20 நிமிட காட்சிகளை வெட்ட சொன்ன சென்சார்; தணிக்கையில் தவித்த *சகா*

20 நிமிட காட்சிகளை வெட்ட சொன்ன சென்சார்; தணிக்கையில் தவித்த *சகா*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Finally 5 minutes removed from Sagaa movie to get UA censor certificateஷெல்லி சினிமாஸ் சார்பில் செல்வகுமார், ராம் பிரகாஷ் தயாரிக்கும் படம் சகா.

இதில் சரண் ஹீரோவாக நடிக்க, கோலிசோடா கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, உள்பட பலர் நடிக்கிறார்கள்,
சபிர் என்பவர் இசையமைக்க, நிரன்சந்தர் ஒளிப்பதிவு செய்கிறார்.

தணிக்கை குழுவால் சான்றிதழ் மறுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு மறு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் முருகேஷ் கூறியதாவது:

சந்தர்ப்ப சூழ்நிலையால் தெரியாமல் செய்த தவறுக்காக இரு நண்பர்கள் சிறார் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அங்கு குட்டி ராஜாங்கம் நடத்தும் வில்லனால் இவர்கள் வாழ்க்கை தடம் மாறுகிறது.

தெரியாமல் தவறு செய்தவர்கள் தெரிந்தே தவறு செய்ய வேண்டியதாகிறது. அதன் பிறகு அவர்கள் வாழ்க்கை என்னவாகிறது என்பதுதான் கதை.

படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பியபோது சிறுவர்கள் வன்முறை செய்வதாக காட்டியிருக்கிறீர்கள். சிறை திருந்தும் இடம், அதை தவறு செய்யும் இடமாக காட்டியிருக்கிறீர்கள் என்று சான்றிதழ் தர மறுத்து விட்டார்கள்.

சான்றிதழ் வேண்டும் என்றால் 20 நிமிட காட்சியை நீக்க வேண்டும் என்றார்கள். இதனால் மறு தணிக்கைக்கு சென்றோம்.

அவர்கள் 5 நிமிட காட்சியை மட்டும் நீக்க சொல்லி யூஏ சான்றிதழ் வழங்கினார்கள். அடுத்த மாதம் படம் வெளிவருகிறது.” என்றார் முருகேஷ்.

Finally 5 minutes removed from Sagaa movie to get UA censor certificate

அரசியல் பிரச்சினை உருவாகும் என்பதால் *சிவா மனசுல புஷ்பா*விற்கு தடை?

அரசியல் பிரச்சினை உருவாகும் என்பதால் *சிவா மனசுல புஷ்பா*விற்கு தடை?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Varaki reveals Siva Manasula Pushpa movie Censor issueஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிவா மனசுல புஷ்பா’.. நடிகர் வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும் இந்தப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதுமே அரசியல் அரங்கில் அதிர்வலைகளை எழுப்பி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் இரு மடங்காக்கி விட்டது.

அந்த மகிழ்ச்சியுடன் படத்தை முடித்துவிட்டு, சென்சாருக்கு சான்றிதழ் பெற சென்றவர்களுக்கு அந்த டைட்டிலாலேயே பிரச்சனை உருவாகியுள்ளது.

என்ன நடந்தது என கேட்டால் படத்தின் இயக்குர் வாராகி கொந்தளிக்கிறார்.

“கடந்த ஜூலை-16ஆம் தேதி ‘சிவா மனசுல புஷ்பா படத்தை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டினோம். படத்தை பார்த்தவர்கள், சில அரசியல் வசனங்கள், கிளாமர் காட்சிகள், சில அரசியல்வாதிகள் பெயர்கள் உள்ளிட்ட சிலவற்றை நீக்க சொன்னார்கள்.

சென்சார் போர்டில் உள்ள உறுப்பினர்களுக்கு ஒரு படத்திற்கு சான்றிதழ் அளிக்க என்ன தகுதி உள்ளது..?.

சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் உட்கார்ந்து கொண்டு படம் பார்த்தால் அவர்களுக்கு எப்படி எங்களின் வலி தெரியும்..? என அப்போது சென்சார் அதிகாரிகளுடன் நான் விவாதத்தில் ஈடுபட்டேன்.
இவற்றையெல்லாம் குறித்துக்கொண்டு டில்லியில் உள்ள கமிட்டிக்கு அனுப்பி வைத்தார்கள்.

டெல்லியில் இருந்து மேலும் ஒரு அதிர்ச்சியாக சென்சாரில் நீக்க சொன்ன விஷயங்களுடன் படத்தின் டைட்டிலையும் மாற்ற சொல்லி இன்னொரு உத்தரவும் சேர்ந்து வந்தது.

அதுமட்டுமல்ல அதிரடி அரசியல் வசனங்களை மியூட் பண்ண சொல்லி, அதையே காரணம் காட்டி இந்தப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தடை விதிக்கிறோம் என சொன்னார்கள்.

ஆனால் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் நாங்கள் டெல்லியில் அப்பீல் பண்ணி இருக்கிறோம். படத்தை பொறுத்தவரை நாங்கள் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

நிகழ்கால சம்பவங்களைத்தான் கற்பனை கலந்து படமாக்கி இருக்கிறோம் .. அப்படியே இந்தப்படத்தை பார்த்துவிட்டு அதில் உள்ள கதாபாத்திரம் நாமாகத்தான் இருக்குமோ என யாருக்காவது தோன்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல ஆனால் சென்சாரோ நாங்கள் யாரையோ குறிப்பிட்டு சொல்கிற மாதிரி நினைக்கிறது…

இந்த பிரச்சனையின் பின்னணியில் சில அரசியல்வாதிகள் இருப்பார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது.

காரணம் இதைவிட மோசமான சில படங்களுக்கும் சினிமாவை கிண்டலடித்து எடுக்கப்படும் படங்களுக்கெல்லாம் மட்டும் எப்படி உடனே சான்றிதழ் கிடைக்கிறது.?

எத்தனையோ பொதுநல வழக்குகளை நான் பார்த்துள்ளேன்..இந்த பிரச்னையையும் முறைப்படி சந்தித்து படத்தை வெளியிடுவேன்.

அதற்காக ரிவைசிங் கமிட்டி செல்லவும், தேவைப்பட்டால் நீதிமன்றம் சென்று எங்களுக்கான நியாயத்தை பெற்று அடுத்த மாதம் படத்தை ரிலீஸ் செய்யவும் தயங்கமாட்டேன்” என்கிறார் வாராகி எதையும் சந்திக்கும் துணிவுடன்.

Director Varaki reveals Siva Manasula Pushpa movie Censor issue

 

ஒருவருக்கொருவர் ரசிகையாக மாறிய கீர்த்தி சுரேஷ்-ஐஸ்வர்யா ராஜேஷ்

ஒருவருக்கொருவர் ரசிகையாக மாறிய கீர்த்தி சுரேஷ்-ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Keerthy Suresh and Aishwarya Rajesh became fan of each otherமாபெரும் வெற்றிப் பெற்ற சாமி படத்தின் 2ஆம் பாகம் 15 ஆண்டுகளுக்கு பிறகு சாமி ஸ்கொயர் என்ற பெயரில் உருவாகியுள்ளது.

இப்படத்தையும் ஹரியே இயக்க, விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். முதல் பாகத்தில் த்ரிஷா நாயகியாக நடித்திருந்தார்.

தற்போது அவரது கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

மற்றொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் சூரி, டெல்லி கணேஷ், இமான் அண்ணாச்சி, பிரபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் ஒரு ஸ்டார் ஹோட்டலில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் மாற்றி மாற்றி புகழ்ந்துக் கொண்டனர்.

ஐஸ்வர்யா பேசும்போது… நடிகையர் திலகம் படம் பார்த்து நான் அசந்துவிட்டேன். சில காட்சிகளில் அது சாவித்ரியா? கீர்த்தியா? என கன்ப்யூஸ் ஆகிட்டேன்.

அன்றுமுதல் நான் கீர்த்தியின் ரசிகையாக மாறிவிட்டேன்” என்றார்.

அதன்பின்னர் பேசிய கீர்த்தி பேசும்போது… இப்போதுதான் என் ரசிகையாக ஐஸ்வர்யா மாறியிருக்கிறார். நான் காக்கா முட்டை படம் பார்த்த போதே ஐஸ்வர்யா ராஜேஷின் ரசிகையாக மாறிவிட்டேன்” என பேசினார்.

Keerthy Suresh and Aishwarya Rajesh became fan of each other

*சீமராஜா*வுக்காக சிக்ஸ்பேக் வைத்த சூரி; ரகசியத்தை உடைத்த விக்ரம்

*சீமராஜா*வுக்காக சிக்ஸ்பேக் வைத்த சூரி; ரகசியத்தை உடைத்த விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikram reveals Sooris Six pack secret in Saamy Square audio launchஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் விக்ரம் பேசும்போது…

சூரி ஒரு அருமையான நடிகர். அவரும் எங்கள் சிக்ஸ் பேக் கிளப்பில் இணைந்துவிட்டார்.

அவர் சீமராஜா படத்துக்காக சிக்ஸ் பேக் வைத்திருந்தார். ஆனால் அது படமாக்கப்படவில்லை.

மற்ற படத்தில் அந்த காட்சிகள் இல்லை. நான் மட்டும்தான் அவரின் சிக்ஸ் பேக்கை பார்த்தேன். இப்போது அவரிடம் பேமிலி பேக்தான் உள்ளது.” என பேசினார்.

Vikram reveals Sooris Six pack secret in Saamy Square audio launch

முதன் முறையாக சாமி2 படத்தில் புது அவதாரமெடுத்த கீர்த்தி சுரேஷ்

முதன் முறையாக சாமி2 படத்தில் புது அவதாரமெடுத்த கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikram and Keerthy Suresh croon a number for Saamy Squareதமிழ் சினிமாவில் மாஸ் படமாக அமைந்த சாமி படத்தின் இரண்டாம் பாகமாக சாமி2 படத்தை உருவாக்கியிருக்கிறார் ஹரி.

முதல் பாகத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த த்ரிஷா இதில் நடிக்கவில்லை.

அவருக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

சிபு தமீன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் மற்றொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘புது மெட்ரோ ரயில்’ என்ற பாடலை விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் தங்கள் சொந்த குரலில் பாடியுள்ளனர்.

இனி கீர்த்திக்கு பாட அதிக வாய்ப்புகள் வந்தாலும் ஆச்சரியமில்லை.

Vikram and Keerthy Suresh croon a number for Saamy Square

சர்கார் இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் லைவ் ஷோ

சர்கார் இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் லைவ் ஷோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Rahman going to perform Live music show in Sarkar Audio launchசன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சர்கார் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மூன்றாவது படமாகும்.

இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி விட்ட நிலையில், இசை வெளியீடு செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
இந்த விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமானின் நேரடி இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

AR Rahman going to perform Live music show in Sarkar Audio launch

More Articles
Follows