தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எதிர்நீச்சல், ரெமோ, மிஸ்டர். லோக்கல் உள்ளிட்ட பல படங்களில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்தவர் காமெடி நடிகர் சதீஷ்.
சமீபத்தில் கிரிக்கெட் வீரர் சேலம் நட்ராஜன் உடன் வீடியோ காலில் பேசி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இவர்கள் அடிக்கடி ட்விட்டரில் பேசிக் கொள்வது வழக்கம்.
இந்நிலையில் பிரபல தனியார் கல்லூரி அழகான ஆண்கள் வசிக்கும் பகுதி எது என்று நடத்திய கருத்துக்கணிப்பில் சேலம் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்திருப்பதாக வெளியான செய்தியைக் குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார் நடிகர் சதீஷ்.
அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன்… “இந்த கருத்து கணிப்பு நீங்கள் சென்னையில் செட்டில் ஆனதற்கு பின்னர் நடத்தப்பட்டது என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே தான் சென்னை முதலிடத்தைப் பெறவில்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். நன்றி. வணக்கம்” என்று பதிலளித்தார்.
இதற்கு பதிலளித்த நகைச்சுவை நடிகர் சதீஷ்…, “ரசிக, ரசிகைகள் யாரும் கடையடைப்பிலோ, போராட்டத்திலோ, பேரணியிலோ ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நண்பரது அட்மின் செய்தது என்றும், இனி இவ்வளவு வெளிப்படையாக கலாய்க்க மாட்டேன் என்றும் வருத்தம் தெரிவித்துக் கொண்டார். நன்றி வணக்கம்” இவ்வாறு நடிகர் சதீஷ் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
Sivakarthikeyan and Sathish fun on Loyola polls