ரஜினி & அஜித் பட நாயகிகளுடன் பாலிவுட்டில் இணையும் மஹத்

ரஜினி & அஜித் பட நாயகிகளுடன் பாலிவுட்டில் இணையும் மஹத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வரும் மஹத் ராகவேந்திரா, பாலிவுட்டில் சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி நடிப்பில், இயக்குநர் சத்ரம் ரமணி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகும் ‘டபுள் எக்ஸ்எல்’ படம் மூலமாக இந்தியில் நாயகனாக அறிமுகமாகிறார்.

அஜித்குமார் நடிப்பில் ‘மங்காத்தா’ படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான மஹத், பின் ‘பிக்பாஸ்’ மூலம் தமிழகமெங்கும் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

தற்போது அவரது நடிப்பில் வெளியான ‘ஈமோஜி’ வலைத்தொடர் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை குவித்தது. ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பில் முத்திரை பதித்து வரும் மஹத், தமிழில் நாயகனாக சில திரைப்படங்களில் நடித்து வரும் வேளையில், அதிரடியாக பிரமாண்டமான இந்தி திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

உலகில் அனைவருக்கும் தன் உடல் மேல் விமர்சனங்கள் இருக்கும். தான் அழகில்லை என்ற எண்ணம் இருக்கும் அதனை உடைக்கும் வகையில், மாறுபட்ட கருப்பொருளில் இப்படம் உருவாகிறது.

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

(ரஜினியுடன் ‘லிங்கா’ படத்தில் நடித்தவர் சோனாக்‌ஷி சின்ஹா. ரஜினியுடன் ‘காலா’ & அஜித்துடன் ‘வலிமை’ ஆகிய படங்களில் நடித்தவர் ஹீமா குரேஷி என்பது குறிப்பிடத்தக்கது.)

முதாஸ்ஸர் அஜிஸ் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்கும், இப்படத்தை சத்ரம் ரமணி இயக்குகிறார். ஜாகீர் இக்பால் மற்றொரு நாயகனாக நடிக்கிறார்.

படம் குறித்து நடிகர் மஹத் ராகவேந்திரா கூறியதாவது… ‘

‘சினிமா என்பது , பார்வையாளர்களை மகிழ்விப்பதை விட அவர்களுக்குள் ஒரு பெரும் தாக்கத்தை உருவாக்கும் காரணி என நான் நம்புகிறேன். எனக்கு நீண்ட காலமாக ஹிந்திப் பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருந்தது, ஆனால் இந்த ஸ்கிரிப்டைப் படித்தபோது, ​​இது எனக்கான படம் என்று தெரிந்தது.

சத்ரம் ரமணிதான் எனக்கு இந்தப் படத்தைத் தந்தார். என்னை நடிக்க வைக்க நினைத்ததற்கு அவருக்கு நன்றி. நான் கேட்டதிலேயே இதயத்தை உருக்கும் அற்புதமான கதை இது. எனக்குத் தெரிந்த ஒவ்வொரு ஆணும் அல்லது பெண்ணும் ஏதோ ஒரு கட்டத்தில் தங்கள் உடலைப் பற்றி வெட்கப்படுகிறார்கள்.

கொஞ்சம் குண்டாக இருப்பது, ஒருவரின் தோலின் நிறம், அவர்களின் உயரம் மற்றும் அவர்கள் கண்மூடித்தனமாக நம்பும் அழகு எனும் மாயை என அனைத்தையும் உலகம் பார்க்கும்படி கேள்வி கேட்கிறது இப்படம். இப்படத்தில் முழு அர்ப்பணிப்போடு உழைத்திருக்கும் இயக்குநர் சத்ரம் ரமணி மற்றும் முதாஸ்ஸர் அஜிஸ், சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி ஆகியோருடன் பணிபுரிந்தது அற்புதமான அனுபவம்.

ஒரு ஆணோ, பெண்ணோ அவர்கள் யாராக இருக்கிறார்கள், என்னவாக இருக்கிறார்கள் என்பதற்காக மட்டுமே அவர்கள் கொண்டாடப்பட வேண்டும், நேசிக்கப்பட வேண்டும் என்பதை இந்தப் படம் அழுத்தமாக சொல்லும்” என்றார்.

மேலும் மஹத் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து கூறுகையில்…

”ஒரு கதாப்பாத்திரத்தின் திரை நேரத்தை விட அது மக்கள் மனதில் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன என்பதே முக்கியம். அந்த வகையில் இப்படம் எனக்கு மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கும். சத்ரம் ரமணி இயக்கத்தில் நம் காலத்தின் மாபெரும் நாயகிகள் இருவர் இணைந்து நடிக்கும் அற்புதமான படைப்பாக இப்படம் இருக்கும். நான் எப்போதும் சுவாரஸ்யமான கதாபாத்திரங்களையே தேடுகிறேன்.

தமிழ் படங்களில் 10 வருடங்களாக நடித்து வருகிறேன். இந்த ஹிந்தி படம் எனக்கு ஒரு புதிய சவாலையும் புதிய பார்வையாளர்களையும் தந்துள்ளது” என்றார்.

மேலும், “இந்தப் படம் எனக்கு ஜாஹீருடன் நல்ல நட்புறவை ஏற்படுத்தி தந்துள்ளது. திரைத்துறையில் உண்மையான நட்பை கண்டுபிடிப்பது மிகவும் அரிதானது. இந்தப் படத்தின் உருவாக்கத்தின் போது ஒவ்வொரு கட்டத்திலும் எனக்கு உதவுகிற ஒரு முழுமையான நண்பரைக் கண்டுபிடித்ததை நான் பாக்கியமாக உணர்கிறேன்” என்றார்.

‘டபுள் எக்ஸ்எல்’ நவம்பர் 4ஆம் தேதி திரைக்கு வருகிறது.

சோனாக்‌ஷி சின்ஹா - ஹீமா குரேஷி

Tamil Actor Mahat Ragavendra enters at Bollywood

புனித் ராஜ்குமாருக்கு அரசு விருது.; ரஜினி ஜூனியர் என்டிஆருக்கு அழைப்பு

புனித் ராஜ்குமாருக்கு அரசு விருது.; ரஜினி ஜூனியர் என்டிஆருக்கு அழைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னட சினிமாவில் மிக பிரபலமான நடிகர் புனித் ராஜ்குமார்.

45 வயதான இவர் சில மாதங்களுக்கு முன்பு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

இவரது மரணம் இந்திய திரை உலகை அதிர்ச்சி அடைய செய்தது.

இந்த நிலையில் கர்நாடகா அரசு அவரை கௌரவிக்கும் வகையில் கர்நாடக ரத்னா என்ற விருதை புனித் ராஜ்குமாருக்கு வழங்க உள்ளது.

நவம்பர் 1ஆம் தேதி நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த், ஜூனியர் என்டிஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Punith Rajkumar will be awarded as Kartanaka Ratna Rajini will guest at Event

ரசிகனின் கலைக்கும் மரியாதை கொடுக்கும் நடிகர் விஜய்

ரசிகனின் கலைக்கும் மரியாதை கொடுக்கும் நடிகர் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய்யை டிவிட்டரில் 4 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.

இந்த நிலையில், ‘என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே!’ என்று சொல்வதோடு நிறுத்தாமல் அதனை நடைமுறைப்படுத்தும் விதமாக, தன் ரசிகன் உருவாக்கிய ஒரு டிஜிட்டல் புகைப்படத்தினை தனது பிராஃபெயில் படமாக பதிவேற்றம் செய்துள்ளார் விஜய்.

தன் ரசிகனுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் தளபதி என்றும் தவறியதில்லை என்பதற்கு இதுவே சிறந்த சான்று.

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் பரிசாக ‘வாரிசு’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், தளபதியின் இந்த செயல் அவரது ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்து வருகிறது.

விஜய்

Actor Vijay updated his fans art as profile picture

ஆசைப்பட்ட ஐசரி கணேஷ்.; ஓகே சொல்வாரா டைரக்டர் பிரபு சாலமன்.?

ஆசைப்பட்ட ஐசரி கணேஷ்.; ஓகே சொல்வாரா டைரக்டர் பிரபு சாலமன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஸ்வின்குமார், தம்பி ராமையா நடித்துள்ள படம் ‘செம்பி’.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கமல்ஹாசன் தலைமையில் பிரபலங்கள் கலந்துக்கொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

*இதில் Dr.ஐசரி K கணேஷ் பேசியதாவது…*

“பிரபு சாலமன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர். அவரை வைத்து என் தயாரிப்பு நிறுவனத்தில் படம் செய்ய ஆசைப்பட்டேன். அது வரும் காலத்தில் நடக்கும் என நம்புகிறேன். கோவை சரளா மேடம் இந்தப்படத்தில் அசத்தியிருக்கிறார். டிரெய்லரே படம் நன்றாக இருக்குமென்பதை சொல்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள்.” என்று பேசினார்.

Will Prabu Solomon work with Producer Isari K Ganesh

கமல் வந்தால் படம் ஜெயிக்கும்.. அந்த ராசி எனக்கும் இருக்கு.. – பாக்யராஜ்

கமல் வந்தால் படம் ஜெயிக்கும்.. அந்த ராசி எனக்கும் இருக்கு.. – பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஸ்வின்குமார், தம்பி ராமையா நடித்துள்ள படம் ‘செம்பி’.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கமல்ஹாசன் தலைமையில் பிரபலங்கள் கலந்துக்கொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

*இதில் கே.பாக்யராஜ் பேசியதாவது…

“கமல் விழாவுக்கு வந்தால் படம் ஜெயிக்கும் என்று இங்கு சொன்னார்கள். அந்த ராசி எனக்கும் இருக்கு. அவர் நடித்த 16 வயதினிலே தான் எனக்கும் ஆரம்பம்.

அந்தப்படத்தில் அவரது திறமையை பிரமித்து பார்த்திருக்கிறேன். அதே போல் கோவை சரளா அவர்களை எட்டு வயதிலிருந்தே எனக்கு தெரியும். முந்தானை முடிச்சு படத்தில் என்னிடம் அடம்பிடித்து நடித்தார். அவரை மனோரமா போல் என்றார்கள் அது உண்மையான கருத்து.

இந்தப்படத்தில் நடிப்பில் அசத்தியிருக்கிறார். பிரபு சாலமன் மிகச்சிறந்த இயக்குநர். கும்கி படத்தில் அவரை பார்த்து பிரமித்தேன். இந்தப்படம் டிரெய்லரே அற்புதமாக இருக்கிறது படம் வெற்றி பெற வாழ்த்துகள்.” என்றார்.

Director cum Actor Bhagyaraj talks about Kamal sentiment

நடிக்க கேட்டார்கள்.. நடிக்க வையுங்கள் என்றேன்.; ‘செம்பி’ விழாவில் பழ. கருப்பையா பன்ச்

நடிக்க கேட்டார்கள்.. நடிக்க வையுங்கள் என்றேன்.; ‘செம்பி’ விழாவில் பழ. கருப்பையா பன்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஸ்வின்குமார், தம்பி ராமையா நடித்துள்ள படம் ‘செம்பி’.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கமல்ஹாசன் தலைமையில் பிரபலங்கள் கலந்துக்கொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

*இதில் பழ கருப்பையா பேசியதாவது…*

“ஒரு நாள் போன் செய்து இப்படத்தில் நடிக்க வேண்டும். என்றார். நடிக்க வையுங்கள் நான் நடிக்கிறேன் என்றேன்.

ஒரு காட்சிக்கு ஒரே வசனத்தை பல வடிவங்களில் சொல்லி நடிக்க வைப்பார். அது சரியான வடிவம் பெறும் வரை விட மாட்டார். மிகச்சிறந்த இயக்குநர். படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

Politician and Actor Pazha Karuppaiya speech at Sembi Audio launch

More Articles
Follows