*சீமராஜா* சிவகார்த்திகேயனுக்கு எதிராக *யு-டர்ன்* அடிக்கும் சமந்தா

*சீமராஜா* சிவகார்த்திகேயனுக்கு எதிராக *யு-டர்ன்* அடிக்கும் சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Samantha starring Seemaraja and U Turn movies will clash on same dayஇயக்குனர் பவன் குமாரின் முதல் படமான ‘லூசியா’ மூலை முடுக்கெல்லாம் கன்னட சினிமாவை கொண்டு சேர்க்க, அவரது அடுத்த படமும், ஸ்ரத்தா ஸ்ரீநாத் அறிமுகப்படமுமான ‘யு-டர்ன்’, கன்னட சினிமாவின் மீதான ஈர்ப்பை அதிகமாக்கியது.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ‘யு-டர்ன்’ மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் பவன் குமார்.

“ஆரம்பத்தில் இருந்தே படத்தின் மீது தீவிர ஈடுபாட்டை காட்டிய சமந்தா எல்லா புகழும் சேரும். படத்தின் ஒரிஜினல் பதிப்பு ரிலீஸ் ஆகும் முன்பே அவர் இந்த படத்தின் மீது பிணைப்போடு இருந்தார்.

மேலும் படத்தை தானாகவே முன்வந்து விளம்பரப்படுத்தினார்.

குறிப்பாக, அதை ரீமேக் செய்யும்போது, பொருத்தமானவற்றை கண்டறியும் பொறுப்பு மிகப்பெரிய சுமை. ஆனால், சமந்தா அதை எளிதாக்கினார். அந்த கதாபாத்திரத்திற்கு வேண்டிய விஷயங்களை சிறப்பாக செய்வார் என நம்புகிறேன்.

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய அளவிலான ரசிகர்களைக் கொண்டிருப்பதால், என்னுடைய வேலைக்கு மிகப்பெரிய மைலேஜ் கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார் இயக்குனர் பவன் குமார்.

இயக்குனர் பவன் குமார் பற்றி சமந்தா கூறும்போது…

“இந்த படத்தை நான் தேர்ந்தெடுக்கவில்லை, அது தான் என்னைத் தேர்ந்தெடுத்தது. இது போன்ற வாய்ப்புகளை பெறுவது ஒரு ஆசீர்வாதம், அதை தவறவிட்டால், அது வாழ்நாள் முழுக்க குற்ற உணர்வாக இருக்கும்.

நான் அவரது ஒரிஜினல் ‘யு-டர்ன்’ படத்தை பார்த்தபோது, என்னால் அதில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை.

‘யு-டர்ன்’ படம் வேகம், மர்மம் மற்றும் வலுவான ஒரு பிரச்சினை கலந்த ஒரு கலவை. இது நாம் காணும் ஒரு அன்றாட பிரச்சனையாகும், அது தான் இந்த படத்தில் நடிக்க என்னைத் தூண்டியது.

இதில் ஒரு பொதுவான விஷயம், ஒரிஜனல் பதிப்பின் வெற்றியும், அதன் ரீமேக் பதிப்புகளின் வெற்றியும் ஒரே மாதிரியாக இருக்காது.

ஆனால் பவன், முன் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தினார். மேலும் நடிகர்கள் தேர்வும் மிக முக்கியமானது. இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது, கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும்” என்றார்.

ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் மற்றும் வி.ஒய். கம்பைன்ஸ் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி மற்றும் ராம்பாபு பண்டாரு ஆகியோர் படத்தை தயாரிக்கிறார்கள்.

நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். பூர்ண சந்திர தேஜஸ்வி இசையமைக்க, சுரேஷ் ஆறுமுகம் எடிட்டிங்கை கவனிக்கிறார். ஏ.எஸ். பிரகாஷ் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

ஆதி, நரேன், ராகுல் ரவிந்திரன், பூமிகா சாவ்லா மற்றும் பிரபல நடிகர்கள் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இதேநாளில் தான் சமந்தா நாயகியாக நடித்துள்ள சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படமும் வெளியாகவுள்ளது.

எனவே சமந்தாவின் படமே அவரின் படத்துக்கு எதிராக அமையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Samantha starring Seemaraja and U Turn movies will clash on same day

இவர்தான் விஜயகாந்தின் மருமகளா..? வைரலாகும் போட்டோ

இவர்தான் விஜயகாந்தின் மருமகளா..? வைரலாகும் போட்டோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijayakanth son Shanmuga Pandians girl friend photo goes viralசகாப்தம், மதுரைவீரன் படங்களில் நடித்தவர் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன்.

இப்படங்களை தொடர்ந்து தமிழன் என்று சொல் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இதனிடையில் நெதர்லாந்த் நாட்டுக்கு சென்று நடிப்பு பயிற்சி எடுத்து விட்டு சமீபத்தில்தான் சென்னை திரும்பியிருக்கிறார்.

இந்நிலையில், ஒரு பெண்ணுடன் தான் இணைந்திருக்கும் போட்டோவை இணையத்தில் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார் சண்முகப்பாண்டியன்.

அந்த பெண் அவருடன் நெதர்லாந்தில் படித்தவராம்.

சமீபகாலமாகவே இன்ஸ்டாகிராமில் படங்களை பதிவிடும் சண்முக பாண்டியன் அந்தத் தருணங்களை மிஸ் செய்வதாக குறிப்பிட்டு உள்ளார்.

அவர் இவ்வாறு கூறியதால் இவர்தான் உங்கள் கேர்ள் ப்ரெண்டா? கேப்டனின் மருமகளா? என பலரும் கேட்கின்றனர்.

Vijayakanth son Shanmuga Pandians girl friend photo goes viral

எம்ஜிஆர்-ரஜினி ரூட்டில் செல்கிறாரா சிவகார்த்திகேயன்.?

எம்ஜிஆர்-ரஜினி ரூட்டில் செல்கிறாரா சிவகார்த்திகேயன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DjAnnJHU4AA9atQகுறுகிய காலத்தில் தன் அயராத உழைப்பால் முன்னணி நடிகராக உருவெடுத்தவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இதனால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் தமிழகமெங்கும் உள்ளனர்.

இவர் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் சீமராஜா.

இதில் இடம் பெற்றுள்ள வாரேன் வாரேன் சீமராஜா என்ற பாடலின் வரிகள் அடங்கிய வீடியோவை இப்பட இசையமைப்பாளர் இமான் வெளியிட்டுள்ளார்.

இப்பாடலை யுகபாரதி எழுத, திவாகர் மற்றும் கவிதா கோபி இருவரும் பாடியுள்ளனர்.

இந்த பாடல் வரிகளில்…

சிவகார்த்திகேயன் தன் புகழ் பாடுவதாக அமைந்துள்ளது.

பெரும்பாலும் எம்ஜிஆர், ரஜினி ஆகிய பெரிய நடிகர்களுக்குத்தான் இதுபோன்ற பாடல் வரிகள் அமைந்துள்ளது.

எம்ஜிஆருக்கு கண்ணதாசன் மற்றும் வாலி ஆகியோர் அதுபோன்ற பாடல்களை எழுதியிருந்தனர்.

அதுபோல் ரஜினிக்கு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.

அந்த பாடலின் சில வரிகள் இதோ….

நெருப்பான நெல்லையிலே பொறுப்பான மன்னன்டா…
ஊரை சிறப்பாக வைத்திடவே செயலாற்றும் அண்ணன்டா… எனறு பாடல் தொடங்குகிறது.

எம் பேர கேட்க கூடும் அரங்கு அரங்கு…
நான் ஏழைக்கு ஏத்த ஏரோப்ளேனு.. நீ ஒதுங்கு… ஒதுங்கு…

ஊரெல்லாம் எம் படத்த போட்ட ஆகும் டிரெண்டு
நா வாலில்லா பட்டாம்பூச்சி எல்லாருக்கும் ப்ரெண்டு

கால வார 100 பேரு.. ஷேப்பாஃ நீயும் கேம் ஆடு…

என்ற தத்துவ வரிகள் இதில் அதிகமாக இடம் பெற்றுள்ளது.

Whether Sivakarthikeyan started to follow MGR and Rajini route?

vaaren vaaren seemaraja

3வது முறையாக விஜய்யுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்-அட்லி

3வது முறையாக விஜய்யுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்-அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Keerthy Suresh and Atlee to team up with Vijay in his 63rd movie for AGS Productionஏஆர். ரஹ்மான் இசையில் முருகதாஸ் இயக்கும் சர்கார் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இவர் ஏற்கெனவே பைரவா படத்திலும் விஜய்யுடன் ஜோடி போட்டார்.

இந்நிலையில் 3வது முறையாக இந்த ஜோடி மற்றொரு புதிய படத்திலும் இணையவுள்ளதாம்.

சர்கார் படத்தை முடித்துவிட்டு விஜய் நடிக்கவுள்ள படத்திலும் கீர்த்திதான் நாயகி. இப்படத்தை அட்லி இயக்கவுள்ளார்.

தெறி, மெர்சல் ஆகிய 2 படங்களில் விஜய்யை அட்லி இயக்கியிருக்கிறார். தற்போது இவரும் 3வது முறையாக இணைகிறார்.

இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறதாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.

Keerthy Suresh and Atlee to team up with Vijay in his 63rd movie for AGS Production

குயின் ரீமேக் சூட்டிங் நான்கு மொழிகளிலும் நிறைவு பெற்றது

குயின் ரீமேக் சூட்டிங் நான்கு மொழிகளிலும் நிறைவு பெற்றது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Queen remake shooting completed in four languagesகுயீன் ரீமேக் படத்தை மீடியன்ட் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் மனு குமரன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

தமிழில் “பாரிஸ் பாரிஸ்”, தெலுங்கில் “தட்ஸ் மஹாலக்ஷ்மி”, கன்னடத்தில் “பட்டர்ப்ளை”, மலையாளத்தில் “ஜாம் ஜாம்” என்றும் படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, கன்னடத்தில் பருல்யாதவ் மற்றும் மலையாளத்தில் மஞ்சிமா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தமிழ் மற்றும் கன்னடத்தில் நடிகர் மற்றும் இயக்குனரான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். தெலுங்கில் பிரஷாந்த் வர்மா இயக்குகிறார். மலையாளத்தில் நீலகண்டா இயக்குகிறார்.

ஐரோப்பவில் நடைபெற்ற இப்படங்களின் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது.

தயாரிப்பாளர் மனுகுமரன், “படத்தின் தரத்தை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது.

அனைத்து நடிகர்களும் தாங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களின் தன்மையை அறிந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

நடிகர்களின் வித்தியாசமான பரிநாமங்கள் கண்டிப்பாக ரசிகர்களை கவரும்” என்றார்.

இப்படத்தின் துணை தயாரிப்பாளரும் கன்னடத்தில் உருவாகும் “பட்டர்ப்ளை” படத்தின் நாயகியுமான பருல்யாதவ் கூறுகையில்…

“இவ்வளவு பெரிய மற்றும் அரிய வகையான ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் திரைப்படங்களை தயாரிக்கும் திட்டத்தை வெற்றிக்கரமாக முடித்திருப்பது மிகவும் திருப்தியளிப்பதாகவுள்ளது” என்றார்.

அமித் திரிவேதி இந்த நான்கு படங்களுக்கும் இசையமைத்துள்ளார். குயீன் படத்திற்க்கும் இசையமைத்தவர் அமீத் திரிவேதி என்பது குறிப்பிடத்தக்கது.

பாஸ்கோ – சீசர் மற்றும் கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்து கொடுத்துள்ளனர்.

அக்டோபர் மாதம் “பாரிஸ் பாரிஸ்”, “தட்ஸ் மஹாலக்ஷ்மி”, “பட்டர்ப்ளை”, “ஜாம் ஜாம்” படங்கள் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

Queen remake shooting completed in four languages

சிவகார்த்திகேயனுக்கு வில்லியாக ரஜினியின் புதுப்பட நாயகி

சிவகார்த்திகேயனுக்கு வில்லியாக ரஜினியின் புதுப்பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seema rajaபொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘சீமராஜா’.

’24 AM STUDIOS’ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசை.

இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் 3-ஆம் தேதி மதுரையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடக்கவிருக்கிறது.

இந்த படத்தில் சிம்ரன் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார் என்று மட்டும் பேசப்பட்டது.

இப்போது ‘சீமராஜா’வில் சிம்ரன் வில்லியாக நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சிம்ரன் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows