தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘மிக்ஜாம்’ புயல் டிசம்பர் 4ஆம் தேதி நள்ளிரவு சென்னையை கடப்பதற்கு முன்பு பகலில் சென்னையில் பேய் மழை கொட்டிக் கொண்டிருந்தது.
தற்போது வரை சென்னை பெரு வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருக்கிறது. பல ஏரியாக்களில் கழுத்தளவு நீரில் மக்கள் தங்கள் உயிரை காப்பாற்ற நடந்து சென்று கொண்டிருக்கின்றனர்.
மேடு ஏது.? பள்ளம் ஏது.? தெரியாமல் வாகன ஓட்டிகள் அவஸ்தைப்பட்டு வருகின்றனர்.
தொலைபேசி அழைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னை கரண்ட் இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடக்கிறது.
இதனால் தமிழகத்தின் தலைநகரம் ஸ்தம்பித்துள்ள நிலையில் நடிகர் விஷால் இந்த நிலவரம் குறித்து வேதனையுடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அவரின் வீடியோவில்.. கடந்த 2015 ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது அதைவிட தற்போது 2023 ஆண்டில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொண்டோம் என சொன்னாலும் ஆனால் மேலும் பாதிப்புள்ளாகியுள்ளது.
இதை நான் ஒரு நடிகன் என்ற முறையில் சொல்லவில்லை.. நானும் அரசுக்கு ஓட்டு அளித்து இருக்கிறேன். ஒரு வாக்காளர் என்ற முறையில் பதிவிடுகிறேன்.
இதில் அரசியல் எதுவுமில்லை. சென்னை எம்எல்ஏக்கள் வெளியே வாருங்கள். மக்களுக்கான நிவாரண பணிகளை செய்து கொடுங்கள்.
இது ஒரு கேவலமான விஷயம்.. மக்களுடன் கலந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள்” என வேதனையுடன் வீடியோ பதிவிட்டுள்ளார் நடிகர் விஷால்.
Vishal emotional video about 2023 Chennai flood conditions