இன்றும் நாளையும் ‘ரெமோ’ ரசிகர்களுக்கு ‘செம’ விருந்து

இன்றும் நாளையும் ‘ரெமோ’ ரசிகர்களுக்கு ‘செம’ விருந்து

sivakarthikeyanபாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படத்தை 24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிறுவனத்தின் முதல் வெளியீடு இதுவே.

ஆனாலும் படத்தின் புரமோஷன் உள்ளிட்ட அனைத்திலும் தன் வித்தியாசமான விளம்பரங்களை செய்து வருகிறார் இதன் நிறுவனம் ஆர்.டி. ராஜா.

இப்படத்தின் ட்ரைலரை நாளை (செப். 19) திங்கட்கிழமை மாலை 6.00 மணிக்கு யூட்டியூப் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையின் இந்த ட்ரைலரின் கிரியேட் டிசைன் ஒன்றை இன்று மாலை 6.00 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதனால் டபுள் சந்தோஷத்தில் உள்ளனர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.

விஜய்யுடன் ஆட்டம் போடும் கமல்ஹாசனின் வில்லன்

விஜய்யுடன் ஆட்டம் போடும் கமல்ஹாசனின் வில்லன்

vijay roshan basheerபரதன் இயக்கும் பைரவா படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய்.

இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இணைந்துள்ள நிலையில் தற்போது ரோஷன் பஷீர் என்பவரும் இணைந்து இருக்கிறாராம்.

இவர் பாபநாசம் படத்தில் கமலின் மகள் நிவேதா தாமஸை வீடியோ படம் ஒன்றை காட்டி மிரட்டுவார்.

அதன்பின்னர் கௌதமியால் கொலை செய்யப்படுபவராக நடித்திருப்பார்.

மேலும் 3 ரசிகர்கள் என்ற படத்தில் விஜய் ரசிகர்களில் ஒருவராக நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இவர் பைரவா படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார்.

இவருக்கு இன்னொரு ஆசையும் உண்டாம். அதாவது… 3 ரசிகர்கள் படத்தின் இசை வெளியீட்டை விஜய் வெளியிட வேண்டும் என விருப்பம் தெரிவிக்க இருக்கிறாராம்.

பைரவா பட உரிமையை பெற்ற பிரபல தயாரிப்பு நிறுவனம்

பைரவா பட உரிமையை பெற்ற பிரபல தயாரிப்பு நிறுவனம்

bairavaaபரதன் மற்றும் விஜய் இணைந்துள்ள பைரவா படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

அடுத்த வருடம் பொங்கலுக்கு இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் விநியோகம் தற்போதே தொடங்கி விட்டது.

இப்படத்தின் தமிழக உரிமையை பெரும் தொகைக்கு ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தியா பாகிஸ்தான், ஜாக்சன் துரை உள்ளிட்ட படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்யராஜுடன் கைகோர்க்கும் விஷால்

பாக்யராஜுடன் கைகோர்க்கும் விஷால்

Bhagyaraj Vishalசுராஜ் இயக்கிய ‘கத்தி சண்டை’யை முடித்துவிட்டு அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார் விஷால்.

கத்தி சண்டையை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவுள்ளனர்.

மிஷ்கின் இயக்கவுள்ள ‘துப்பறிவாளன்’ படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கவுள்ளது.

நாயகியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார்.

இந்நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் இப்படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

அரோல் குராலி இசையமைக்க, தன் விஷால் பிலிம் பேக்டரி சார்பாக விஷால் தயாரிக்கிறார்.

ஜிவி பிரகாஷுடன் தாணு; தெறிக்க விடுவான் குமாரு

ஜிவி பிரகாஷுடன் தாணு; தெறிக்க விடுவான் குமாரு

thanu gv prakashஅம்மா கிரியேசன்ஸ் சிவா தயாரிப்பில் ராஜேஷ் இயக்கியுள்ள படம் கடவுள் இருக்கான் குமாரு.

இப்படத்திற்கு இசையமைத்து நாயகனாக நடித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

இப்படத்தின் விதவிதமான டீசர்கள் ரிலீஸ் ஆனதை தொடர்ந்து, இப்படத்திற்கு பெரும் எதிர்பாரப்பு எழுந்துள்ளது.

இப்படத்தின் திருச்சி வெளியீட்டு உரிமையை முருகானந்தம் மினிமம் கியாரண்டி அடிப்படையில் பெரும் தொகைக்கு பெற்று இருக்கிறார்.

கோவை உரிமையை சக்திவேல் பிலிம்ஸ் வேல்முருகன் பெற்றிருக்கிறார்.

சென்னை மற்றும் செங்கல்பட்டு உரிமையை பெரும் தொகைக்கு தெறி தயாரிப்பாளர் தாணு பெற்று இருக்கிறாராம்.

இப்படம் 2016 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

கார்த்தியுடன் திருமணம்; சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாட்னா

கார்த்தியுடன் திருமணம்; சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாட்னா

satna titus karthiதமிழில், விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் என்ற ஒரு படத்தில் மட்டுமே நடித்தார் சட்னா டைட்டஸ்.

இப்படத்தை கே.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டு அதிரடியான லாபம் பார்த்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்நிறுவனத்தை சேர்ந்த கார்த்தி என்பவரும் நாயகி சாட்னாவும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டதாக செய்திகள் வெளியானது.

தற்போது இதுகுறித்து இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

“நாங்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டோம்.

வரும் 2017 ஜனவரியில் பெற்றோர் சம்மதத்துடன் எங்கள் திருமணம் நடைபெறும்” என தெரிவித்துள்ளனர்.

 

satna titus Scan Letter Image

More Articles
Follows