சிவகார்த்திகேயனின் நல்ல மனசு யாருக்கு வரும்?

சிவகார்த்திகேயனின் நல்ல மனசு யாருக்கு வரும்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan stillsசிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், மோகன் ராஜா இயக்கவுள்ள படத்திற்கு தயாராகி வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சிவகார்த்திகேயனை தங்கள் பட விழாக்களுக்கு அழைக்காத பிரபலங்கள் இல்லை என்னுமளவுக்கு பிஸியாகி வருகிறார்.

  • கடந்த ஜீலை 20 முடிஞ்சா இவன புடி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு இசை குறுந்தகடை பெற்றார்.
  • அதன்பின்னர் ஆகஸ்ட் 2 இருமுகன் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
  • அன்றைய தினமே நட்ராஜ் நடித்துள்ள போகன் படத்தின் மோசன் போஸ்டரை வெளியிட்டார்
  • அதன்பின்னர் ஆகஸ்ட் 8 யானும் தீயவன் ட்ரைலரை வெளியிட்டார்
  • ஆகஸ்ட் 11 சகா படத்தில் இடம்பெற்ற யாவும் என்ற சிங்கிள் ட்ராக்கை வெளியிட்டார்.

மேலும் ட்விட்டரிலும் யூடிப்பிலும் மற்ற படங்களை புரோமோட் செய்கிறார்.

என்னதான் பிஸியாக இருந்தாலும் மற்ற படங்களில் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தும் சிவகார்த்திகேயன் நல்ல மனசுக்கு யாரும் வரும் என்கின்றனர் விஷயமறிந்தவர்கள்.

‘தளபதி 60’ படத்தின் தலைப்பு பற்றிய முக்கிய தகவல்

‘தளபதி 60’ படத்தின் தலைப்பு பற்றிய முக்கிய தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thalapathy 60 title announcement will be soonபரதன் இயக்கத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத், சதீஷ், ஸ்ரீமன், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் நடித்து வரும் படம் தளபதி 60.

விஜயா புரொடெக்ஷன்ஸ் சார்பில் பாரதி ரெட்டி தயாரிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக இந்த பெயரை அறிவித்துள்ளனர்.

இப்படத்திற்கு எம்ஜிஆர் நடித்த சூப்பர் ஹிட்டான “எங்கள் வீட்டு பிள்ளை“ என பெயரிடப்படலாம் என பல செய்திகள் வந்தன.

மேலும் இத்தலைப்புக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து இப்படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

“எங்கள் வீட்டு பிள்ளை “ என்னும் தலைப்பை சூட்டும் எண்ணம் இல்லை.
தலைப்பு வைப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.

பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். படத்தின் தலைப்பை பற்றிய அதிகாரபூர்வ தகவல் எங்களிடம் இருந்து சரியான நேரத்தில் வெளிவரும்.” என தெரிவித்துள்ளனர்.

கபாலி சாதனையை நெருங்குமா இருமுகன்.?

கபாலி சாதனையை நெருங்குமா இருமுகன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

irumugan stillsரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி, பிரம்மாண்டத்தை விட பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது.

எனவே இப்படத்தின் சென்னை உரிமையை பெற்ற ஜாஸ் சினிமாஸ் அதிக லாபத்தை ஈட்டியது.

மூன்றே வாரத்தில் சென்னையில் மட்டும் ரூ.12 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளார் கபாலி.

தற்போது இந்நிறுவனம் விக்ரம் நடித்த ‘இருமுகன்’ படத்தின் சென்னை உரிமையை கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

எனவே ‘கபாலி’ படத்தின் சாதனைகளை ‘இருமுகன்’ நெருங்குமா? என்பதை இரண்டு வாரங்கள் காத்திருந்து பார்ப்போம்.

ஒரே நாளில் விஜய்-அஜித்-சூர்யா ரசிகர்களுக்கு ஜெயா விருந்து

ஒரே நாளில் விஜய்-அஜித்-சூர்யா ரசிகர்களுக்கு ஜெயா விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay ajith suriyaநாளை மறுநாள் (ஆகஸ்ட் 15) இந்திய நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.

இதற்காக சினிமா ரசிகர்களை மகிழ்விக்கும் பொருட்டு வாகா, ஜோக்கர் உள்ளிட்ட படங்கள் நேற்று வெளியாகவுள்ளன.

ஆனால் முன்னணி நட்சத்திரங்கள் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் விஜய், அஜித், சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஜெயா டிவி அவர்களின் சூப்பர் ஹிட் படங்களை ஒளிப்பரப்புகிறது.

காலை 9 மணிக்கு சூர்யா நடித்த மாயாவி, மாலை 3 மணிக்கு விஜய் நடித்த வேலாயுதம் மற்றும் மாலை 6 மணிக்கு அஜித் நடித்த என்னை அறிந்தால் படங்கள் நாளை (ஞாயிறு) ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒளிப்பரப்பப்படுகிறது.

‘கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள்…’ ஜிப்ரான் உருக்கம்

‘கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள்…’ ஜிப்ரான் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

music director ghibranஇசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வெளிவரவுள்ள படம் ‘சென்னை 2 சிங்கப்பூர்’.

இப்படத்தின் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் ஒவ்வொரு பாடலையும் ஒவ்பொரு நாட்டில் வெளியிட உள்ளனர்.

அதாவது சென்னையில் ஆரம்பித்து பூட்டான், மியான்மார், தாய்லாந்து, மலேசியா வழியாக சிங்கப்பூர் செல்கின்றனர் இப்படக்குழுவினர்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க பயணத்தை சூர்யா கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தார்.

இவ்விழாவில் இயக்குனர் அப்பாஸ் அக்பர், இசையமைப்பாளர் ஜிப்ரான், கோகுல் ஆனந்த், அஞ்சு குரியன், ராஜேஷ் பாலச்சந்திரன், எம்சி ஜீஸ், ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து, படத்தொகுப்பாளர் கே.எல்.பிரவீன் மற்றும் இணை தயாரிப்பாளர் ஷபீர் ஆகியோர் பங்குபெற்றனர்.

இதுகுறித்து ஜிப்ரான் கூறுகையில்….

ஆறு நாடுகளை கடந்து செல்லவிருக்கிறோம். இது ரிஸ்க்கான பயணம் என்பதை அறிந்தாலும் ஒரு புது முயற்சியாக செய்கிறோம்.

எங்கள் பயணம் இனிமையாக அமைய எங்களுக்காகவும் எங்கள் குடும்பத்துக்காகவும் நீங்கள் கடவுளை வேண்டுங்கள்” என கேட்டுக்கொண்டார்.

நீயா நானா நிகழ்ச்சியில் தன் வெற்றி, தோல்வியை சொன்ன ரஜினி

நீயா நானா நிகழ்ச்சியில் தன் வெற்றி, தோல்வியை சொன்ன ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini stillsவருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று நீயா நானா சிறப்பு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக உள்ளது.

இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைப்பெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் கலந்து கொண்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ரஜினி சினிமாவுக்கு வந்து 41 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து, அவரின் வெற்றி, தோல்வி அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறாராம்.

More Articles
Follows