தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் நவம்பர் 29ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இப்படத்தை முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளனர்.
இந்நிலையில் இதன் டிரைலரை நவம்பர் 3ஆம் தேதி தீபாவளிக்கு முன்பே வெளியிட உள்ளனர். இதன் அதிகார்ப்பூர்வ போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் 2.0 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
4டி டிஜிட்டல் சவுண்டில் உருவாகியிருக்கும் இதன் ஒலியமைப்பை ரசிகர்கள் உணர வேண்டும் என்பதற்காக சத்யம் திரையரங்கில் 4டி டிஜிட்டல் ஒளியமைப்புக்கான கருவிகள் பொருத்தப்பட்டு வருகிறதாம்.
இது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
Special arrangement at Chennai Sathyam cinemas for 2point0 trailer launch