காலா ரிலீசுக்கு முன்பே ரூ. 125 கோடி கல்லா கட்டிய தனுஷ்

Rajinis Kaala got nearly Rs 125 Crores profit before releaseகபாலி படத்தை அடுத்து ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் ரஜினிகாந்த்.

இதனிடையில் கபாலி இயக்குனர் ரஞ்சித்துக்கு மற்றொரு படமான காலா பட வாய்ப்பை வழங்கினார் ரஜினி.

இரண்டு படத்தின் சூட்டிங் மற்றும் டப்பிங் பணிகள் நிறைவு பெற்றுவிட்டது.

இதில் லைகா தயாரித்து வரும் 2.0 படத்தில் நிறைய கிராபிக்ஸ் பணிகள் இருப்பதால் பட வெளியீடு தள்ளிக் கொண்டே போக, காலா படத்தை வெளியிட முடிவு செய்தார் தயாரிப்பாளர் தனுஷ்.

எனவே அப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றது லைகா நிறுவனம்.

ரூ. 75 கோடியில் தயாரிக்கப்பட்ட காலா படத்தின் வெளியீட்டு உரிமை மட்டும் ரூ. 125 கோடியை தொட்டது.

வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்தனர்.

இந்நிலையில் காலா படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி (ஸ்டார் குரூப்) நிறுவனம் ரூ. 75 கோடிக்கு பெற்று உள்ளது.

விரைவில் ஐபிஎல் 2018 போட்டிகள் தொடங்கவிருப்பதால், காலா படத்தின் விளம்பரங்களை அத்துடன் ஒளிப்பரப்ப திட்டமிட்டுள்ளதாம் ஸ்டார் குழுமம்.

ஆக மொத்தம் காலா படம் இதுவரை ரூ. 200 கோடிக்கு விற்பனையாகி விட்டது.

படத்தின் பட்ஜெட்டான ரூ. 75 கோடியை கழித்தால் இதுவரை ரூ. 125 கோடி வரை லாபத்தை பெற்றுள்ளார் தயாரிப்பாளர் தனுஷ்.

படத்தின் பட்ஜெட்டில் ரஜினிகாந்தின் சம்பளம் சேர்க்கப்படவில்லை என்கின்றனர் கோலிவுட் வல்லுனர்கள்.

Rajinis Kaala got nearly Rs 125 Crores profit before release

Overall Rating : Not available

Latest Post