தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா’ என்ற திரைப்படம் கடந்த 2014-ம் ஆண்டு ரிலீசானது.
இதில் சித்தார்த் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார்.வில்லனாக நடித்ததற்காக பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைத்தது.
இந்நிலையில், ‘ஜிகர்தண்டா 2′ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க கார்த்திக் சுப்புராஜ் முடிவு செய்துள்ளார் என சில மாதத்திற்கு முன்பு வெளியிடப்பட்டது.
இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, மலையாள நடிகை நிமிஷா சஜயன் தமிழில் அறிமுகமாகும் கதாநாயகியாக நடிக்கிறார்.
தற்போது, ’ஜிகர்தண்டா 2’ படத்தின் பூஜை வரும் டிசம்பர் 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடைப்பெற உள்ளதாகவும் மேலும், இப்படத்தின் பெரும்பகுதியை மதுரையில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
‘Jigarthanda 2’ to start rolling december 11 in Madurai