தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா இணைந்து நடித்துள்ள படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. இந்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேசியதாவது…
அனைவருக்கும் வணக்கம், நான் இந்த மேடையில் நிற்பதற்கு ரொம்ப சந்தோஷப்படுகிறேன். ‘பேட்ட’ படத்திற்கு பிறகு இந்த படம் எனக்கு பெரிய வெற்றியை கொடுக்கும் என்று நினைக்கிறேன்.
‘பீட்சா’ இசை வெளியீட்டுக்கு சத்யம் தியேட்டருக்கு வந்தேன். அந்த மாதிரி உணர்வை இப்போது எனக்கு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ தருகிறது. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.
இந்த திரைப்படத்தை பற்றி நான் அதிகம் பேசமாட்டேன். இந்த கதையை பற்றி நீங்கள் பேசுவீர்கள் என்று நம்புகிறேன். ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் கதிரேசன் சார் அவர்களுக்கு நன்றி. சந்தோஷ் நாராயணன் சொன்ன மாதிரி இந்தப்படம் ரொம்ப நன்றாக வந்துள்ளது. பத்திரிகையாளர் நண்பர்களுக்கு நன்றி. உங்கள் ஆதரவு கட்டாயம் வேண்டும். அனைவருக்கும் நன்றி.
After Petta movie Jigarthanda Double x will give me success says KS
கூடுதல் தகவல்…
ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்திற்கு பிறகு தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் மற்றும் விக்ரம் நடித்த மகான் ஆகிய இரண்டு படங்களை கார்த்திக் சுப்புராஜ் இயக்கினார். இந்த இரண்டு படங்களும் தோல்வியை தழுவியது இங்கே கவனிக்கத்தக்கது. ‘பேட்ட’ மாபெரும் வெற்றி பெற்றது. )
இயக்கம்: கார்த்திக் சுப்பராஜ்
தயாரிப்பு: கார்த்திகேயன் சந்தானம், எஸ். கதிரேசன்
அசோசியேட் தயாரிப்பாளர்: அலங்கார் பாண்டியன்
இசை: சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு: எஸ். திருநாவுக்கரசு
படத்தொகுப்பு: ஷஃபிக் முகமது அலி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: டி. சந்தானம்
சண்டை பயிற்சி: திலிப் சுப்புராயன்
கலை இயக்கம்: பாலசுப்ரமணியன், குமார் கங்கப்பன்
நடன அமைப்பு: ஷெரிப் எம், பாபா பாஸ்கர்
ஒலி வடிவமைப்பு: குணால் ராஜன்
ஆடை வடிவமைப்பாளர்: பிரவீன் ராஜா
ஒப்பனை: வினோத். எஸ்
ஆடைகள்: சுபேர்
பாடல்கள்: விவேக், முத்தமிழ் ஆர்.எம்.எஸ்
ஸ்டில்ஸ்: எம். தினேஷ்
வி.எஃப்.எக்ஸ் மேற்பார்வையாளர்: எச். மோனேஷ்
கலரிஸ்ட்: ரங்கா
பப்ளிசிட்டி டிசைன்ஸ்: ட்யூனி ஜான்
டீசர் கட்: ஆஷிஷ்
சவுண்ட் மிக்ஸ்: சுரேன். ஜி
ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர்: கணேஷ் பி.எஸ்
தயாரிப்பு நிர்வாகி: ஜி. துரைமுருகன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்: ராஜ்குமார்
தயாரிப்பு மேலாளர்கள்: என். சண்முக சுந்தரம், ரங்கராஜ் பெருமாள்
நிர்வாகத் தயாரிப்பாளர்: அசோக் நாராயணன். எம்