இரவுக்கு ஆயிரம் கண்கள் படம் அருள்நிதியை அடுத்த லெவலுக்கு கொண்டு போகும் : டில்லி பாபு

இரவுக்கு ஆயிரம் கண்கள் படம் அருள்நிதியை அடுத்த லெவலுக்கு கொண்டு போகும் : டில்லி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Iravukku Aayiram Kangal movie will take Arulnithi to the next level says Delhi Babuஅருள்நிதி, அஜ்மல், மஹிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, மு மாறன் இயக்கியிருக்கும் படம் ’இரவுக்கு ஆயிரம் கண்கள்’.

இப்படத்தினை ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி சார்பாக ஜி டில்லி பாபு தயாரித்திருக்கிறார்.

உலகமெங்கும் மே 11ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

இப்படத்தினை பற்றி டெல்லி பாபு பேசும் போது,

”திரில்லர் வகை படங்களின் தீவிர ரசிகனாக இருப்பதால், இயக்குனர் மு மாறனின் கதை சொல்லலை கண்டு வியந்தேன்.

சொன்ன கதையை திரையில் காட்சிகளாக சிறப்பாக, திறமையாக கொண்டு வந்தது மகிழ்ச்சி. இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் சீட்டின் நுனிக்கு வரவைக்கும் காட்சிகள் நிறைய உள்ளன.

அவை உங்கள் கண்களை இமைக்க விடாது. ஈர்க்கக் கூடிய விஷயங்களை திரைக்கதையில் சரியாக பிணைத்துள்ளார்.

சமீபத்திய மியூசிக் சென்சேஷன் சாம் சிஎஸ், படத்துக்கு இசையமைப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

‘பின்னணி இசையில் தனக்கு ஒரு தனி பாணி உண்டு என்று இந்த படத்திலும் தன் திறமையால் நிரூபித்திருக்கிறார் சாம்.

மேலும், மொத்த படத்திலும் அருள்நிதி ஒரு மிஸ்டர் பர்ஃபெக்ட்டாக இருந்தார். தனது நடிப்பை மெறுகேற்ற அவர் காட்டிய ஈடுபாடு ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலித்தது.

மௌனகுரு எப்படி அவரின் கேரியரை உயர்த்தியதோ, அப்படி இந்த இரவுக்கு ஆயிரம் கண்கள் அவரை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்லும்.

ரெமோ, வேலைக்காரன் போன்ற பிரமாண்ட படங்களை தந்த 24AM ஸ்டுடியோஸின் ஒரு அங்கமான 24PM ஸ்டுடியோஸ் இந்த படத்தோடு கைகோர்த்திருப்பது பெருமையான விஷயம்” என்றார்.

Iravukku Aayiram Kangal movie will take Arulnithi to the next level says Delhi Babu

Breaking: நீட் தேர்வு எழுத வெளி மாநிலம் செல்லும் மாணவர்களுக்கு உதவ பிரசன்னா உறுதி

Breaking: நீட் தேர்வு எழுத வெளி மாநிலம் செல்லும் மாணவர்களுக்கு உதவ பிரசன்னா உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prasanna ready to help Govt School students to write NEET exam in other states+2 படிப்பை முடித்த பின் மருத்துவ துறையை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் நீட் தேர்வை எழுத வேண்டும்.

இந்தாண்டுக்கான நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் அந்த தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படவில்லை.

இது மாணவர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் தேர்வு மையத்திற்கு சென்று வருவதற்கான செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் நீட் தேர்வுக்காக வெளி மாநிலம் செல்லும் 2 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தருவதாக நடிகர் பிரசன்னா அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Prasanna ready to help Govt School students to write NEET exam in other states

Prasanna‏Verified account @Prasanna_actor
Wud love to sponsor travel expenses for atleast 2 underprevilleged students or Govt school students appearing for #NEET this year. Inbox me the details like hall ticket, place where ur exam hall assigned will book the tickets for u.

தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம்; கமல் கண்டனம்

தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம்; கமல் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan condemns TN Students must write NEET exam at other states+2 படிப்பை முடித்த பின் மருத்துவ துறையை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் நீட் தேர்வை எழுத வேண்டும்.

இந்தாண்டுக்கான நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கில், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் தான் தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதை எதிர்த்து சிபிஎஸ்இ தொடர்ந்த வழக்கில், தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால், அவர்கள் அங்குதான் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மய்யத் தலைவரான கமல் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது:

இந்த டிஜிட்டல் இணையதள யுகத்தில் ஏழைத் தமிழ் மாணவர்களை கேரளத்திற்கும், ராஜஸ்தானுக்கும் நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி. இங்கிருந்தே எழுதலாமே? அதற்கு ஆவன செய்யட்டும் அரசும் ஆணையும்.” என கமல் பதிவிட்டுள்ளார்.

Kamalhassan condemns TN Students must write NEET exam at other states

நமக்கு தேவையானதை பெற போராட வேண்டும்..; இயக்குனர் ரஞ்சித் பேச்சு

நமக்கு தேவையானதை பெற போராட வேண்டும்..; இயக்குனர் ரஞ்சித் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Pa Ranjithதென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் பி.சி.ஸ்ரீராம், சத்யராஜ், பா.இரஞ்சித், ரேவதி, அதிதி மேனன், ரோகினி, பாலாஜி சக்திவேல், புஷ்கர் காயத்திரி, அம்பிகா, சச்சு, சரோஜா தேவி, பிரேம் பெண்கள் மைய தலைவர் வைசாலி சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசியதாவது…

“இது பெண்களுக்காக பெண்களாலே உருவாக்கப்பட்ட சங்கம்.

பெண்கள் ஏதோ ஒரு உறவு முறையில் ஒதுக்கப்படுகிறார்கள். அதையும் தாண்டி சில பெண்கள் தைரியமாக எதிர்க்கிறார்கள்.

அந்த தைரியத்தின் வெளிப்பாடாக இந்த சங்கத்தை நான் பார்க்கிறேன்.

இந்த சங்கம் ரொம்ப வீரியமாக செயல் பட வேண்டும்.

சமீபத்தில் பாலியலுக்கு ஆளான பெண்ணை பற்றி கூறும் போது, அவள் ஒழுங்காக ஆடை அணியவில்லை என்கிறார்கள். குழந்தைகளும் தான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கும் ஆடைதான் காரணமா?

அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஆட்களாக நாம் மாற வேண்டும்.

அதற்கு இந்த சங்கம் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன்.

நமக்கு தேவையானதை நாம் போராடினால் மட்டும் தான் பெற முடியும்” என்றார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் ரஜினியின் சம்பளம் தெரியுமா.?

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் ரஜினியின் சம்பளம் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Rajinikanthரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படம் வருகிற ஜீன் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

மற்றொரு படமான 2.0 படம் 2018 தீபாவளிக்குள் வெளியாகிவிடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் வருகிற ஜீன் மாதம் முதல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். விஜய் சேதுபதி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

இப்படத்தில் ரஜினியின் சம்பளமாக ரூ. 65-70 கோடிகளை கொட்டிக் கொடுக்க தயாராகவுள்ளதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

விஜய் டிவியின் பிக்பாஸ் 2 புரோமோ சூட்டிங்கில் கமல்

விஜய் டிவியின் பிக்பாஸ் 2 புரோமோ சூட்டிங்கில் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor kamal haasanவிஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றது.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நட்சத்திரங்கள் பலரும் தற்போது சினிமாவில் பிஸியாகிவிட்டனர்.

அதில் பங்கேற்ற ஜீலி என்பவரும் படு பிரபலமாகி தற்போது படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

எனவே பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை தொடங்க விஜய் டிவி முடிவு எடுத்தது.

தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி கமல், அரசியல் பணிகளில் தீவிரமாகி விட்டாலும், கமலை தவிர வேறு எவர் அந்த நிகழ்ச்சியை வழங்கினாலும் தேறாது என்பதாலேயே மீண்டும் அவரை பிக்பாஸாக மாற்றியுள்ளனர்.

எனவே இன்று பிக்பாஸ் 2 புரோமோவிற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதில் கமல் பங்கேற்கிறார்.

More Articles
Follows