சீமராஜா அதிகாலை காட்சிகள் ரத்து; சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிர்ச்சி

சீமராஜா அதிகாலை காட்சிகள் ரத்து; சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Seemaraja special early morning shows cancelledபொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, லால் உள்ளிட்டோர் நடித்து உருவாகியுள்ள சீமராஜா திரைப்படம் இன்று வெளியாகிறது.

அண்மைக்காலமாக முன்னணி நடிகர்களைப் போல் சிவகார்த்திகேயன் படத்திற்கும் அதிகாலை 5.00 மணி சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.

இதனால் படத்திற்கு அனைத்து தரப்பு மக்களிடையே எதிர்பார்ப்பு உருவானது.

அதிகாலை காட்சிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்கப்பட்டு ஹவுஸ் புல் ஆனது.

ஆனால் இன்று காலை தியேட்டருக்கு சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது.

காரணம் கேடிஎம் kdm பிரச்சனையால் அதிகாலை சிறப்பு காலை காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன.

இதே பிரச்சனை நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்துக்கும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Seemaraja special early morning shows cancelled

சீமராஜாவில் ஆரம்பம் முதல் இறுதி வரை சூரி காமெடியில் அதிர வைப்பார் – சிவகார்த்திகேயன்!

சீமராஜாவில் ஆரம்பம் முதல் இறுதி வரை சூரி காமெடியில் அதிர வைப்பார் – சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sooriசீமராஜாவின் வருகை ரசிகர்களிடையே மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. நகரம், புற நகரம், கிராமப்புற பகுதிகள் என தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் முன்பதிவும், கொண்டாட்டங்களும் படம் மிகப்பெரிய வெற்றியை நோக்கி செல்வதை பறை சாற்றுகிறது. படத்தின் விளம்பரங்களிலும், ட்ரைலரிலும் சிவகார்த்திகேயனின் மாஸ் அவதாரம் அவரது ரசிகரக்ளை எதிர்பார்ப்பின் உச்சிக்கே கொண்டு சேர்த்திருக்கிறது. இன்னொரு வகையில் பார்த்தால் இது கொஞ்சம் சீரியஸான படம் என்ற உணர்வை கொடுத்துள்ளது.

இத்தகைய சந்தேகங்கள் எழும் முன்பே, சிவகார்த்திகேயன் தெளிவான விளக்கத்தை தருகிறார். அவர் கூறும்போது, “சீமராஜாவில் தொடக்கம் முதல் இறுதி வரை சூரி தன் இடைவிடாத காமெடியால் அதிர வைப்பார். இந்தத் திரைப்படம் நிச்சயம் ஒரு தனித்துவமான கருத்தை கொண்டு உருவாகியுள்ளது. இது தமிழ் மக்களுக்கு எந்த சூழலுக்கும் பொருத்தமானதாக இருக்கும். ரஜினி முருகன் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்களில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருந்தன. சீமராஜாவிலும் நம்மால் முடிந்த அளவுக்கு மிகச்சிறந்த ஒரு பொழுதுபோக்கு படமாக கொடுக்க வேண்டும் என்று படத்தின் திரைக்கதை எழுதும் முன்பே முடிவெடுத்தோம். படத்தின் மையக்கரு கொஞ்சம் அழுத்தமாக இருப்பினும், நகைச்சுவை, செண்டிமெண்ட், காதல், ஆக்‌ஷன் என குடும்ப ரசிகர்கள் ரசிக்கும் வகையில் ஒரு பொழுதுபோக்கு படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறோம்.

படத்தில் நடித்த மற்ற நட்சத்திரங்களை பற்றி சிவகார்த்திகேயன் கூறும்போது, “அது ஒரு அற்புதமான அனுபவம்’ என்று வெறும் வார்த்தைகளால் சொல்வதை விட, சீமராஜாவின் மொத்த அனுபவங்களையும் சேர்த்து வைக்க விரும்புகிறேன். குறிப்பாக, நெப்போலியன் சார், சிம்ரன் மேடம், லால் சார் போன்ற மூத்த நடிகர்களுடன் இணைந்து பணியாற்றும்போது, அவர்களின் நடிப்பு மற்றும் எளிமையை கண்டு வியந்தேன். உண்மையில், நான் அவர்களிடம் இருந்து சில நல்ல பண்புகளை எடுத்துக் கொண்டேன். எதிர்கால தலைமுறை நடிகர்கள் வெற்றிகரமாக செயல்பட நிச்சயமாக அந்த பண்புகள் வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.

“நான் இந்த படத்தில் முழுமையாக ஈடுபடுவதற்கு சமந்தா முன்னரே அவரது கதாபாத்திரத்திற்கு தயாராக தொடங்கி விட்டார். ஒரு முன்னணி நடிகையாக அடுத்தடுத்த படங்களில் இடைவிடாமல் நடிக்கும் பிஸியான நேரத்திலும், இந்த படத்துக்காக அதிக நேரம் எடுத்துக் கொண்டதோடு, சிலம்பம் கற்றுக் கொண்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது” என்று தன் நாயகி சமந்தாவை பற்றி புகழ்கிறார் சிவகார்த்திகேயன்.

படத்தில் என் கதாபாத்திரத்தின் கற்பனையான பெயர் சீமராஜா. ஆனால் உண்மையில் இந்த தலைப்பு எங்கள் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவுக்கு தான் வழங்கப்பட வேண்டும். இது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தையாக கூட கருதப்படலாம், ஆனால் உண்மையில், கொஞ்சம் கூட ஓய்வு எடுத்துக் கொண்டதே இல்லை. எப்போதும் விழிப்புடன் இருந்தார், சின்ன விஷயங்கள் கூட படத்தை பாதிக்காமல் பார்த்துக் கொண்டார். இல்லையென்றால் ஒரு மாத கால சினிமா ஸ்ட்ரைக்கையும் தாண்டி, சொன்னபடி படத்தை முடித்து விநாயகர் சதுர்த்திக்கு படத்தை வெளியிடுவது சாத்தியமாகி இருக்காது” என்றார் சிவகார்த்திகேயன்.

சீமராஜா எடிட்டிங்கிலேயே ஒரு கொண்டாட்டமான அனுபவமாக இருந்தது – தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன்!

சீமராஜா எடிட்டிங்கிலேயே ஒரு கொண்டாட்டமான அனுபவமாக இருந்தது – தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivek harshanஆக்‌ஷன், காமெடி, காதல், ஹாரர் என எந்த வகை படமாக இருந்தாலும் படத்தொகுப்பாளர் அனுபவிக்கும் மன அழுத்தம், காலக்கெடு எதுவுமே தவிர்க்க முடியாதவை. எனினும், அப்படிப்பட்ட ஒரு படத்தொகுப்பாளரிடம் இருந்து, குறிப்பாக விவேக் ஹர்ஷன் போன்ற தேசிய விருது பெற்ற ஒருவரிடம் இருந்து, “சீமராஜா எடிட்டிங்கிலேயே எனக்கு ஒரு கொண்டாட்டமான அனுபவமாக இருந்தது” என்ற ஒரு வார்த்தைகளை கேட்பது அரிதினும் அரிது.

இயக்குனர் மனதில் நினைத்து எடுத்த காட்சிகள், படத்தொகுப்பாளரின் சரியான உணர்வை தூண்டிவிடுவது மிகவும் அரிது. சீமராஜா படத்தில் பணிபுரியும் போது, இறுதி வடிவம் கொடுக்கும் முன்பே நிறைய காமெடி, உணர்வுப்பூர்வமான காட்சிகள் என் உணர்வை சரியாக கணித்தன. திரையரங்குகளில் என் அனுபவத்தின் அளவை விட இரட்டிப்பு அளவுக்கு ரசிகர்கள் படத்தை கொண்டாடுவார்கள் என நான் நம்புகிறேன். முக்கியமாக, டிரெய்லரில் நீங்கள் சில நொடிகள் பார்த்த ஒரு பகுதி படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும்” என்றார் விவேக் ஹர்ஷன். பொன்ராம், சிவகார்த்திகேயன் ஆகியோரின் ரஜினி முருகன் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்களிலும் ஏற்கனவே பணிபுரிந்திருந்தார் விவேக் ஹர்ஷன்.

சிவகார்த்திகேயன், சமந்தா ஜோடியாக நடித்திருக்கும் இந்த படத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொட்டிக் கிடக்கின்றன. வித்தியாசமான அவதாரத்தில் சிம்ரன் மிரட்ட, சூரி வழக்கம் போல காமெடியில் பின்னி எடுக்கப் போகிறார். தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவின் 24AM ஸ்டுடியோஸ் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இந்த சீமராஜா, செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

சிவகார்த்திகேயனின் அதிர்ஷ்ட சின்னமாக விளங்கும் வெற்றிக் கூட்டணி, டி இமான் (இசை), பாலசுப்ரமணியம் (ஒளிப்பதிவு), விவேக் ஹர்ஷன் (படத்தொகுப்பு) யுகபாரதி (பாடல்கள்) மற்றும் பலர் இந்த படத்திலும் பணி புரிவது ஏற்கனவே எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கிறது.

சீமராஜா என்னை மிகப்பெரிய உயரத்துக்கு இட்டுச் செல்லும் – சூரி நம்பிக்கை!

சீமராஜா என்னை மிகப்பெரிய உயரத்துக்கு இட்டுச் செல்லும் – சூரி நம்பிக்கை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sooriஒரு சில நகைச்சுவை நடிகர்களுக்கே ஒரு காமெடியன் என்ற இடத்தையும் தாண்டி, படத்தின் முக்கிய கதாபாத்திரமாக பயணிக்க கூடிய ஆற்றல் உண்டு. அந்த வகையில் சூரியை மிக முக்கியமான ஒரு நடிகராக நாம் சொல்லலாம். சமீப காலங்களில் தனது காமெடி மூலம் ரசிகர்களுக்கு விருந்தளித்த சூரி, தனது அடுத்த படமான சீமாராஜா பற்றி நிறைய விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அத்தோடு இந்த படம் அவருக்கு எவ்வளவு விஷேசமான படம் என்றும், எப்படி அவர் கேரியரில் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும் என்பதையும் பகிர்கிறார்.

“வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் எப்படி மிகச்சரியான நேரத்தில் எனக்கு தேவையான வெற்றிகளை தந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். சீமராஜா என்னை மிகப்பெரிய உயரத்துக்கு இட்டுச் செல்லும், சினிமாவில் நீண்ட காலத்துக்கு என்னை பயணிக்க வைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் சூரி.

“சிவகார்த்திகேயன் மற்றும் பொன்ராம் ஆகியோருடனான என் முந்தைய படங்களில் இருந்ததை விட இந்தப் படத்துடன் எனக்கு உணர்வு ரீதியான தொடர்பு நிறைய இருக்கிறது. வெறும் காமெடி நடிகராக என் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பாக மட்டும் இல்லாமல் என் உடல் ஆரோக்கியத்தை கவனிக்க வைத்தது. பொன்ராம் எழுதிய கதைப்படி சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து நானும் 6 பேக் வைக்க வேண்டி இருந்தது. ஆரம்பத்தில் நான் இதை காமெடியாக நினைத்தேன், ஆனால் ஜிம்மிற்கு போனபிறகு மிகவும் கடுமையான ஒரு அனுபமாக அமைந்தது. இறுதியாக, நான் கட்டுமஸ்தான உடலோடு சேர்த்து, உடல் நலத்தை பற்றிய புரிதலையும் பெற்றேன். அது என் வாழ்நாள் முழுவதிலும் எனக்கு உதவியாக இருக்கும்” என்றார் சூரி.

“டிரெய்லரின் இறுதியில் சில நொடிகள், படத்தில் ஒரு முக்கிய அம்சமாகும். அந்த காட்சிகளை திரையரங்குகளில் பார்ப்பது ஒரு பெரிய அனுபவமாக இருக்கும். சீமராஜா ரிலீஸுக்கு பிறகு அந்த வகையில் ஒரு முழுமையான திரைப்படத்தை இயக்கும் முழுத்தகுதியும் பொன்ராம் அவர்களுக்கு இருக்கிறது என்று நம்புகிறேன் என்று தன் இயக்குனர் பொன்ராம் பற்றிய புகழுரையை முடிக்கிறார்.

தனது சகோதரர் சிவகார்த்திகேயன் பற்றி அவர் கூறும்போது, “மனம் கொத்தி பறவையில் அவரோடு இணைந்து பணிபுரிந்த நாட்களில், நள்ளிரவு நேரத்தில் ஒரு குழந்தையை போல ஃபோனில் அழைத்து நான் எப்படி நடித்தேன் என கேட்பார். ஆரம்பத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் வழக்கமான செய்யும் சேட்டை போல என்னிடம் விளையாடுகிறார் என்று நினைத்தேன். ஆனால், அவர் உண்மையிலேயே என் கருத்தை தொடர்ந்து கேட்டார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் படங்களின் மூலம் மிகப்பெரிய உயரத்தை அடைந்த பிறகும் கூட என் பரிந்துரையை தீவிரமாக கேட்டுக் கொண்டிருந்தார். சீமராஜா படப்பிடிப்பின்போதும், நள்ளிரவில் என்னை அழைத்து என்னுடைய கருத்துகளை கேட்டது என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவரது பணிவு மற்றும் அர்ப்பணிப்பு தான் அவரது வெற்றிக்கு காரணமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

சீமராஜா இன்னும் சில மணி நேரங்களில் உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. 24AM ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா மிகப் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன், லால் மற்றும் பல முக்கியமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் – இயக்குனர் பொன்ராம்!

சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் – இயக்குனர் பொன்ராம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ponramஒரு சாதாரண வெற்றியே நம் தோள்களில் மிகப்பெரிய பொறுப்புகளை ஏற்றி விடும். அப்படி இருக்கையில் ரஜினி முருகன் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்த இயக்குனர் பொன்ராம் தோள்களில் தவிர்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய பொறுப்புகள் வந்து சேர்ந்திருக்கின்றன. சீமராஜாவும் வெற்றி தான் என்ற உறுதியில் இருக்கும் பொன்ராம், அதே சமயம் ரசிகர்களின் வரவேற்பை காண்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளார். “ஒரு மாணவர் பரீட்சை முடிவுக்கு காத்திருப்பதை போலவே நானும் காத்திருக்கிறேன்” என சிரிக்கிறார் பொன்ராம். முழு படக்குழுவும் படத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தாலும், எனக்கு வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கும் உணர்வு இருக்கிறது என்கிறார்.

சீமராஜா பற்றி இயக்குனர் பொன்ராம் கூறும்போது, “சீமராஜா மூலம் எங்கள் முந்தைய படங்களில் இருந்து நாங்கள் சிறிது சிறிதாக மேம்பட்டிருக்கிறோம். அதற்காக எங்கள் வழக்கமான பொழுதுபோக்கு விஷயங்களை ஒதுக்கி விடவில்லை. பொழுதுபோக்கு தான் பின்னணியாக இருக்கும், ஆனால் சில மாற்றங்களை கொண்டிருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, சிவகார்த்திகேயன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது” என்றார்.

நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை பற்றி பேசும்போது, “படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பே சமந்தா தனது கதாபாத்திரத்திற்காக, முழு முயற்சியில் ஈடுபட்டார். அவர் சிலம்பம் பயிற்சி பெற்று, கேமராவின் முன்பு அதை நேர்த்தியாக செய்து காட்டினார். சூரி நிச்சயமாக எங்கள் குழுவில் மிகப்பெரிய பலம். உங்களை விலா நோக சிரிக்க வைப்பார்.

“அனைவரும் சீமராஜா ஒரு திருவிழா உணர்வை தருவதாக சொல்வதை கேட்பதில் மகிழ்ச்சி. அதற்கு முக்கியமான காரணம் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்த நண்பர்கள் தான் என்று நான் கூறுவேன். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், கலை இயக்குனர் முத்துராஜ் மற்றும் இசையமைப்பாளர் டி இமான் இல்லாமல் இது நடந்திருக்காது. சீமராஜா திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

சிம்ரன், நெப்போலியன், லால் மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். 24AM சார்பில் மிக பிரமாண்டமாக தயாரித்திருப்பதோடு, தனது தனித்துவமான விளம்பரங்களால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ஆர்.டி.ராஜா. விநாயகர் சதூர்த்தி (செப்டம்பர் 13) அன்று அதிக திரையரங்குகளில் மிக பிரமாண்டமாக வெளியாகிறது.

சீமராஜா எனக்கு நல்ல உள்ளங்களுடன் வேலை செய்யும் வாய்ப்பை அளித்தது – நடிகை சிம்ரன்!

சீமராஜா எனக்கு நல்ல உள்ளங்களுடன் வேலை செய்யும் வாய்ப்பை அளித்தது – நடிகை சிம்ரன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simranகாலங்கள் கடந்தாலும் ஒரு சிலரே ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பார்கள். அந்த வகையில் கோலிவுட்டில் தவிர்க்க முடியாத, மகாராணியாக தனி இடத்தை பிடித்தவர் நடிகை சிம்ரன். தமிழ் சினிமாவில் எவ்வளவோ நடிகைகள் வந்து போயிருக்கிறார்கள், ஆனால் இன்றைக்கும் தனக்கென தீவிர ரசிகர்களை கொண்டிருக்கும் ஒரு நாயகி என்றால் அது சிம்ரன் தான்.

தனது படைப்புகள் மூலம் தனக்கென தனி அடையாளத்தை பெற்று மிகப்பெரிய உயரத்தை அடைந்த சிம்ரன், நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று யாராவது நினைத்திருப்போமா?. சீமராஜா படத்தில் ஒரு எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பொன்ராம் சார் என்னை அணுகிய போது எனக்கும் அந்த மனநிலை தான் இருந்தது. நான் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொளள உண்மையிலேயே தயங்கினேன். ஆனால் கதையை என்னிடம் சொல்ல எனக்காக பொன்ராம் சார் பொறுமையாக காத்திருந்ததால் தான் இது நடந்தது. ஒருமுறை, நான் கதையை கேட்ட பிறகு, என் கதாபாத்திரம் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பார்த்த பிறகு இந்த படத்தில் நடிக்கும் தீர்மானத்துக்கு வந்தேன்.

இந்த படத்தில் எனக்கு நல்ல உள்ளங்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஒட்டுமொத்த படக்குழுவினரும் ஒரு குடும்பமாக மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தனர். கடந்த பல ஆண்டுகளில் பல படங்களில் பணிபுரிந்திருந்தாலும், இந்த குழுவில் முழுக்க நேர்மறை அதிர்வுகளை உணர்ந்தேன். குறிப்பாக, சிவா, பொன்ராம் கூட்டணி ஏற்கனவே வெற்றிகரமான படங்களை கொடுத்துள்ளது, ரசிகர்கள் எந்த கேள்வியும் இல்லாமல் இந்த படத்தை பார்க்க வருவார்கள். ஆனால் சிவகார்த்திகேயன், பொன்ராம் மற்றும் குழுவில் உள்ள அனைவருமே ரசிகர்களுக்கு முந்தைய படத்தை விடவும் சிறப்பான படத்தை கொடுப்பதில் மிகுந்த அக்கறை காட்டினார்கள்” என்றார்.

24AM ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா சிறந்த முறையில் விளம்பரப்படுத்தி வரும் இந்த சீமராஜா, உலகமெங்கும் செப்டம்பர் 13ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக வெளியாகிறது. எற்கனவே டி இமான் இசையமைத்திருக்கும் பாடல்கள் அனைத்து வானொலி நிலையங்களிலும் தொடர்ச்சியாக ஒலித்து கொண்டிருக்கின்றன. பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவும், மிகுந்த நேர்த்தியான பொழுதுபோக்கு படத்துக்கான காட்சியமைப்புகளும், டிரெய்லரில் வந்த இறுதி சில நொடிகளும் படத்தின் எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரித்துள்ளது.

More Articles
Follows