தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த.
இந்த படத்தை இந்தாண்டு 2020 தீபாவளிக்கு வெளியிடவிருந்தனர். ஆனால் கொரோனா ஊரடங்கால் இப்பட சூட்டிங் கடந்த மார்ச் மாதமே நிறுத்தப்பட்டது.
இதனால் இன்னும் இப்பட சூட்டிங் ஆரம்பிக்கப்படவில்லை. அக்டோபர் 10ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் என கூறப்பட்டது.
ரஜினியும் சாலை மார்க்கமாக ஹைதராபாத் சென்று சூட்டிங்கில் கலந்துக் கொள்வார் என தகவல்கள் வந்தன.
ஆனால் சினிமா சூட்டிங் ஆரம்பமானால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு இருக்கலாம் என்றும் எஸ்பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு ஏற்பட்ட நிலை குறித்தும் ரஜினிக்கு அவரின் நலம் விரும்பிகள் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கொரோனா தொற்று அச்சம் முற்றிலும் ஓய்ந்தபின்னே தான் சூட்டிங் கலந்துக் கொள்ளவுள்ளதாக தெரிவித்துவிட்டராம் ரஜினி.
எனவே அண்ணாத்த சூட்டிங்கை தற்சமயம் ஒத்தி வைக்கிறார்களாம்.
வருகிற டிசம்பர் அல்லது ஜனவரியில் தொடங்கி 2021 ஏப்ரல் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறார்களாம்.
இதனிடையில் தன் தன் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டு மாநாடு நடத்தி வெளியிடவிருந்தாராம் ரஜினிகாந்த்.
அதற்கும் சூழ்நிலை ஒத்து வரவில்லையாம்.
கொரோனா பிரச்சினை முற்றிலும் அகன்றால் மட்டுமே மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள். எனவே அதுவரை காத்திருக்க முடிவு செய்துவிட்டாராம் ரஜினி.
2021 மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 2021 பிப்ரவரியில் கட்சி அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
அதுவரை கட்சிக்கான அனைத்து பணிகளை முடுக்கிவிட்டு போர்க்களத்துக்கு தயராகவிருக்கிறாராம் தலைவர் ரஜினிகாந்த்.
Super Star Rajinikanth to take longer time in resuming ‘Annaatthe’ shoot