தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ’ருத்ரன்’.
‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகர்தண்டா’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் இவர். தற்போது இயக்கத்திலும் இறங்கியுள்ளார்.
இதில் ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் நடிக்க ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் இப்படம் உருவாகிறது.
இந்த நிலையில், ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அக்டோபர் 29ல் ‘ருத்ரன்’ படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 23-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
Lawrences Birthday Surprise Glimpse from Rudhran
Here’s @offl_Lawrence Master ‘s B’day Surprise Glimpse from #Rudhran
#ருத்ரன் #రుద్రుడు #ನಮ್ಮರುದ್ರ #രുദ്രൻ
#HBDRaghavaLawrenceMaster
@5starcreationss @kathiresan_offl @realsarathkumar @gvprakash @priya_Bshankar @RDRajasekar @editoranthony @onlynikil