இரண்டு குழந்தைகளை தத்தெடுக்கும் நடிகை.; சமந்தாவின் திடீர் முடிவு

இரண்டு குழந்தைகளை தத்தெடுக்கும் நடிகை.; சமந்தாவின் திடீர் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாக சைதன்யாவை காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார் சமந்தா.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2021-ல் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

அதன் பிறகு நடிகை சமந்தா ரி என்ட்ரி கொடுக்கும் வகையில் அதிரடியான படங்களையும் வேடங்களையும் ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்.

ஒரு பக்கம் கலைச் சேவை செய்து வந்தாலும் மற்றொரு புறம் சமூக சேவையை செய்து வருகிறார் சமந்தா.

பிரதியுஷா என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் சமந்தா ஆதரவில்லாத இரண்டு குழந்தைகளை தத்தெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையில் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா சிகிச்சை பெற்றாலும் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தா

Actress Samantha adopts two childrens

யாரு பார்த்த வேலை இது.? ரஜினியுடன் இணையும் லாரன்ஸ் & சிவகார்த்திகேயன்.?!

யாரு பார்த்த வேலை இது.? ரஜினியுடன் இணையும் லாரன்ஸ் & சிவகார்த்திகேயன்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிக்கும் ‘தலைவர் 170’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

ஞானவேல் இயக்கி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் ரஜினியுடன் அமிதாபச்சன், பகத் பாசில், ராணாகுபதி, மஞ்சு வாரியார். ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தலைவர் 171 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசை அமைக்கிறார்.

இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக லாரன்ஸ் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் மற்றொரு வேடத்தில் ரஜினியுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

ஆனால் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

காரணம் இனிமேல் தான் நான் ‘தலைவர் 171’ பட கதையை எழுத இருக்கிறேன் என சமீபத்தில் தெரிவித்திருந்தார் லோகேஷ்.

மேலும் 2024 ஏப்ரல் மாதத்தில் தான் இதன் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் தற்போது ரஜினியுடன் சிவகார்த்திகேயன் இணைகிறார் என்ற ட்ரெண்டிங் செய்தி உலா வருகிறது.

Sivakarthikeyan and Lawrence in Thalaivar 171

நண்பர்களுக்காக உதவியாளர்களுக்காக தயாரிப்பாளரான லோகேஷ் கனகராஜ்

நண்பர்களுக்காக உதவியாளர்களுக்காக தயாரிப்பாளரான லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜி ஸ்குவாட் படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் சொந்தமாக திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.

இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார்.

‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ என தொடர்ந்து பிளாக் பஸ்டர் வெற்றிப் படங்களை வழங்கி தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநராக உயர்ந்தவர் லோகேஷ் கனகராஜ்.‌ இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகும் ‘தலைவர் 171’ படத்தை இயக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில் இவர் தற்போது ஜி ஸ்குவாட் எனும் பெயரில் சொந்தமாக பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.‌

இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில்…

” என்னுடைய நண்பர்களுக்கும், என்னுடன் பணியாற்றிய உதவியாளர்களுக்கும் அவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையிலும், புதிய பாணிலான திரைப்பட அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையிலும் படங்களை தயாரிக்கவே ஜி ஸ்குவாட் எனும் பட நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். என்னுடைய படைப்புகளுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருவதைப் போல்.. என்னுடைய பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாராகும் திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

அவருடைய பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாராகும் முதல் திரைப்படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனிடையே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சொந்தமாக பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருப்பதை நட்சத்திர நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும், திரையுலகினரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.‌

Director Lokesh Kanagaraj became producer

கருப்பு ஹீரோ ரஜினிகாந்த்.. அய்யனார் விஜயகாந்த்..; ’முனியாண்டியின் முனிப் பாய்ச்சல்’ விழாவில் பேரரசு

கருப்பு ஹீரோ ரஜினிகாந்த்.. அய்யனார் விஜயகாந்த்..; ’முனியாண்டியின் முனிப் பாய்ச்சல்’ விழாவில் பேரரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீ ஆண்டாள் மூவிஸ் சார்பில் பி. வீர அமிர்தராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ராஜா முகம்மது இயக்கத்தில் அறிமுக நாயகன் ஜெயகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “ முனியாண்டியின் முனி பாய்ச்சல்”.

இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இயக்குநர் பேரரசு பேசும் போது…

அண்ணன் ஆர்.வி உதயகுமார் என்னை பக்திமான் என்று சொல்லிவிட்டு அவர் தான் பக்தியைப் பற்றி அதிகமாக பேசி இருக்கிறார். இப்படத்தின் சிறப்பு ”முனியாண்டியின் முனி பாய்ச்சல் இயக்கம் ராஜா முகம்மது”. இதுதான் சிறப்பு.

இது சினிமாவில் மட்டுமே சாத்தியம். சினிமாவில் மதம் சாதி கிடையாது. ஜெயகாந்த் ராஜா முகம்மது கூட்டணியை பார்க்கும் போது எனக்கு விஜயகாந்த், இப்ராஹிம் ராவுத்தர் கூட்டணி ஞாபகம் வருகிறது.

ராவுத்தர் விஜயகாந்த் வளர்ச்சியில் மிக முக்கியமானவர், தன் நண்பனின் வெற்றிக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். அவர்களுக்கு இடையில் மதம் இல்லை.

நட்பு மட்டுமே இருந்தது. குலதெய்வத்தின் பெயர் ரேஷன்கார்டில் இருக்காது, ஆனால் எல்லாமே அந்த தெய்வம் தான். என் குலதெய்வத்தை கும்பிடும் போது நானே பூசாரி ஆகிவிடுவேன்.

விருதுநகர் பக்கம் எல்லாம் முனியாண்டி தெய்வத்திற்கு பெரிய வழிபாடுகள் நடக்கும். குல தெய்வத்தை கும்பிடும் போது நாமே தீபம் காட்டலாம், பூஜை செய்யலாம். பெரிய கோவில்களில் இதை செய்வதற்கு பூசாரியை வைத்திருப்பார்கள்.

சிலர் கடவுளை நம்புபவன் முட்டாள் என்பார்கள். முனியாண்டியை நம்புபவர்கள் முட்டாள் என்று சொல்லிப் பாருங்கள். மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் முனியாண்டி குடும்பத்தில் ஒருவராக பார்க்கப்படுபவர். யார் எதுவும் சொல்லமாட்டார்களோ அவர்களை ஏதாவது சொல்லிவிட்டு போய்விடுவார்கள்.

விஜயகாந்த் அவர்கள் தருமபுரி படத்தில் முனியாண்டி வேஷம் போட்டுவிட்டு வந்து நிற்கும் போது அய்யனார் போலவே இருந்தார். இந்த நாயகன் ஜெயகாந்திற்கும் முனியாண்டி வேஷம் சிறப்பாக பொருந்தி இருக்கிறது.

கருப்பாக இருப்பவர்களும் பெரிய ஹீரோக்கள் ஆகிவிட முடியும் என்று ரஜினிகாந்த் நிருபித்தார். அதிலிருந்து கருப்பான ஹீரோக்களும் ஜெயிக்க முடியும் என்கின்ற நம்பிக்கை வந்திருக்கிறது.

பாரதிராஜா இயக்கத்திற்கு வந்தப் பிறகு தான் எங்களைப் போன்று கிராமத்தில் இருந்து வருபவர்களுக்கு இயக்கத்திற்கான கதவு திறந்தது. செளந்தர்யன் பார்க்க சைலண்டாக இருப்பார். ஆனால் பாடல்களில் பட்டையை கிளப்பிவிடுவார். அப்படித்தான் இப்படத்தின் பாடல்களும் இருக்கிறது. பாடல்களில் முனியை விட காமம் மற்றும் காதலின் கனி அதிகமாக தெரிகிறது. இது போன்ற பாடல்களில் பாடலாசிரியர் ஸ்நேகன் பின்னி எடுப்பார். இதிலும் அப்படியே செய்திருக்கிறார்.

தயாரிப்பாளர் விருதுநகரை சேர்ந்தவர் என்று சொன்னார்கள். அது காமராஜர் பிறந்த ஊர். அதை நினைத்தே அவர் பெருமைப்பட வேண்டும். இன்னும் முதல்வராக வர விரும்புபவர்கள் எல்லாம் காமராஜர் ஆட்சியை கொடுப்போம் என்று தான் சொல்கிறார்கள். அவர் ஒருவரே என்றும் முதல்வர்களுக்கான அரிச்சுவடி. நடிகை மீரா ராஜ் சிறப்பாக நடனம் ஆடி நடித்திருக்கிறார்.

பாடலில் அவரின் நலினங்கள் சிறப்பாக இருந்தது. இப்பொழுதெல்லாம் நாயகிகளைப் பற்றி பேசவே பயமாக இருக்கிறது. எனவே சகோதரி மீரா ராஜ் அவர்களை சகோதரன் பேரரசு வாழ்த்துக்கிறேன்.

ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று பழமொழி சொல்வார்கள். இப்பொழுதெல்லாம் கூத்தாடி ரெண்டு பட்டால், ஊருக்கு கொண்டாட்டமாகி விடுகிறது.

நாம் எல்லோரும் ஒரே குடும்பம். நாம் நமக்குள் இப்படி சண்டையிடுவது நம் வளர்ச்சிக்கு நல்லதல்ல.. இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று பேசினார்.

இவ்விழாவில் பேசிய இயக்குநர் ராஜாமுகம்மது தனது வரவேற்ப்புரையில் பேசும் போது…

அளவற்ற அருளாளன் இறைவனின் திருப்பெயரால் இந்த உரையை துவங்குகிறேன். எங்கள் தயாரிப்பாளர் வீர அமிர்தராஜ் மற்றும் அவரின் மனைவி திலகவதி இல்லை என்றால் இந்த திரைப்படம் கிடையாது.

மதுரையில் என் நண்பன் ஜெயகாந்த் உடன் பாண்டி கோவிலில் அமர்ந்து அந்த காவல் தெய்வத்தின் கதைகளையும் அங்கு நடந்த அதிசய நிகழ்வுகளைப் பற்றியும் பேசும் போது, இந்த தெய்வத்தின் கதையை ஏன் நாம் திரைப்படத்தில் கொண்டு வரக்கூடாது. இதைப் பற்றி யாருமே பேசியதில்லையே என்ற எண்ணம் தோன்றியது. எனக்குத் தெரிந்து வருடத்தின் 365 நாட்களும் கடா வெட்டி பூஜை நடக்கின்ற கோவில் முனியாண்டி கோவிலாகத்தான் இருக்கும். சிலருக்கு நம்பிக்கை இருக்கும் சிலருக்கு நம்பிக்கை இருக்காது. ஆனால் நான் நேரில் பார்த்து இருக்கிறேன்.

அந்த கோவிலின் பூசாரி அருள் வாக்கு சொல்லும் போது அவரின் குரல் மாறிப் போய், வேறொரு நபராகவே என் கண்களுக்குத் தெரிவார்.
நாங்கள் படம் தொடர்பான எல்லா வேலைகளுக்கும் பாண்டி கோவிலில் முதலில் உத்தரவு கேட்போம். என் நண்பனின் கண்களில் மூன்று தயாரிப்பாளரைக் காட்டியது.

அதில் முதலாமானவர் தான் எங்கள் தயாரிப்பாளர் வீர அமிர்தராஜ். எங்கள் தயாரிப்பாளருக்கு குல தெய்வம் முனியாண்டி தான். அவர்கள் இப்படத்தை தயாரிப்பதற்கு மிக முக்கிய காரணமும் அதுதான்.

தயாரிப்பாளர் இப்படத்தைப் பணத்துக்காக தயாரிக்கவில்லை என்றாலும் அவருக்கு இப்படம் நல்ல லாபத்தையும் கொடுக்க வேண்டும். நாயகனாக ஜெயகாந்திற்கும், இயக்குநரான எனக்கும் நல்ல எதிர்காலத்தைக் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகிறோம். அது அப்படியே நடக்கும் என்றும் நம்புகிறோம்” என்று பேசினார்.

நாயகன் ஜெயகாந்த் பேசும் போது…

அனைவருக்கும் வணக்கம். இப்படம் உருவாக முதற்காரணம் பாண்டி கோவில் தான். நான் எல்லா முடிவுகளையும் பாண்டி கோவிலில் வைத்து தான் எடுப்பேன். அமாவாசை, பெளர்ணமி நாட்களில் நான் எப்போதும் பாண்டி கோவிலில் தான் இருப்பேன். என்னை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று ராஜா முகம்மது வரும் போது, தயாரிப்பாளர் யார் என்று தெரிந்து கொள்ள பாண்டி கோவிலில் அழுது வேண்டினோம்.

முனி எங்களுக்கு தயாரிப்பாளரைக் காட்டியது. இப்படம் வெற்றி பெற வேண்டும் என்று நானும் இயக்குநரும் வேண்டி இருக்கிறோம். கண்டிப்பாக திரைப்படம் வெற்றிபெறும் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது. அனைவருக்கும் நன்றி.” என்று பேசினார்.

Black skin Rajinikanth Ayyanar Vijayakanth Says Perarasu

தாணு – சூர்யா கூட்டணியின் ‘வாடிவாசல்’.; வெற்றிமாறன் – அமீர் திடீர் சந்திப்பு

தாணு – சூர்யா கூட்டணியின் ‘வாடிவாசல்’.; வெற்றிமாறன் – அமீர் திடீர் சந்திப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் அமீர் தயாரித்து அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘மாயவலை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வெற்றிமாறன் பேசும்போது தான் இயக்கி வரும் வாடிவாசல் படத்தில் சூர்யாவுடன் இணைந்து அமீர் நடிக்கிறார் என்பதை தெரிவித்து இருந்தார்.

இது சூர்யா மற்றும் அமீர் மோதலுக்கு முற்றுப்புள்ளியாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் அமீரின் கேரக்டர் குறித்து பேச வெற்றிமாறன் அவரை சந்தித்து கதையை விவரித்து பேசியுள்ளார்.

இவர்கள் சந்திப்பின்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vettrimaran and Ameer Meeting regarding Vaadivasal

ஜப்பான் ரசிகர்களும் கொண்டாடிய ரஜினியின் ‘முத்து’ ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜப்பான் ரசிகர்களும் கொண்டாடிய ரஜினியின் ‘முத்து’ ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1995 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிய ரஜினி திரைப்படம் ‘முத்து’.

கே எஸ் ரவிக்குமார் இயக்கிய இந்த படத்தை கவிதாலயா நிறுவனம் சார்பாக இயக்குனர் கே பாலச்சந்தர் தயாரித்திருந்தார்.

இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். ரஜினி படத்திற்கு அவர் இசையமைத்த முதல் படம் இதுதான்.

இந்தப் படம் வெளியாவதற்கு முன் பாடல் கேசட் வெளியானது. இது ரஜினி படத்தின் பாடல் போல அல்ல என்று ரசிகர்கள் அப்போது கோபமடைந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதன் பின்னர் படம் வெளியாகி ஒருவன் ஒருவன் முதலாளி மற்றும் தில்லானா தில்லானா ஆகிய பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

ரஜினி, மீனா, ராதாரவி, பொன்னம்பலம், வடிவேலு, செந்தில், சரத்பாபு, விசித்ரா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் தமிழகத்தில் மட்டுமல்ல ஜப்பான் நாட்டிலும் பட்டைய கிளப்பியது.

கிட்டத்தட்ட இந்த படம் வெளியாகி 28 ஆண்டுகள் ஆனாலும் இன்று வரை ஜப்பானில் ரஜினிக்கு ரசிகர் மன்றங்களும் பெருமளவில் ரசிகர் பட்டாளமும் உள்ளது.

இந்த நிலையில் தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த டிசம்பர் மாதம் டிசம்பர் எட்டாம் தேதி முத்து படத்தை ரிலீஸ் செய்கிறது கவிதாலயா நிறுவனம்.

முத்து

Rajini Meena starrer Muthu rerelease on 8th December 2023

More Articles
Follows