தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘பைவ் ஸ்டார்’ கதிரேசன் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படம் ‘பொல்லாதவன்’
இந்த படம் கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பர் 8-ல் தீபாவளிக்கு வெளியானது. இந்த படத்தில் நாயகியாக திவ்யா நடிக்க ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார்.
இதே நாளில் (2007 தீபாவளிக்கு) விஜய் இரட்டை வேடத்தில் நடித்த ‘அழகிய தமிழ்மகன்’ சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த ‘வேல்’ உள்ளிட்ட படங்களும் வெளியானது.
ஆனாலும் தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’ படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
இந்தப் படத்திற்குப் பிறகுதான் வெற்றிமாறன் தனுஷ் ஆகியோரின் கூட்டணிக்கு பெரும் வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. அதன் பின்னர்தான் ஆடுகளம், வடசென்னை அசுரன் உள்ளிட்ட படங்களில் அவர்களை இணைந்தே இருந்தனர்.
இந்த நிலையில் பொல்லாதவன் வெளியாகி 15 வருடங்கள் ஆன நிலையில் நேற்று இந்தப் படத்தின் 15வது ஆண்டு விழாவை பட குழுவினர் கொண்டாடினர்.
15 Years of Polladhavan என்ற தனுஷ் ரசிகர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
இந்த சந்திப்பில் 5 ஸ்டார் கதிரேசன் வெற்றிமாறன் தனுஷ் ஜிவி பிரகாஷ் ரம்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பான படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
15 வருடங்களுக்குப் பிறகு இவர்கள் சந்தித்துள்ளதால் ‘பொல்லாதவன் 2’ ஆரம்பிக்கப்படலாம் என தகவல்கள் வந்துள்ளன.