ஜி.வி.பிரகாஷ் இசையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதுப்படம்

ஜி.வி.பிரகாஷ் இசையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதுப்படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava lawrence‘பொல்லாதவன்’ , ‘ஆடுகளம்’ ‘ஜிகர்தண்டா’ ஆகிய படங்களைத் தயாரித்த ஃபைவ்ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ்.கதிரேசன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் மாஸ்டர் ராகவேந்திரா லாரன்ஸ் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் அறிவிப்பு புரடொக்ஷன் நம்பர் -7 என இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் பெயர் மட்டுமல்ல ., இப்பட இயக்குனர், இப்படத்தில் பணிபுரிய இருக்கும் இன்னபிற டெக்னீஷியன்கள், இடம்பெற இருக்கும் பிற நட்சத்திரங்கள் உள்ளிட்டோர்களின் விவரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

BREAKING முதல்வராக ஆசையில்லை; மக்கள் எழுச்சி உருவாக வேண்டும்.. – ரஜினி

BREAKING முதல்வராக ஆசையில்லை; மக்கள் எழுச்சி உருவாக வேண்டும்.. – ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthவிரைவில் அரசியல் கட்சியை தொடங்கவுள்ள நடிகர் ரஜினிகாந்த் தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.

அவரின் பேச்சு துளிகளில் இங்கே…

ஏமாற்றம் என நான் குறிப்பிட்டது என்ன என்பது குறித்தும் கட்சி குறித்த கண்ணோட்டம் பற்றியும் தெரிவிக்கவே இந்த சந்திப்பு.

தனிப்பட்ட முறையில் ஏமாற்றம் என நான் சொன்னது பலவிதமாக வெளியே வந்தன; மாவட்ட செயலாளர்கள் மூலம் எதுவும் வெளியே வரவில்லை.

சிஸ்டத்தை சரி செய்யாமல் அரசியலுக்கு வருவது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சர்க்கரை பொங்கல் வைப்பது போன்றது.

பலர் கட்சிப் பதவியை தொழிலாக வைத்துள்ளனர்.

1996 ல் எனக்கு வந்த வாய்ப்பை நான் ஏற்கவில்லை.

அரசியல் மாற்றத்திற்கான ரஜினி சொன்ன 3 திட்டம் என்ன? முழுமையான தகவல்கள் இதோ

அரசியலுக்கு வருகிறேன் என 2017 டிசம்பருக்கு முன்பு நான் சொன்னதில்லை.

1996ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக நான் சொன்னதாக சொல்வது தவறு.

நான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்பதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

60 முதல் 65 சதவீதம் ஐம்பது வயதிற்கு உட்பட்டவர்களுக்கே போட்டியிட வாய்ப்பு

புதியவர்கள் சட்டமன்றத்திற்குள் செல்ல நான் பாலமாக இருப்பேன்

30 முதல் 35 சதவீதம் பல்வேறு துறை நிபுணர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு

கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை.

முதலமைச்சர் பதவியை நான் ஒருபோதும் நினைத்து பார்த்தது கிடையாது.

BREAKING ரஜினியின் அரசியல் முடிவை வரவேற்று வாழ்த்துகிறோம்… – சீமான்

நான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்பதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

என் முடிவை மாவட்ட செயலாளர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

தலைவன் சொல்வதை கேட்பவனே தொண்டன். இதை தான் ஏமாற்றம் என கூறினேன்.

ரஜினி பேசிய தந்தி டிவி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன

பதவிக்கு ஆசை இல்லையென 2017ல் தான் பேசியதை சுட்டிக்காட்டிய ரஜினிகாந்த் – ரஜினிகாந்த்

அசுர பலத்துடன் இருக்கும் திமுக & அதிமுக என்ற இரு ஜாம்பவான்களை நாம் எதிர்க்கப் போகிறோம்.

கருணாநிதி & ஜெயலலிதா என்ற இரு ஆளுமைகள் இல்லை. எனவே தான் வெற்றிடம் இருக்கிறது என்பதை தெரிவித்தேன்.

தமிழக மக்கள் எழுச்சி உருவான பிறகு அரசியலுக்கு வருகிறேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

சிம்புக்கு பெரிய மனசு சார்..;. ‘ஓ மை கடவுளே’ மூடில் அசோக் செல்வன்

சிம்புக்கு பெரிய மனசு சார்..;. ‘ஓ மை கடவுளே’ மூடில் அசோக் செல்வன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu ashok selvanவெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

சிம்புக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

இப்பட ஷூட்டிங், ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

இதன் சூட்டிங் தளத்தில் இப்படி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எஸ்.ஜே.சூர்யா மற்றும் மனோஜ் பாரதிராஜாவுடன் சிம்பு இருக்கும் புகைப்படங்கள் இன்று வைரலாகி வருகிறது.

சிம்பு-வடிவேலு கூட்டணியை மீண்டும் இணைக்கும் மிஷ்கின்

இந்த நிலையில் அண்மையில் வெளியான ‘ஓ மை கடவுளே’ படத்தை சிம்பு பார்த்துள்ளார்.

அவரும் படம்பிடித்து போகவே படக்குழுவினரை பாராட்டி உள்ளார்.

இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து & நாயகன் அசோக் செல்வன் இருவரும் இத்தகவலை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

அடிச்சு தூக்கிய அஜித்தின் ‘விஸ்வாசம்’ பாடல்கள்; 500 மில்லியன் சாதனை.!

அடிச்சு தூக்கிய அஜித்தின் ‘விஸ்வாசம்’ பாடல்கள்; 500 மில்லியன் சாதனை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Viswasam ajithசிவா இயக்கத்தில் அஜித் நடித்திருந்த படம் ‘விஸ்வாசம்’.

இப்படம் கடந்த 2019 ஆம் வருடம் பொங்கலை முன்னிட்டு வெளியானது.

ரஜினியின் பேட்ட படத்துடன் மோதியதால் எதிர்பார்ப்பு எகிறுயது. இரண்டு படங்களும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நயன்தாரா, விவேக், ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, கோவை சரளா, யோகி பாபு என பலர் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் டி. இமான் இசையில் செம ஹிட்டடித்தன.

இந்த நிலையில் இப்படத்தின் இசை ஆல்பம் வீடியோ 500 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் டி இமான் ஆகியோர் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்

சிம்பு-வடிவேலு கூட்டணியை மீண்டும் இணைக்கும் மிஷ்கின்

சிம்பு-வடிவேலு கூட்டணியை மீண்டும் இணைக்கும் மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu vadiveluஉதயநிதியின் ‘சைக்கோ’ படத்தை தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் துப்பறிவாளன் 2 படத்தினை இயக்கிவந்தார்.

அப்பட நாயகனும் தயாரிப்பாளருமான விஷாலுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இப்படத்திலிருந்து வெளியேறினார்.

இதனை அடுத்து சிம்பு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்தன.

சிம்புக்கு பெரிய மனசு சார்..;. ‘ஓ மை கடவுளே’ மூடில் அசோக் செல்வன்

தற்போது ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடித்து வருவதால், அதன் படப்பிடிப்பு முடித்த கையோடு மிஷ்கின் படத்தில் நடிக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிம்பு-மிஷ்கின் கூட்டணி திரைப்படத்தில் ‘வைகைப் புயல்’ வடிவேலு நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, ஹரி இயக்கிய் ‘கோவில்’ படத்தில் சிம்பு-வடிவேலு கூட்டணி சிறப்பாக அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Dirty Ajith Fans; சும்மாவே இருப்பீங்களா..? அஜித்துக்கும் மேனேஜருக்கும் கஸ்தூரி கேள்வி

Dirty Ajith Fans; சும்மாவே இருப்பீங்களா..? அஜித்துக்கும் மேனேஜருக்கும் கஸ்தூரி கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kasthuri ajith fans fightஅரசியல் ரீதியாக ட்வீட்டுகளை போட்டு, சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பவர் நடிகை கஸ்தூரி.

இந்த நிலையில், கஸ்தூரி குறித்து, அஜித் ரசிகர்கள் எனும் போர்வையில் இருக்கும் சிலர் மிகவும் ஆபாசமாக கமெண்ட் செய்துள்ளனர்.

எனவே அதன் ஸ்க்ரீன்ஷாட்டுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.

மேலும், தனது ட்வீட்டில், அஜித் சார் எவ்வளவு நாளைக்கு சும்மா இருப்பீங்க? உங்க ரசிகர்கள் இப்படி கேவலமா ஆபாசமா பேசுவதை கண்டிக்க மாட்டீங்களா? என பதிவிட்டுள்ளார்.

மேலும், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடமும், இதனை தடுக்க வழி செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

More Articles
Follows