தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’.. ‘ரஜினி முருகன்’ & ‘சீமராஜா’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் பொன்ராம்.
தற்போது முதன்முறையாக விஜய்சேதுபதியை இயக்கவிருக்கிறார்.
இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஜய்சேதுபதி.
இது மக்கள்செல்வனின் 46வது படமாக உருவாகவுள்ளது.
இந்த பட அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே போலீசாக விஜய்சேதுபதி நடித்த ’சேதுபதி’ படத்தின் சாயல் இல்லாமல், இந்த கேரக்டரில் காமெடி அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த படத்தில் நாயகியாக அனுகீர்த்தி வாஸ் என்பவர் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு அளவில் நடந்த ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Miss India title winner joins VJS 46