தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனது சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக 2-3 தெலுங்கு படங்களில் நடித்தவர் ரவி.
2003 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் ரவி.
இப்படத்தை ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கியிருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெறவே ‘ஜெயம்’ என்ற அடைமொழியை தன் பெயருடன் இணைத்துக் கொண்டார்.
அன்று முதல் இன்று வரை அந்த பெயருக்கு ஏற்ப ஜெயம் என்ற வெற்றியுடன் வலம் வருகிறார் ரவி.
தற்போது 2023ஆம் ஆண்டு வரை 20 வருடங்களை சினிமாவில் நிறைவு செய்துள்ள ஜெயம் ரவி இதுவரை 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இதில் காதல் நாயகனாகவும் ஆக்சன் நாயகனாகவும் பாசக்கார இளைஞனாகவும் சமூக போராளியாகவும் காவல்துறை அதிகாரியாகவும் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் ஜெயம் ரவி.
இதில் எம் குமரன், பேராண்மை, தனி ஒருவன், நிமிர்ந்து நில், பொன்னியின் செல்வன், மிருதன், போகன், மழை, வனமகன், தீபாவளி, கோமாளி ஆகிய படங்கள் ஜெயம் ரவியின் நடிப்புக்கு உரிய அங்கீகாரத்தை கொடுத்தன.
இவரது படங்கள் இந்த வயதினருக்கு மட்டும் தான் என்றில்லாமல் அனைத்து தரப்பு வயதினரும் ரவியின் படத்தை பார்க்கும் வகையில் கதைகளை தேர்வு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு 2023 ஜெயம் ரவி நடிப்பில் ‘அகிலன்’ மற்றும் ‘பொன்னியின் செல்வன் 2’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது்
ஆனால் தற்போது அவரது கைவசம் ஆறு படங்கள் உள்ளன. அதில் ‘இறைவன்’ மற்றும் ‘சைரன்’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.
மேலும் ஜன கன மன என்ற படத்திலும் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவுள்ளார்.
இத்துடன் ‘தனி ஒருவன் 2’ மற்றும் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
சினிமாவில் 20 வருடங்களில் நிறைவு செய்துள்ள ஜெயம் ரவியை ரசிகர்களுடன் இணைந்து நாமும் வாழ்த்துவோம்.
மேலும் இனிவரும் காலங்களில் தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களிலும் ரவி நடித்து அனைத்து மாநில மக்களையும் கவர்வார் என எதிர்பார்க்கலாம்.
Jayam Ravi completed 20 years of Cinema journey