தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகர்தண்டா’ உட்பட பல படங்களைத் தயாரித்தவர் பைவ் ஸ்டார் கதிரேசன்.
இவர் தற்போது இயக்குநராக அறிமுகமாகிறார்.
இவர் இயக்கி வரும் ’ருத்ரன்’ படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடித்து வருகிறார்.
இவர்களுடன் சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்க ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகி தென்னிந்திய அளவில் ரிலீசாக உள்ளது.
இந்த படம் இந்த ஆண்டு 2022 கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 23 வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தற்போது கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக உள்ளதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக தெரிவித்துள்ளார் கதிரேசன்.
அடுத்த ஆண்டு 2023 ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
இத்துடன் இது காஞ்சனா ரிலீஸ் (ஏப்ரல்) மாதம் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.
Lawrences Rudhran movie release postponed