குறட்டை நாயகன் : காமெடியில் கலக்கப் போகும் ‘காலா’ மணிகண்டன்

குறட்டை நாயகன் : காமெடியில் கலக்கப் போகும் ‘காலா’ மணிகண்டன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, ஜெய் பீம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மணிகண்டன். இவர் முதல் முறையாக தனி நாயகனாக நடித்து முடித்து இருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்குகிறார்.

இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் நசரேத் பசிலியான், யுவராஜ் கணேசன், மகேஷ்ராஜ் பசிலியான் தயாரித்து இருக்கின்றனர்.

படத்தில் மணிகண்டன் உடன் முக்கிய கதாபாத்திரங்களில் மீதா ரகுநாத், ரமேஷ் திலக், இயக்குநர் பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள் (பக்ஸ்) உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் ஆக இயக்குநர் எஸ். பி. சக்திவேல் பணிபுரிந்துள்ளார். மேலும் படத்தின் ஒளிப்பதிவை ஜெயந்த் சேதுமாதவன், படத்தொகுப்பை பரத் விக்ரமன், கலை இயக்கத்தை ஸ்ரீகாந்த் ஆகியோர் மேற்கொள்கின்றனர்.

இன்று பெரும்பாலானோர் அவதிப்படும் ‘குறட்டை’ பிரச்சனையை மையமாக வைத்து நகைச்சுவையுடன் இணைந்த ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக்கி இருக்கின்றனர்.

சென்னையை சுற்றி ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கின்றனர். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா 2 சூட்டிங் அப்டேட் இதோ

அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா 2 சூட்டிங் அப்டேட் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புஷ்பாவின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ‘புஷ்பா: தி ரூல்’ இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இப்படத்தின் சூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் ஏற்பட்ட வேலைநிறுத்தம் காரணமாக படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இப்போது சமீபத்திய அறிக்கையின்படி, நவம்பர் 12 ஆம் தேதி பாங்காக்கில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இந்த ஷெட்யூலில் ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்படும் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பாலிவுட் படமான ‘போலா’ வில் இணைந்த அமலா பால்

பாலிவுட் படமான ‘போலா’ வில் இணைந்த அமலா பால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘போலா’ என்பது தமிழில் வெளியான ‘கைதி’ படத்தின் இந்தி மொழி ரீமேக் ஆகும். அஜய் தேவ்கன் மற்றும் தபு நடிக்கும் இப்படத்தில் அமலா பால் ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. பாலிவுட் நட்சத்திரத்துடன் அமலா பால் இணையும் இப்படம் 2023 இல் திரைக்கு வரவுள்ளது.

இதை பற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள அமலா பால் இது ஒரு “நல்ல செய்தி” என்று தெரிவித்துள்ளார்.

சமந்தாவின் முயற்சியை பாராட்டிய யசோதா ஆக்‌ஷன் இயக்குனர்

சமந்தாவின் முயற்சியை பாராட்டிய யசோதா ஆக்‌ஷன் இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒவ்வொரு முறையும் நடிகை சமந்தா சிறந்ததைத் தருகிறார் என்று யசோதா ஸ்டண்ட் இயக்குநர் யானிக் பென் கூறியுள்ளார். கிக் பாக்ஸிங், ஜுஜிட்சு போன்ற தற்காப்பு கலைகளை பயன்படுத்தி சண்டை காட்சிகளை அமைத்ததாக தெரிவித்தார்.

காட்சிகளை பதிவு செய்யும் போது சமந்தா மற்றும் பிறரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. “சமந்தா மிகவும் அர்ப்பணிப்புள்ளவர். அவர் எப்பொழுதும் சிறந்ததைக் கொடுக்கத் தயாராக இருக்கிறார் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் இணையும் புதிய படம் இந்த தேதியில் தொடங்கபடுகிறதா?

ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் இணையும் புதிய படம் இந்த தேதியில் தொடங்கபடுகிறதா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐஸ்வர்யா தனது தந்தை ரஜினிகாந்துடன் இணைந்து தனது மூன்றாவது படத்தில் இணையவுள்ளார் என்பதை ஏற்கனவே உங்களுக்கு தெரிவித்திருந்தோம்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு சக்திவாய்ந்த கெஸ்ட் ரோலில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

நவம்பர் மாதம் 5 ஆம் தேதி பூஜையுடன் இப்படம் ஆரம்பமாக உள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.

பூஜை விழாவில் ரஜினி, ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர் சுபாஸ்கரன் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் துணைத் தலைவர் பிரேம்சிவசாமி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

TRISHA Back to Form : பொன்னியின் செல்வன் ஹிட்.; அஜித் – விஜய்யுடன் ரெண்டு

TRISHA Back to Form : பொன்னியின் செல்வன் ஹிட்.; அஜித் – விஜய்யுடன் ரெண்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா.

இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

மேலும் இந்தப்பட ப்ரமோஷனில் திரிஷாவின் சிகை மற்றும் ஆடை அலங்காரங்கள் அனைவரையும் கவர்ந்திருந்தார்.

இதனால் தற்போது திரிஷாவின் மார்க்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் உயர்ந்துள்ளது.

எனவே த்ரிஷாவின் ரிலீசாகாத படங்களை தூசி தட்ட ஆரம்பித்துள்ளனர் கோலிவுட் இயக்குனர்கள்.

அவரது கைவசம் ‘ராங்கி’, ‘கர்ஜனை’ ‘சதுரங்க வேட்டை 2’ ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.

எனவே இந்த படங்கள் ஒவ்வொன்றும் விரைவில் ரிலீசாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

மேலும் விஜய் உடன் ‘தளபதி 67’ மற்றும் அஜித் உடன் ‘தல 62’ ஆகிய படங்களில் திரிஷா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows