள் தலைமை தாங்கினார் சசிகலா. சில நாட்களில் சசி தமிழக முதல்வர் ஆவார் என எதிர்ப்பார்த்த நிலையில் தான் சிறை தண்டணை பெற்றார்.

அதுபோல… ரஜினியின் வாய்ஸ்க்கு என்று எப்போதுமே தனி மதிப்பு தமிழக தேர்தலில் இருக்கும். 1996ல் ஜெ. அரசு வீழ்த்தப்படுவதற்கு முக்கியமான காரணமே ரஜினி தான்.

அது போல தா ம க.வின் தலைவரே ரஜினி என அப்போது மூப்பனாரே சொல்லியிருந்தார்.

2018 முதல் தன் அரசியல் பிரவேசத்தையும் தான் ஆட்சிக்கு வந்தால் எம்ஜிஆர் ஆட்சியை கொடுப்பேன் என்றும் மேடைகளில் பேசினார் ரஜினி.

ஆனால் 2020 டிசம்பர் 29ல் அரசியலுக்கு வர மாட்டேன். புதிய கட்சி தொடங்க மாட்டேன் என அறிவித்தார்.

ரஜினிகாந்த் மற்றும் சசிகலா இருவருமே நேரடி அரசியலுக்கு வராமல் அரசியலை விட்டு விலகுகிறேன் என அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ex CM Jayalalithaa aide Sasikala quits from TN politics

தியேட்டர் & ஓடிடி ரிலீஸ்..: 50வது நாளாக மரண மாஸ் காட்டும் ‘மாஸ்டர்’

தியேட்டர் & ஓடிடி ரிலீஸ்..: 50வது நாளாக மரண மாஸ் காட்டும் ‘மாஸ்டர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கால் 10 மாதங்களாக மூடப்பட்ட சினிமா தியேட்டர்கள் தீபாவளியை முன்னிட்டு 2020 நவம்பர் 10ம் தேதி 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கப்பட்டது.

தியேட்டர்கள் திறந்தாலும் கூட்டமே வராமல் இருந்தது.

அப்போதே லோகேஷ் இயக்கத்தில் விஜய் & விஜய்சேதுபதி நடித்த ‘மாஸ்டர்’ பட தியேட்டர் ரிலீசுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானது.

2021 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி படம் வெளியானது.

50 % இருக்கை அனுமதியுடன் முதல் நாள் முதல் காட்சியிலிருந்த வசூல் வேட்டையாடினார் மாஸ்டர்.

உலகளவில் ரூ 250 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்தன.

இந்த படம் வெளியான 16 நாட்களில் ஜனவரி 29ம் தேதி ஓடிடியிலும் (அமேசான்) வெளியானது.

எனவே தியேட்டர்களுக்கு மக்கள் வர மாட்டார்கள் என்றனர். ஆனாலும் தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகள் ஓடின.

தற்போது ‘மாஸ்டர்’ படம் இன்று வெற்றிகரமாக 50வது நாளை கடந்துள்ளது.

எனவே விஜய் & விஜய்சேதுபதி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் 50வது நாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர்.

Vijay’s master completes 50 days in theatres

ரஜினியுடன் கொள்கை உருவாக்கத்தில் 3 ஆண்டுகள்..; கமல் கட்சியில் இணைந்தார் அப்துல் கலாமின் ஆலோசகர்

ரஜினியுடன் கொள்கை உருவாக்கத்தில் 3 ஆண்டுகள்..; கமல் கட்சியில் இணைந்தார் அப்துல் கலாமின் ஆலோசகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ponraj (2)மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் இன்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார்.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் இன்று வெளியிட்ட செய்தியில்…

” மக்கள் நீதி மய்யத்திற்கு இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமான பொன்ராஜ் அவர்களைப் பெருமிதத்துடனும் பெருமகிழ்ச்சியுடனும் வரவேற்கிறேன்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக அவரை நியமனம் செய்கிறேன்.

2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பெருவெற்றிப் பெறச் செய்ய இக்கணம் முதல் அவர் தீவிரமாக செயலாற்றுவார்” என தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பொன்ராஜ்…

“அப்துல் கலாமின் கனவுகளை யார் நினைவாக்க முயல்கிறார்களோ அவர்களோடு கைகோர்த்து பயணிப்பேன் என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டே வருகிறேன்.

நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடன் கொள்கை உருவாக்கத்தில் மூன்று ஆண்டுகள் போய்விட்டன.

இந்த சூழலில் எனக்கு கமல்ஹாசன் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

அதனை ஏற்றுக் கொண்டு இந்தக் கட்சியில் இணைந்துள்ளேன்.

கமல் ஹாசனோடு இணைந்து சீரழிந்து கிடக்கும் தமிழகத்தை முன்னேற்ற முயற்சிப்போம்.” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Former President APJ Abdul Kalam aide Ponraj joins Kamal’s MNM

நடிகை ஹன்ஷிகாவின் அடுத்த ஆல்பம் ‘Mazaa’…; வைரலாகும் வீடியோ.!

நடிகை ஹன்ஷிகாவின் அடுத்த ஆல்பம் ‘Mazaa’…; வைரலாகும் வீடியோ.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hansikaநடிகை ஹன்ஷிகா மோத்வானியின் முதல் இந்தி ஆல்பமாக வெளியான “Booty shake” பெரும் ஹிட்டடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்ற நிலையில், சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவது ஆல்பமான “Mazaa” பாடலும், பல சாதனைகளை படைத்து வருகிறது.

வெளியான முன்றே தினங்களில் Youtube தளத்தில் 20 மில்லியன் பார்வைகளை குவித்து, இந்திய அளவிலான பாடல்களில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

அவரது முந்தைய இந்தி பாடலான “Booty shake” பாடலும் 20 மில்லியன் பார்வைகளை குவித்தது குறிப்பிடதக்கது.

இந்திய இசை உலகில் பெரும் ஆளுமையாக கோலோச்சும் B.பிராக் “Mazaa” பாடலை இசையமைத்து உருவாக்கி பாடியுள்ளார்.

இப்பாடலில் காதலின் பரிணாமங்களை, தனது அற்புத வரிகளால் தந்துள்ளார் ஜானி.

இப்பாடல் ரசிகர்களை உணர்வூர்வமாக பெருமளவில் பாதித்துள்ளது சமூக வலைதளம் மற்றும் Youtube தளங்களில் வரும் கருத்துக்களில் அப்பட்டமாக தெரிகிறது.

அர்விந்தர் கைய்ராவுடைய ( arvindr Khaira ) அற்புத கற்பனையில், தரமான இயக்கத்தில், பாடல் அனைவர் மனதையும் கொள்ளை கொண்டுள்ளது.

பாடலில் நடிகை ஹன்ஷிகா மோத்வானியின் புதுவிதமான தோற்றம், அவரது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து, பாராட்டுக்களை குவித்துள்ளது.

Hansika’s Mazaa album goes viral

More Articles
Follows