‘ரெமோ’ & ‘சுல்தான்’ டைரக்டருக்கு திருமணம்..; சிவகார்த்திகேயன் அட்லி பிரபு வாழ்த்து

‘ரெமோ’ & ‘சுல்தான்’ டைரக்டருக்கு திருமணம்..; சிவகார்த்திகேயன் அட்லி பிரபு வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு கலக்கிய திரைப்படம் ‘ரெமோ’.

இதில் நாயகியாக நடித்த கீர்த்தி சுரேஷை விட சிவகார்த்திகேயன் அழகாக இருப்பதாக ரசிகர்களே அப்போது கமெண்ட் செய்தனர்.

இந்த படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் டைரக்டராக அறிமுகமானவர் பாக்யராஜ் கண்ணன்.

இவர் இயக்குனர் அட்லியிடம் ராஜா ராணி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

தற்போது கார்த்தி-ராஷ்மிகா இணைந்துள்ள ‘சுல்தான்’ படத்தை இயக்கி வருகிறார். இதன் சூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்த நிலையில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணனுக்கும் ஆஷா என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. இவர்கள் திருமணம் வேலூர் அருகே உள்ள சேவூரில் நடந்தது.

இதில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் அட்லி, தயாரிப்பாளர் எஸ்ஆர். பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Sulthan director Bakkiyaraj Kannan married Asha in chennai today

Bakkiyaraj Kannan wedding

சக்ரா & துப்பறிவாளன் 2..; ஒரே நாளில் விஷால் போட்ட டபுள் பூஜை..

சக்ரா & துப்பறிவாளன் 2..; ஒரே நாளில் விஷால் போட்ட டபுள் பூஜை..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் தயாரித்து நடித்துள்ள படம் ‘சக்ரா’.

எம்எஸ் ஆனந்தன் இயக்கியுள்ள இந்த படத்தில் ரெஜினா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது.

அதுபோல் விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய படம் துப்பறிவாளன் 2.

படத்தின் சூட்டிங் நடந்த சில நாட்களில் விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட மிஷ்கின் படத்திலிருந்து விலகினார்.

தற்போது இந்த படத்தை விஷாலே இயக்கவுள்ளார்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு ‘சக்ரா’ படத்தின் டப்பிங் உள்ளிட்ட பின்னணி வேலைகளுக்கான பூஜையும், ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கான பூஜையும் ஒரே நாளில் போட்டுள்ளார் விஷால்.

Here’s an exciting update about Vishal’s Thupparivaalan 2 and Chakra

vishal movie

BREAKING உயிருக்கு ஆபத்து.. முதல்வர் உதவனும்.. – சீனுராமசாமி அவசர தகவல்

BREAKING உயிருக்கு ஆபத்து.. முதல்வர் உதவனும்.. – சீனுராமசாமி அவசர தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சீனு ராமசாமி.

கடந்த 2007ல் ‘கூடல் நகர்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி 2வது படமான ‘தென்மேற்கு பருவக்காற்று’ மூலம் தேசிய விருதை பெற்றார்.

விஜய் சேதுபதியை அந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்து பின்னர் அவருக்கு மக்கள் செல்வன் பட்டம் கொடுத்தார்.

நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட தரமான படங்களை தந்து கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு இளையராஜா, யுவன்சங்கர்ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.

இப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

இந்த நிலையில் சற்றுமுன் தன் ட்விட்டர் பக்கத்தில்… “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும்.
அவசரம்.” என்று மட்டும் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பான அவரது ஆடியோ பதிவில்… நான் தமிழ் ஆர்வலர். நான் எந்த அரசியல் கட்சியை சார்ந்தவன் அல்ல.

நான் எடுத்துள்ள தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டால் சிலரிடம் இருந்து மிரட்டல் வந்துள்ளன. ஆனால் தற்போதுள்ள அரசியல் கட்சிகள் அல்ல.” என தெரிவித்துள்ளார்.

விரைவில் விரிவான தகவலுடன் சந்திப்போம்.

Director Seenu Ramasamy urgent message regarding threatening

நயன்தாராவுக்கு போட்டியாக கஸ்தூரி…? ஜெயிக்க போவது யாரு..?

நயன்தாராவுக்கு போட்டியாக கஸ்தூரி…? ஜெயிக்க போவது யாரு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் ஒரு சீசன் உள்ளது. ஒரு படம் ஹிட்டானால் அதுபோலவே பட படங்கள் உருவாகும்.

பேய் படங்கள் ஹிட்டானால் தொடர்ந்து பேய் படங்கள்… காமெடி படங்கள் ஹிட்டானால் காமெடி படங்கள்… காதல் படங்கள் ஹிட்டானால் காதல் படங்கள்.. ஆக்சன் படங்கள் ஹிட்டானால் ஆக்சன் படங்கள் உருவாகும்.

தற்போது அம்மன் சீசன் வந்துவிட்டது போல..

ஆர்ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன்.

இப்படத்தில் அம்மன் வேடத்தில் நடித்துள்ளார் நயன்தாரா.

தற்போது அவருக்கு போட்டியாக புதிய படமொன்றில் அம்மன் வேடத்தில் நடிக்க இருக்கிறார் கஸ்தூரி.

அந்த படத்திற்காக அம்மன் வேடத்தில் எடுத்த சில புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

சபாஷ் சரியான அம்மன் போட்டி இருக்கும் போலவே…

Actress Kasthuri competes with Nayanthara

kasthuri nayanthara

தனுஷ் கால்ஷீட் இல்ல..; கௌதம் கார்த்திக்கை இயக்கும் செல்வராகவன்.?

தனுஷ் கால்ஷீட் இல்ல..; கௌதம் கார்த்திக்கை இயக்கும் செல்வராகவன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

selvaraghavanஎன்ஜிகே படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கவுள்ள படத்தை செல்வராகவன் இயக்கவுள்ளார் என கூறப்பட்டது.

தனுஷ் கைவசம் நிறைய படங்கள் உள்ளதால் அவர் ரொம்ப பிசியாக இருக்கிறாராம்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து கர்ணன், அத்ரங்கி ரே, கார்த்திக் நரேன் படம், ராம்குமார் படம் என தனுஷ் படங்கள் காத்திருக்கின்றன.

எனவே குறைந்த பட்ஜெட்டில் புதிய படமொன்றை இயக்க முடிவெடுத்துள்ளாராம் செல்வராகவன்.

அதில் ஹீரோவாக கௌதம் கார்த்திக் நடிப்பார் என கூறப்படுகிறது.

சூர்யா, சாய்பல்லவி, ராகுல் பரீத்தி சிங் நடித்த என்.ஜி.கே படத்தை இறுதியாக இயக்கி இருந்தார் செல்வராகவன்.

ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Director Selva Raghavan’s next film with Gautham Karthik

கதிரேசன் தயாரிப்பில் இணையும் லாரன்ஸ் & ஜிவி பிரகாஷ்

கதிரேசன் தயாரிப்பில் இணையும் லாரன்ஸ் & ஜிவி பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lawrence gv prakashநடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள ஹிந்தி படம் லட்சுமி பாம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

இதில் ரஜினியின் 2.0 பட வில்லன் அக்சய்குமார் நடித்துள்ளார்.

தற்போது மீண்டும் நடிகராக தமிழுக்கு திரும்பியுள்ளார்.

இவர் நடிக்கும் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இப்படத்தை பொல்லாதவன், ஆடுகளம் படத்தை தயாரித்த கதிரேசன் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

முதன்முறையாக லாரன்ஸ் படத்திற்கு ஜிவி இசையமைக்கிறார்.

படத்தின் இயக்குனர் யார்? ஒருவேளை லாரன்ஸ் இயக்குகிறாரா?

மற்ற விபரங்களை வருகிற அக்டோபர்.,29ல் படக்குழு அறிவிக்கவுள்ளது.

Raghava Lawrence’s next film update on october 29

More Articles
Follows