தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 20 நாட்களாக காலா படத்தின் சூட்டிங்கில் நடித்து வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
தற்போது சில நாட்கள் ஓய்வுக்காக சென்னை வந்துள்ளார்.
அப்போது சென்னை விமான நிலையத்தில் இன்னும் இரண்டு மாதத்தில் மீண்டும் ரசிகர்களை சந்திப்பேன் என கூறியிருந்தார்.
இது ஒரு புறமிருக்க, மற்றொரு புறம் ரஜினியின் கட்சி பெயர் மற்றும் கட்சி கொடி டிசைன் ஆகியவை பற்றிய ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
முக்கியமாக ரசிகர்களுடன் பேசும்போது போர் வரும்போது சந்திப்போம் என ரஜினி கூறியிருந்தால், கட்சிப் பெயரில் படை என்ற வார்த்தை இருக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கு முன்பே படையப்பா என்ற வார்த்தை ரசிகர்களிடையே பிரபலமான ஒன்றுதானே… அப்போ அப்படியிருந்தால் நல்லதுதானே…