சூப்பர் ஸ்டாரையே தன் ரசிகராக்கிய ‘பேட்மிண்டன்’ சிந்து

சூப்பர் ஸ்டாரையே தன் ரசிகராக்கிய ‘பேட்மிண்டன்’ சிந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini sindhu olympicsநான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டி தற்போது பிரேசில் நாட்டில் நடைபெற்று வருகிறது.

இதில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் நமது இந்தியாவை சேர்ந்த பி.வி.சிந்து என்ற பெண்மணி வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி முதல் சாமானிய மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினிகாந்த், தனது ட்விட்டர் பக்கத்தில்… வாழ்த்துக்கள் சிந்து. நான் உங்களின் தீவிர ரசிகனாகவே மாறிவிட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்து ரீட்வீட் செய்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியானார் சமந்தா

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியானார் சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan samanthaவருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினிமுருகன் படங்களை தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

மோகன் ராஜா இயக்கும் படத்தை முடித்துவிட்டு இதில் நடிக்கவிருகிறார் சிவா.

இந்நிலையில் இப்படத்தில் பணிபுரிய உள்ள கலைஞர்களை இப்படத்தின் தயாரிப்பாளர் ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறார்.

இமான் இசையைமைக்க, சூரி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்கிறார். கலையை முத்துராஜ் கவனிக்க, சண்டைப் பயிற்சியை அனல் அரசு கவனிக்கிறார். பாடல்களை யுகபாரதி எழுதுகிறார்.

இதில் முதன்முறையாக சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கவிருக்கிறார்.

தலைப்பு செய்தியானார் ‘தல’… புதிய பட்டத்தை ஏற்பாரா அஜித்.?

தலைப்பு செய்தியானார் ‘தல’… புதிய பட்டத்தை ஏற்பாரா அஜித்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith style stillsசிவா இயக்கும் ஏகே57 படத்திற்காக அஜித் தற்போது ஆஸ்த்ரியா நாட்டில் இருக்கிறார் என்பதை பார்த்தோம்.

இவர் தமிழகத்தின் முன்னணி நட்சத்திரமாக இருந்தாலும் எந்தவொரு அடைமொழியோ பட்டமோ வேண்டாம் என மறுத்து வருபவர்.

இந்நிலையில் ஆஸ்த்ரியாவின் பிரபலமான Carinthia என்ற மீடியா நிறுவனம் இவருக்கு ‘இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன்’ என்ற பட்டத்தை வழங்கியுள்ளது.

மேலும் அஜித் படம் பற்றிய செய்தியை தலைப்பு செய்தியாக்கி அங்கு வெளியிட்டுள்ளது.

பாபி சிம்ஹா-பிரசன்னா இணையும் ‘திருட்டு பயலே 2’

பாபி சிம்ஹா-பிரசன்னா இணையும் ‘திருட்டு பயலே 2’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bobby Simha Prasannaசுசி கணேசன் இயக்கத்தில் ஜீவன், சோனியா அகர்வால், மாளவிகா, அப்பாஸ் ஆகியோர் நடித்த படம் திருட்டு பயலே.

பரத்வாஜ் இசையமைத்த இப்படம் 2006ஆம் ஆண்டு வெளியானது.

தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது.

இரண்டாம் பாகத்தையும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க சுசீ கணேசனே இயக்குகிறார்.

நாயகனாக பாபி சிம்ஹா நடிக்க, பிரசன்னா வில்லனாக நடிக்கிறார்.

செப்டம்பரில் இதன் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது.

5 ஸ்டார் படம் மூலம் பிரசன்னாவும் சுசிகணேசனும் சினிமாவுக்கு அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush stillsகோவையில் புதிதாய் உருவாகியுள்ள பிரின்ஸ் ஜீவல்லரியின் புதிய கிளையை திறந்து வைக்க சென்றார் தனுஷ்.

எனவே அவரை பார்க்க கட்டுங்கடங்காத கூட்டம் கூடியது.

இதுகுறித்து தனுஷ் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

“திறப்பு விழாவுக்கு வந்தபோது என் மீது அன்பும், ஆதரவும் காட்டிய அனைத்து ரசிகர்களுக்கும் மிக்க நன்றி.

உங்களை சந்திக்க விரும்பினேன். ஆனால் விமானத்தை பிடிக்க வேண்டும் என்பதாலும் வேலையின் அவசரம் காரணத்தினாலும் விரைந்து செல்ல நேரிட்டது.

எனவே உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

அஜித்-சூர்யாவுடன் நடிக்கும் கமல் மகள்களுக்கு ஒரே கேரக்டராம்

அஜித்-சூர்யாவுடன் நடிக்கும் கமல் மகள்களுக்கு ஒரே கேரக்டராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shruthi haasan and akshara haasanஹரி இயக்கும் சிங்கம் 3 படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.

இப்படத்தின் முக்கிய கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இவர் இப்படத்தில் ஹீரோவுக்கு உதவும் பத்திரிகையாளராக நடிக்கிறாராம்.

அதுபோல் அஜித்தின் ஏகே 57 படத்தில் நடிக்கும் அக்ஷராஹாசனும் ஹீரோவுடன் பயணிக்கும் பத்திரிக்கை தொடர்பான கேரக்டரிலும் நடிக்கிறாராம்.

சிவா இயக்கும் இப்படத்தில் அஜித்தின் மனைவியாக காஜல் அகர்வால் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows