‘நட்சத்திரம் நகர்கிறது’ நிறைவு..; மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ‘டான்ஸிங் ரோஸ்’

‘நட்சத்திரம் நகர்கிறது’ நிறைவு..; மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ‘டான்ஸிங் ரோஸ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காலா படத்தை தொடர்ந்து ரஞ்சித் இயக்கிய ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் ஓடிடியில் வெளியானது.

ஆர்யா நடித்திருந்த இந்த படம் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது.

தற்போது ’நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கி வந்தார் ரஞ்சித்.

இதில் காளிதாஸ் ஜெயராமன், துஷாரா, கலையரசன், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர்.

சார்பட்டா பரம்பரை பட ‘டான்ஸிங் ரோஸ்’ ஆக நடித்த ஷபீர் கல்லரக்கல் முக்கிய வேடத்தல் நடித்துள்ளார்.

அறிமுக இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது.

படப்பிடிப்பு நிறைவு பெற்றதை அடுத்து ரஞ்சித் மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்த படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஸ்டூடீயோ க்ரீன் தயாரிப்பில் விக்ரம் நடிக்கவுள்ள படத்தை அடுத்து ரஞ்சித் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dancing rose is part of Pa Ranjith’s next

‘மாநாடு’ இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன் – ராஷ்மிகா

‘மாநாடு’ இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன் – ராஷ்மிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் 20வது படமாக உருவாகும் படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கவுள்ளார். இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார் எனத் தெரிகிறது.

இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் பட சூட்டிங் தள்ளிப் போகலாம்.

இந்த நிலையில் இதில் மாநாடு இயக்குனர் வெங்கட் பிரபு இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ள நிலையில் இதன் தமிழ் பதிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இணைகிறாராம்.

எனவே இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Sivakarthikeyan and Rashmika joins for Venkat Prabhu’s next

விக்ரமின் ‘கோப்ரா’ பட சூப்பர் அப்டேட் கொடுத்த அஜய் ஞானமுத்து

விக்ரமின் ‘கோப்ரா’ பட சூப்பர் அப்டேட் கொடுத்த அஜய் ஞானமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் நடிப்பில் பெரும் பொருட்செலவில் அஜய் ஞானமுத்து இயக்கி வரும் படம் ‘கோப்ரா’.

இந்த படத்தில் பல கெட்டப்களில் நடித்துள்ளார் விக்ரம்.

ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கொரோனா முதல் அலை சமயத்தில் இப்பட சூட்டிங்கை ரஷ்யாவில் நடந்தி வந்தனர்.

ரஷ்யாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் திடீரென இந்தியா திரும்பினர்.

பின்னர் சென்னையில் உள்ள காட்சிகளை படமாக்கினர்.

இந்த நிலையில் நேற்று ஜனவரி 5ஆம் தேதி கோப்ரா பட சூட்டிங் நிறைவடைந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது போஸ்ட் புரொடக்சன்கள் பணிகள் தொடங்கியுள்ளதாம்.

Chiyaan Vikram wraps up his shoot for #Cobra says director by Ajay Gnanamuthu

2022ல் என் பர்ஸ்ட் கெஸ்ட் கொரோனா..; அருண்விஜய்யை அடுத்து மீனாவுக்கும் பாசிட்டிவ்

2022ல் என் பர்ஸ்ட் கெஸ்ட் கொரோனா..; அருண்விஜய்யை அடுத்து மீனாவுக்கும் பாசிட்டிவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று ஜனவரி 5ஆம் தேதி தனக்கு கொரோனா தொற்று உறுதியானதாக நடிகர் அருண்விஜய் தன் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது…

‘எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவரின் அறிவுரைப்படி அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி என் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரது அன்புக்கும் நன்றி’

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது நடிகை மீனாவும் அவரது குடும்பத்தினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மீனா.

அவரது பதிவில்…

“2022ஆம் ஆண்டில் என் வீட்டுக்கு வந்த முதல் விருந்தாளி, மிஸ்டர் கரோனா. என் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் அதற்குப் பிடித்துவிட்டது. ஆனால், நான் அதை என் வீட்டில் தங்கிட அனுமதிக்க மாட்டேன். கவனமாக இருக்கவும் மக்களே. பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள்” என்று மீனா பதிவிட்டுள்ளார்.

நடிகை மீனாவின் மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக தெறி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Meena and Actor Arun Vijay Tested Covid Positive

பாலிவுட் நடிகை பனிதாவுடன் விக்ரம் மகன் துருவ் டேட்டிங்

பாலிவுட் நடிகை பனிதாவுடன் விக்ரம் மகன் துருவ் டேட்டிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டான அர்ஜூன் ரெட்டி பட ரீமேக் (ஆதித்ய வர்மா) மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகர் துருவ். இவர் பிரபல நடிகர் விக்ரமின் மகன் ஆவார்.

தற்போது தன் தந்தை விக்ரமுடன் இணைந்து ‘மகான்’ படத்தில் நடித்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்த படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாலிவுட் நடிகை பனிதா சந்துடன் துருவ் எடுத்துள்ள போட்டோவை தன் சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

துபாய் நாட்டில் புர்ஜ் காலிபா அருகில் இவர்கள் ஓட்டல் அறையில் தங்கியுள்ளதாக தெரிகிறது.

மேலும் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் லவ்வர்ஸ்..? அல்லது டேட்டிங் செய்கிறீர்களா? என கமெண்டில் கேட்டு வருகின்றனர்.

ஆனால் துருவ் பனிதா தரப்பில் எந்த பதிலும் இல்லை.

2021ல் ‘சர்தார் உத்தம்’ என்ற படத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல் உடன் பனிதா சந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Is Dhruv dating Banita – his female lead in real life?

அஜித்துடன் மோதும் கார்த்தி..; மெட்ராஸ் படம் ‘நான் மகான் அல்ல பார்ட் 2’ ஆக மாறியது..; புரியலேன்னா இந்த நியூஸ் படிங்க

அஜித்துடன் மோதும் கார்த்தி..; மெட்ராஸ் படம் ‘நான் மகான் அல்ல பார்ட் 2’ ஆக மாறியது..; புரியலேன்னா இந்த நியூஸ் படிங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் கபாலி படத்தை ரஞ்சித் இயக்க முக்கிய காரணமாக அமைந்த படம் மெட்ராஸ்.

கார்த்தி, கலையரசன், கேத்ரீன் தெரசா, ரித்விகா நடித்த இந்த படத்தை ரஞ்சித் இயக்கியிருந்தார். ஸ்டூடியோ க்ரீன் தயாரித்த இந்த படம் சிட்டி முதல் பட்டி தொட்டி வரை பட்டைய கிளப்பியது.

இதில் வடசென்னை மக்களின் வாழ்வியலை தத்ரூபமாக காட்டியிருந்தார். ஒரேயொரு சுவரை வைத்து மொத்த படத்தின் கதைக்களத்தை அமைத்திருந்தார்.

தற்போது 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தை தயாரித்த ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் டப் செய்து தெலுங்கில் ரிலீஸ் செய்கிறது.

ஜனவரி 13ல் இந்த படம் தெலுங்கில் ரிலீசாகிறது. இதே நாளில்தான் அஜித்தின் வலிமை படமும் தமிழ் தெலுங்கு ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.

இதற்கு முன்பு கார்த்தி நடித்த ‘நான் மகான் அல்ல’ படத்தை 2010ம் ஆண்டில் ‘நா பேரு சிவா’ என்ற பெயரில் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்டனர்.

கார்த்திக்கும் அந்த படத்திற்கும் தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்த நிலையில் தற்போது அதே பெயரில் ‘பார்ட் 2’ என சேர்த்து ‘நா பேரு சிவா 2’ என ‘மெட்ராஸ்’ தெலுங்கு டப்பிங் படத்தை வெளியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Karthi to clash with Ajith this year 2022

More Articles
Follows