மலையாளம்-தெலுங்கு படங்களில் ஆர்வம் காட்டும் கீர்த்தி சுரேஷ்

மலையாளம்-தெலுங்கு படங்களில் ஆர்வம் காட்டும் கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Keerthy Suresh interested to act in Malayalam and Telugu movieசீமராஜா, சாமி 2, சர்கார், சண்டக்கோழி2 ஆகிய படங்களுக்கு பின்னர் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் எந்த படங்களும் தமிழில் வெளியாகவில்லை.

தற்போது ஒரு முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

தற்போது பிரியதர்சன் இயக்கத்தில் ‘மரைக்கார்- அரபிகடலின்டெ சிம்ஹம்’ என்ற மலையாளப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படமானது வெள்ளையர்களை எதிர்த்து போராடிய ஒரு மாவீரரை பற்றிய சரித்திரக்கதையாம்.

ரூ. 60 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகிவருகிறது.

இதனையடுத்து தெலுங்கு படமொன்றில் நடிக்க இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தை அறிமுக இயக்குநரான நரேந்திரநாத் என்பவர் இயக்கவுள்ளார்.

Keerthy Suresh interested to act in Malayalam and Telugu movie

அட்லி இயக்கவுள்ள விஜய் 63 படத்தில் இணையும் நடிகர் கதிர்

அட்லி இயக்கவுள்ள விஜய் 63 படத்தில் இணையும் நடிகர் கதிர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Kathir team up with Vijay in Thalapathy 63சர்கார் படத்தை தொடர்ந்து அட்லி இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் விவேக், யோகி பாபுவும் நடிக்கின்றனர்.

ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய முத்துராஜ் கலைப் பணிகளை மேற்கொள்கிறார்.

வருகிற 20-ந் தேதி சூட்டிங்கை தொடங்கவுள்ளனர்.

விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகவுள்ளதாகவும் அதில் விஜய் கோச்சாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முக்கிய கேரக்டர் ஒன்றில் பரியேறும் பெருமாள் பட நாயகன் கதிர் நடிக்கவிருக்கிறாராம்.

இந்த படத்தை 2019 தீபாவளிக்கு வெளியிட உள்ளனர்.

Actor Kathir team up with Vijay in Thalapathy 63

என் வாழ்வில் மகிழ்ச்சியான தருணம் இது; பாலிவுட்டில் நுழையும் ஜீவா பரவசம்

என் வாழ்வில் மகிழ்ச்சியான தருணம் இது; பாலிவுட்டில் நுழையும் ஜீவா பரவசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor jiivaஇளம் நடிகர்களில் திறமை வாய்ந்தவர் என்ற பெயர் பெற்றவர் நடிகர் ஜீவா…

எண்ணிக்கையை விட என்ன படம் செய்கிறோம் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஜீவாவுக்கு சங்கிலி புங்கிலி , கலகலப்பு 2 என வெற்றிப் படங்கள் அமைந்து நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது.

சமீபத்தில் அவரை சந்தித்து பேசிய போது….

அவரது முதல் ஹிந்தி பிரவேசத்திற்கு வாழ்த்து சொல்லி ஆரம்பித்தோம்.  இந்த 2019 உங்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கை தரும் ஆண்டாக இருக்கும் அல்லவா..

* நிச்சயமாக…2018 லேயே எனக்கு அந்த நம்பிக்கை ஏற்பட்டது…

சங்கிலி புங்கிலி படமும் கலகலப்பு 2 படமும் வெற்றி பெற்று எனக்கு உற்சாகத்தை கொடுத்தது… அதற்கு பிறகு நிறைய கதைகள் கேட்டேன்.

அதில் சிறந்ததாக கொரில்லா, ஜிப்ஸி என இரண்டை மட்டும் தேர்வு செய்தேன்….இந்த இரண்டு படங்களும் ரொம்ப சிறப்பாக வந்திருக்கு.

தற்போது மொத்தம் ஆறு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.. இப்போ சூப்பர்குட் பிலிம்ஸ் 90 வது படமாக SGF 90 படத்தில் நானும் அருள் நிதியும் சேர்ந்து நடிக்க சூட்டிங் விறு விறுப்பா போயிட்டிருக்கு.. .டைட்டில் கூடிய சீக்கிரம் சொல்வோம்…ஜாலியான படமா இருக்கும்..

மல்டி ஸ்டார் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கீங்க…எப்படி செலக்ட் செய்றீங்க…

முதல்ல கதை…அதற்கப்புறம் கேரக்டர்…இரண்டும் பிடிச்சிருந்தா ஓ.கே சொல்வேன்…நல்ல டீம் அமைஞ்சா நடிக்க தயாராயிடுவேன்…அப்படி நடிச்சி ஹிட்டான படம் தான் கலகலப்பு 2..

முதல் முதலா ஹிந்தி படத்துல நடிக்கிறீங்க…அது பற்றி சொல்ல முடியுமா…

· நிச்சயமா…”1983 வேர்ல்ட் கப் ” என்ற படத்துல நடிக்கிறேன்…ரன்வீர் சிங் நடிக்கிறார். மல்டி ஸ்டார் மூவி…பாகுபலி எப்படி ஸ்கிரீன்ல பிரமாண்டத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்துச்சோ. அது மாதிரி இந்த படமும் இருக்கும்…100 கோடிக்கு மேல செலவு செய்து எடுக்குற படம்…

நான் கிரிக்கெட்ல ரொம்ப ஆர்வம் உள்ளவன்…நிறைய கிரிக்கெட் மேட்ச்ல ஜாயின் பண்ணி இருக்கேன்..ஜெயிச்சிருக்கேன். அப்படிப் பட்ட எனக்கு கிடைச்ச முதல் ஹிந்திப் படமே கிரிக்கெட் சம்மந்தப் படம்னு சொல்லும் போது எப்போ காமிரா முன்னாடி நிப்போம்னு ஆர்வமா இருக்கேன்…

1983 ல இந்தியா வேர்ல்ட் கப் ஜெயிச்சி பெருமை தேடிக் கொடுத்த அந்த சம்பவங்கள் தான் கதைக்களம்…

கிட்டத்த 100 நாள் லண்டன்ல ஷுட்டிங்…அதுக்கு இப்பவே தயாராயிட்டு இருக்கோம்..அப்போ அந்த டீம்ல இருந்த நல்ல கிரிக்கெட்டர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சார். அவரது கதாபாத்திரத்தில் நடிக்கிறது எனக்கு பெருமை தானே…தமிழ் நாட்டு வீரர்கள்ன்னு எடுத்துக்கிட்டா நாலு பேர் தானே…

அந்த கேரக்டர் எனக்கு கிடைச்சது பெருமையான விஷயம் தானே…

மே மாசம் ஷுட்டிங் லண்டன்ல ஆரம்பிக்குது…

மிகப் பிரபலமான பெளலரான சந்து வீட்டுக்கே வந்து கோச் கொடுத்துட்டு இருக்கார்…இப்பவே அந்த படத்துக்கு தயாராயிட்டு இருக்கோம்..

லகான் , M.S.டோனி படங்கள் வரிசையில் 1983 வேர்ல்ட் கப் படத்துக்கும் இப்போதே எதிர்பார்ப்பு எகிறி கிடக்கு…

இனிமே யானை மாதிரி நான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் பதியற மாதிரி இருக்கும்..2019 எனக்கு மட்டுமில்ல…சினிமாவுக்கே நல்லது நிறைய நடக்கும்னு நிறைய நம்பிக்கை இருக்கு தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.

சினிமாவுக்கு நல்ல வழி கிடைக்க வேண்டும்… அனைவருக்கும் தை பொங்கல் வாழ்த்துகள்…. உழவு தொழில் சிறக்கட்டும்.. உயரிய நிலை அடையட்டும்…என்றார் ஜீவா..

அமெரிக்காவை அலற விட்ட பேட்ட; ஒரு மில்லியன் வசூலை அள்ளிய ரஜினி

அமெரிக்காவை அலற விட்ட பேட்ட; ஒரு மில்லியன் வசூலை அள்ளிய ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanths Petta collected 1 Million dollars in USகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார் உள்ளிட்டோர் நடித்த ‘பேட்ட’ படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் வெளியானது.

சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சென்னை வசூலில் முதல் இடத்தில் உள்ளது பேட்ட. ஆனால் மற்ற ஏரியாக்களில் படத்தின் நீளம் காரணத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் விஸ்வாசம் முன்னணியில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் ‘பேட்ட’ படம் மூன்று நாட்களில் 1 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

அதாவது ஜனவரி 9ம் தேதியன்றே பிரிமியர் காட்சிகள் திரையிடப்பட்டன. அதில் மட்டும், 5,62,000 யுஎஸ் டாலர்களை வசூலித்துள்ளதாம்.

மேலும் 10 மற்றும் 11ம் தேதிகளில் கிடைத்த வசூலையும் சேர்த்து தற்போது 1 மில்லியன் யுஎஸ் டாலர்களைக் கடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இன்னும் சில தினங்களில் ‘பேட்ட’ படத்தின் வசூல் 2 மில்லியனை எளிதில் கடந்துவிடும் என எதிர்பார்க்கலாம்.

இதற்கு முன்பு ரஜினி நடித்த “எந்திரன், காலா, கபாலி, 2.0” ஆகிய படங்கள் 1 மில்லியன் டாலர் வசூலைக் கடந்துள்ளன.

இதில் ‘2.0’ படம் மட்டும் 5 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.

அதையும் பேட்ட முறியடிக்குமா? என்பது சந்தேகம் தான்.

Rajinikanths Petta collected 1 Million dollars in US

இசைஞானி இளையராஜா இசையில் பாடகியான 9 கல்லூரி மாணவிகள்

இசைஞானி இளையராஜா இசையில் பாடகியான 9 கல்லூரி மாணவிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ilayarajaகல்லூரி மாணவிகள் 9 பேரைத் தான் இசையமைக்கும் படத்தின் மூலம் பாடகியாக திரையுலகில் அறிமுகம் செய்யவிருக்கிறார் இசைஞானி இளையராஜா.

அண்மையில் இசைஞானி இளையராஜா எத்திராஜ் கல்லூரி , ராணி மேரி கல்லூரி என இரண்டு மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே அவரது பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

இந்நிகழ்ச்சியில் பேசியும் பாடியும் அவர் கல கலப்பூட்டினார். கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அப்போது அவரது இசையைப் பற்றி மாணவிகள் சந்தேகங்கள், கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொண்டனர். அப்போது அந்த இரண்டு கல்லூரிகளிலும் மாணவிகள் சிலர் பாடல்கள் பாடியதுடன் அவரது இசையில் தாங்கள் பாடவும் விரும்புவதாகவும் அது தங்கள் கனவென்றும் மாணவிகள் தங்கள் விருப்பத்தை வெளியிட்டிருந்தனர்.

இது இசைஞானி இளையராஜாவின் எண்ணத்தில் அலையடித்திருக்கிறது. அதன் விளைவாக இப்போது இரண்டு கல்லூரியிலும் இசை விருப்பமுள்ள, பாடகியாக ஆசைப்பட்ட மாணவிகள் சிலரை அழைத்துக் குரல் சோதனை வைத்து இருக்கிறார் இசைஞானி. அவர்களில் பாடும் திறன் கொண்ட 9 மாணவிகளைத் தேர்வு செய்து இருக்கிறார்.

இந்த ஒன்பது பேரும் இளையராஜா இசையமைக்கும் அடுத்தடுத்த படங்களில் பாடகியாக அறிமுகமாகிவுள்ளனர். இசைஞானி மூலம் தங்கள் கனவு நினைவானதில் அந்த 9 மாணவிகளும் பூரிப்பில் உள்ளனர்.

விஷால் திருமணம்; தவறான செய்தி

விஷால் திருமணம்; தவறான செய்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vishalநடிகர் விஷாலின் திருமணம் பற்றி இந்த படத்திலிருக்கும் பெண்மணியின் புகைப்படத்துடன் விஷாலின் மணமகள் என்று வெளி வந்து பரவி கொண்டிருக்கும் செய்தி முற்றிலும் தவறானதும் உண்மைக்கு புறம்பானதுமாகும்.

முறைப்படி அறிவிப்பு வெளியாகும்.மேலும் திருமணம் பற்றி அதிகார பூர்வமான அறிவிப்பு அளிக்கப்பட்ட பின் செய்திகளை வெளியிடுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

More Articles
Follows