கபாலி க்ளைமாக்ஸ்க்கு ரஜினி ஓகே சொல்ல இதான் காரணம்

கபாலி க்ளைமாக்ஸ்க்கு ரஜினி ஓகே சொல்ல இதான் காரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali press meetரஜினிகாந்த் நடித்து வசூலில் சக்கை போடு போடும் கபாலி படத்தின் வெற்றி குறித்து பேச பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

இதற்கான சந்திப்பு, சென்னையிலுள்ள லீ மெரிடியன் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குனர் ரஞ்சித் பேசியதாவது….

“இந்த கதையில் நடிக்க ஒப்புக்கொண்ட ரஜினி சாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

க்ளைமாக்ஸ் காட்சிக்கு ரஜினி எடுத்த தைரியமான முடிவே காரணம்.

டைகர் ஹரி துப்பாக்கியால் சுடும் காட்சியை நீக்க முடிவு செய்தோம்.

ஆனால் படம் பார்த்துவிட்டு சென்ற ரஜினி, இரண்டு மணி நேரம் கழித்து போன் செய்து அந்த க்ளைமாக்ஸ் நிச்சயம் இருக்கட்டும்.

அது இல்லையென்றால் வழக்கமான ரஜினி படமாக அது மாறிவிடும்.” என்றார்.

ஆறு நாட்களில் அசர வைக்கும் கபாலி வசூல்; நெருங்குடா… முடியுமா.?

ஆறு நாட்களில் அசர வைக்கும் கபாலி வசூல்; நெருங்குடா… முடியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali cross rs 320c in 6 days worldwideகபாலி.. பேர கேட்டாலே பாக்ஸ் ஆபிஸே ச்சும்மா அதிருமுல்ல… என்கிற அளவுக்கு வசூல் மழை பொழிந்து வருகிறது.

இப்படம் வெளியாகி ஆறு நாட்களை கடந்துள்ள நிலையில் இப்படத்தின் வசூல் என்ன? என்பதை தயாரிப்பாளர் தாணுவே உறுதி செய்துள்ளார்.

கபாலி படத்தின் சக்ஸஸ் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

ரஜினி, ராதிகா ஆப்தே மற்றும் தன்ஷிகா தவிர மற்ற நட்சத்திரங்கள் அனைவரும் அங்கே ஆஜர்.

இப்படம் உலகம் முழுவதும் 6 நாட்களில் ரூ 320 கோடி வரை வசூல் செய்துள்ளதாக இச்சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.

மேலும் சென்னையில் மட்டும் 7 நாட்களில் ரூ. 7 கோடியை எட்டியுள்ளதாம்.

இப்படத்தின் வசூலை வேறு படங்கள் நெருங்குமா? முடியுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஒருவேளை அடுத்த ரஜினி படம் வரும்போது சாத்தியமாகலாம்.

ஜி.வி.பிரகாஷ்-ராஜேஷ் கூட்டணியில் இணையும் சந்தானம்

ஜி.வி.பிரகாஷ்-ராஜேஷ் கூட்டணியில் இணையும் சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor santhanamஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘ப்ரூஸ் லீ’ மற்றும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.

ராஜேஷ் இயக்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் ஆனந்தி, நிக்கி கல்ராணி, ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் இப்படக் காட்சிகளை மலேசியாவில் படமாக்கினர்.

இந்நிலையில் இப்படத்தில் ராஜேஷின் ஆஸ்தான நடிகர் சந்தானம் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறாராம்.

என்னதான் தனி ஹீரோவாக சந்தானம் மணக்க ஆரம்பித்தாலும் தனக்கு திருப்புமுனை கொடுத்த இயக்குனரின் படத்தில் நடிப்பது பாராட்டுக்குரியதுதான்.

விரைவில் ஜெய்-அஞ்சலி காதல் திருமணம்..?

விரைவில் ஜெய்-அஞ்சலி காதல் திருமணம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jai anjaliசினிமாவில் இணைந்து நடிக்கும்போது ஒரு சில நடிகர், நடிகைகளுக்கு காதல் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி விடுகிறது.

எனவே திரையில் இணைந்த இவர்கள் நிஜ வாழ்விலும் இணைகிறார்கள்.

இதுபோல் பல நட்சத்திர தம்பதிகளை நாம் பார்த்திருக்கிறோம்.

தற்போது நட்சத்திர தம்பதிகள் ஜெய் மற்றும் அஞ்சலி இணைய வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

எங்கேயும் எப்போதும் படத்தை தொடர்ந்து மீண்டும் பலூன் படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

இந்நிலையில் இவர்கள் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக தனியார் டிவி ஒன்று தெரிவித்துள்ளது.

அஜித்துக்காக விக்ரமுக்கு கல்தா கொடுக்கும் காஜல்?

அஜித்துக்காக விக்ரமுக்கு கல்தா கொடுக்கும் காஜல்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kajal agarwalதிரு இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கருடா படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க கமிட் ஆனார்.

சில்வர்லைன் பிலிம் பேக்டரி இப்படத்தை தயாரிக்கவுள்ளது.

ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கப்படாமல் தாமதம் ஆகிவருகிறது.

இதனிடையில் சிவா இயக்கும் அஜித்தின் ஏகே 57 படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் காஜல்.

இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் துவங்கவுள்ளதால் கால்ஷீட் பிரச்சினை ஏற்படும் என தெரிகிறது.

எனவே அஜித் படத்தில் நடிக்கவிருப்பதால் விக்ரம் படத்தில் இருந்து காஜல் அகர்வால் விலகக்கூடும் எனத் தெரிகிறது.

களம் இறங்கும் 3 ஹீரோக்கள்… சிக்கலில் சிவகார்த்திகேயன் படம்

களம் இறங்கும் 3 ஹீரோக்கள்… சிக்கலில் சிவகார்த்திகேயன் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

remo sivakarthikeyan and keerthiசிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ரெமோ படம் அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஜீவா நடித்துள்ள கவலை வேண்டாம் படமும் அதே நாளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வந்தன.

இரண்டு படங்கள் என்றால் ஓரளவு கணிசமான தியேட்டர்கள் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையில் இருந்த ரெமோ குழுவினருக்கு தற்போது பெரும் சிக்கல் உருவாகியுள்ளது.

இதே நாளில் விஷால் நடித்துவரும் கத்தி சண்டை மற்றும் ஜெயம் ரவி நடித்துள்ள போகன் படமும் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இன்னும் வேறு படங்கள் களத்தில் குதித்தால் தியேட்டர்களின் எண்ணிக்கையும் வசூலும் குறைய வாய்ப்புள்ளது.

More Articles
Follows