ஞானவேல்ராஜாவின் அறிக்கைக்காக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் வெய்டிங்

ஞானவேல்ராஜாவின் அறிக்கைக்காக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் வெய்டிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sk 15 stillsசீமராஜா மற்றும் கனா படங்களை தொடர்ந்து ராஜேஷ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்க, நயன்தாரா மற்றும் ராதிகா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்பட சூட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் படம் குறித்த தகவல்கள் மற்றும் அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் பிறந்த நாள் பிப்ரவரி 17ஆம் தேதி வரவிருப்பதால் அன்று அப்படம் குறித்த தகவல்கள் அல்லது பர்ஸ்ட் லுக் ஏதாவது வருமா? என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இவையில்லாமல் பிரபுதேவா நாயகனாக நடிக்க, நடிகர் ஹரிக்குமார் இயக்கும் தேள் படத்தையும் தயாரித்து வருகிறார் ஞானவேல்ராஜா.

_______________________________
with thanks and regards…

www.filmistreet.com
Formerly known as www.cinecoffee.com

ஜிப்ஸி போன்ற சூப்பர் கதையை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்காது.. ஜீவா

ஜிப்ஸி போன்ற சூப்பர் கதையை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்காது.. ஜீவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jiiva in gypsyஒலிம்பியா மூவில் சார்பில் எஸ் அம்பேத்குமார் தயாரித்திருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியிட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.

இதில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்அம்பேத்குமார், ஒளிப்பதிவாளர் எஸ் கே செல்வகுமார், படத்தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்டா, பாடலாசிரியர் யுகபாரதி, இயக்குநர் ராஜுமுருகன், படத்தின் நாயகன் நடிகர் ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த படத்தில் ஜீவா, நடாசா சிங், ஸன்னி வைய்ன், லால் ஜோஸ், பாடகி சுசீலா ராமன், விக்ராம் சிங், கருணா பிரசாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.இந்த படத்தில் ‘சே ’என்ற பெயரில் குதிரை ஒன்றும் நடித்திருக்கிறது.

நடிகர் ஜீவா பேசுகையில், “ஒரு நாட்டுப்புற பாடகர், இந்தியா முழுவதும் சுற்றித்திரிகிறார். அவருக்கு கிடைத்த அனுபவங்களுக்கு பிறகு அவர் புரட்சிகரமான பாடகராக மாறுகிறார். அவர் ஏன் அப்படி மாறுகிறார் என்றால் அதன் பின்னணியில் ஒரு காதல் இருக்கிறது.” என்று இந்த படத்தின் கதையை ஒன்லைனாக இயக்குநர் ராஜு முருகன் என்னிடம் சொல்லும் போதே எனக்கு பிடித்திருந்தது.

அதிலும் என்னுடைய கேரக்டரைசேஷன் ஆச்சரியப்படுத்தியது. கதையில் ஒரு உண்மை இருந்தது.

மனிதநேயத்தை மதிக்க வேண்டும், இயற்கையும் கொண்டாட வேண்டும் என்பதை உரக்கச் சொல்லும் கதை.

இந்தியா முழுவதும் பயணிக்கும் போது தான் இந்தியா எவ்வளவு அழகானது என்பதையும் இந்த படம் உணர்த்தும். எல்லா மனிதர்களின் உணர்வுகளும் ஒன்று தான் என்பதை அற்புதமாக சொல்லியிருக்கிறார்.

படம் முழுவதும் என்னுடன் ஒரு குதிரை நடித்திருக்கிறது. இந்த படத்திற்காக வித்தியாசமான தோற்றம் ஒன்றையும் இயக்குநர் உருவாக்கியிருந்தார்.

இது போன்ற ஒரு கதையை சூப்பர் குட் பிலிம்ஸில் நிச்சயமாக எடுத்திருக்க மாட்டோம். இதனை துணிந்து எடுத்த தயாரிப்பாளர் அம்பேத் குமாருக்கு நன்றி

கற்றது தமிழ், ஈ போன்ற படங்களில் ஏன் நடிப்பதில்லை? என்று என்னை கேட்ட போது, இந்த கதையை கேட்டதால் இந்த கதையின் மீது நம்பிக்கை வந்தது.

நாகூர், வாரணாசி, ஜோத்பூர், காஷ்மீர் என இந்தியா முழுவதிற்கும் பயணித்து படமாக்கினோம்.

இந்த படம் வெளியான பிறகு ஜீவா ஒரு லக்கியான நடிகர் என்று அனைவரும் பாராட்டுவார்கள். இதற்காக இயக்குநருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த படம் வெற்றிப்படமாக மட்டும் இல்லாமல் என்னுடைய கலையுலக பயணத்தில் முக்கியமான படமாகவும் இருக்கும்.” என்றார்.

ரஜினிகாந்தின் 2வது மகள் சௌந்தர்யாவின் 2வது திருமண தேதி

ரஜினிகாந்தின் 2வது மகள் சௌந்தர்யாவின் 2வது திருமண தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Soundarya Rajini set for second marriage on 10th February 2019ரஜினி நடித்த கோச்சடையான், தனுஷ் நடித்த விஐபி2 உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா.

இவருக்கும் அஸ்வின் என்பவருக்கும், கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்நிலையில் சௌந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் திருமணம் நடக்கவுள்ளது. மணமகன் விசாகன் அமெரிக்காவில் படித்தவர். வஞ்சகர் உலகம் என்ற படத்திலும் 2வது ஹீரோவாக நடித்திருக்கிறார்.

மேலும் படத்தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். இவரும் திருமணமாகி விவாகரத்தானவர் என ஒரு தகவல் பரவுகிறது.

தற்போது, இவர்களின் மறு(திரு)மணம் இரு வீட்டார் சம்மதத்துடன் வருகிற பிப்ரவரி 10ந் தேதி நடைபெற உள்ளது.

இவர்கள் திருமணம் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் மிக எளிமையாக நடக்கவுள்ளதாக தெரிகிறது. நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் எனவும் கூறப்படுகிறது.

Soundarya Rajini set for second marriage on 10th February 2019

Soundarya Rajini set for second marriage on 10th February 2019

திருமண மண்டபமாக மாறியது சென்னை கமலா தியேட்டர்

திருமண மண்டபமாக மாறியது சென்னை கமலா தியேட்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Cheran decorated Kamala Theatre as Marriage hall for his Thirumanam audio launch‘பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘ஆட்டோகிராப்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் சேரன். இதில் ஒரு சில படங்களில் அவர் நாயகனாகவும் நடித்துள்ளார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் ’திருமணம்’ என்ற படத்தை இயக்கி அதில் முக்கிய வேடம் ஒன்றிலும் நடித்துள்ளார்.

இதில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா, காவ்யா சுரேஷ், தம்பி ராமையா, சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், மனோபாலா, பால சரவணன், சீமா என்.நாயர், அனுபமா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.

யுகபாரதி, லலிதானந்த், சேரன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் பாடலாசிரியர் வைரமுத்து, இயக்குநர்கள் பாரதிராஜா, மகேந்திரன், கே.எஸ்.ரவிகுமார், மாரி செல்வராஜ், கார்த்திக் தங்கவேல், செழியன், அருண்ராஜா காமராஜ், கோபி நைனார், நடிகைகள் மீனா, பூணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

படத்தின் தலைப்பு ’திருமணம்’ என்பதல் அதற்கேற்ப வாசலில் பிரம்மாண்டமான அலங்கார தூண்கள் இருக்க, தியேட்டர் நுழை வாயில் வரை தென்னங்கீற்றுகள், வாழை மரம், மேள தாளம், படக்குழுவினர் அனைவரும் பட்டு புடவை, பட்டு வேட்டி சட்டை, பழைய காலத்து குழாய் ஒலிபெருக்கி, அதில் பழைய பாடல்கள் என்று திருமண நிகழ்வை நம் கண் முன் நிறுத்தினார்கள்.

பிரேம்நாத் சிதம்பரம் என்பவர் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் வெளியாகவில்லை.

Cheran decorated Kamala Theatre as Marriage hall for his Thirumanam audio launch

Thirumanam Audio Launch Stillls (43)

விஜய் பிறந்தநாளில் தளபதி 63 படத்தின் மெகா ட்ரீட்

விஜய் பிறந்தநாளில் தளபதி 63 படத்தின் மெகா ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy 63 first look launch on Vijay Birth dayநடிகர்களின் படங்கள் உருவாகும்போது, அவர்கள் பட சம்பந்தப்பட்ட பர்ஸ்ட் லுக், டீசர், ஆடியோ லான்ச் ஆகியவைகளை நடிகர்களின் பிறந்தநாளில் வெளியிடுவதை திரையுலகினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

ரசிகர்களை கவனத்தில் கொண்டு அவர்களை கவர இதுபோன்ற யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

இதுபோல் ‘தளபதி 63’ பட பர்ஸ்ட் லுக்கை விஜய்யின் பிறந்தநாளில் ஜூன் 22 ஆம் தேதி வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன் விஜய்யின் ‘மெர்சல்’ மற்றும் ‘சர்கார்’ ஆகிய பட பர்ஸ்ட் லுக்கை விஜய்யின் பிறந்தநாளில் வெளியிட்டனர்.

அட்லி இயக்கும் தளபதி 63 படத்தில் நயன்தாரா, விவேக், யோகிபாபு, ஆனந்த்ராஜ், உள்ளிட்டோர் நடிக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மெர்சல், சர்கார் படங்களை தொடர்ந்து இப்படத்துக்கும் ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

Thalapathy 63 first look launch on Vijay Birth day

இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணையும் சித்தார்த் & அபிஷேக்பச்சன்

இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணையும் சித்தார்த் & அபிஷேக்பச்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Siddharth and Abhishek Bachchan To Star in Kamals Indian 2லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்க, கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படம் சூட்டிங் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது.

தற்போது கமல் வயதான தோற்றத்தில் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார்களாம்.

சென்னையில் சில காட்சிகளை முடித்துவிட்டு வெளிநாடு செல்கின்றனர். அங்கு 2 மாதங்கள் தொடர்ச்சியாக 8 நாடுகளில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.

இந்த படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இந்நிலையில் சிம்பு நடிக்கவிருந்த கேரக்டரில் சித்தார்த் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அவருக்கு தான் காஜல் ஜோடி என கூறப்படுகிறது.

இவர்களுடன் முக்கிய கேரக்டரில் வில்லனாக அபிஷேக்பச்சன் நடிக்கிறாராம்.

இந்த கேரக்டரில் அஜய் தேவ்கன், பின்னர் அக்‌ஷய்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் மறுக்கவே அபிஷேக்பச்சன் நடிக்கிறாராம்.

Siddharth and Abhishek Bachchan To Star in Kamals Indian 2

More Articles
Follows