தளபதி 68 அப்டேட் : ஜிகர்தண்டா , பேட்ட இயக்குனருடன் இணையும் விஜய்.

தளபதி 68 அப்டேட் : ஜிகர்தண்டா , பேட்ட இயக்குனருடன் இணையும் விஜய்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் தற்போது ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். அவரது கேரியரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும்.

சூப்பர் குட் பிலிம்ஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் 68 வது படத்திற்காக தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனியுடன் விஜய் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார் என்று முன்பே தெரிவித்தோம்.

இதனிடையே தளபதி 68 படத்தை பிரபல தமிழ் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கார்த்திக் சுப்பராஜ் ஜிகர்தண்டா மற்றும் ரஜினியின் பேட்ட படங்களை இயக்கியவர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Is Vijay’s ‘Thalapathy 68’ director changed?

நடிகர் திலகம் மரத்துக்கு 70 வயசு.; சிவாஜி மகன் ராம் ஆஸ்பத்திரியில் ஆனந்தம்.!

நடிகர் திலகம் மரத்துக்கு 70 வயசு.; சிவாஜி மகன் ராம் ஆஸ்பத்திரியில் ஆனந்தம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் நடிப்புக்கென்று பெயர் பெற்றவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவருக்கு ராம்குமார், பிரபு என்ற மகன்கள் உள்ளனர்.

இவர்கள் இருவரும் சினிமாவில் நடித்து வருகின்றனர். மேலும் படங்களை தயாரித்தும் வருகின்றனர்.

ராம்குமார்

இந்த நிலையில் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது 1953 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அதன் மூலம் பெற்ற தொகையை முழுவதும் நன்கொடையாக கொடுத்து யாழ்ப்பாணத்தில் முலாய் என்ற ஊரில் ஒரு மருத்துவமனை கட்ட உதவி புரிந்துள்ளார்.

ராம்குமார்

அந்த சமயம் ஆஸ்பத்திரி வளாகத்தில் ஒரு மாமரத்தையும் நட்டு உள்ளார். தற்போது அந்த மாமரத்திற்கு 70 வயது ஆகிறது.

இந்த மரத்தின் நிழல் அடியில் நடிகரும் தயாரிப்பாளருமான ராம்குமார் அமர்ந்து தன்னுடைய ஆனந்தத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

ராம்குமார்

Reason behind  Sivaji’s son Ram  Kumar happiness

தன் அப்பாவுக்கு சூப்பர் கிஃப்ட் கொடுத்த ஜி‌பி முத்து . வைரலாகும் புகைப்படம்

தன் அப்பாவுக்கு சூப்பர் கிஃப்ட் கொடுத்த ஜி‌பி முத்து . வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தற்போது ஜி.பி. முத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி 4’ ரியாலிட்டி ஷோவில் கோமாளியாக பங்கேற்று உள்ளார்.

இதற்கிடையில் இணையவாசிகள் முத்துவின் அப்பா கணேசனையும் அவர் அவரது யூடியூப் வீடியோ மூலம் நன்கு அறிவர்.

இந்நிலையில் சமீபத்தில் ஜி.பி. முத்து தனது அப்பா கணேசனுக்கு புத்தம் புதிய ஸ்கூட்டரை பரிசாக அளித்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் .

தன் அப்பாவை மகிழ்விக்க அவர் செய்த செய்கைக்காக அவர் உலகம் முழுவதும் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

G.P. Muthu’s adorable gift to his dad wins netizens hearts

நியூ கெட்டப்.. மாஸ் லுக்.; ரோல்ஸ் ராய்ஸ் காரில் கெத்தாக வந்த லெஜண்ட் சரவணன்

நியூ கெட்டப்.. மாஸ் லுக்.; ரோல்ஸ் ராய்ஸ் காரில் கெத்தாக வந்த லெஜண்ட் சரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளர் சரவணன் அருள்.

இவர் விளம்பரங்களை அடுத்து சினிமாவில் நடித்து வருகிறார். ஜே.டி – ஜெரி இயக்கிய ‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

விரைவில் லெஜண்ட் சரவணனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் தற்போது புது கெட்டப்புடன் தாடி வைத்து இருக்கிறார். அதே மாஸான லுக்கில் தற்போது அவரது வீடியோ வெளியாகியுள்ளது.

ஒரு திருமண நிகழ்ச்சிக்காக ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்திறங்கினார் சரவணன்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

legend saravanan arriving in a rolls royce car image is trending

‘மார்க் ஆண்டனி’ டீசர் அப்டேட்..; மாஸ் காட்டும் ஸ்டைலிஷ் எஸ்.ஜே. சூர்யா

‘மார்க் ஆண்டனி’ டீசர் அப்டேட்..; மாஸ் காட்டும் ஸ்டைலிஷ் எஸ்.ஜே. சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் ‘மார்க் ஆண்டனி’.

இதில் நாயகியாக ரித்து வர்மா நடிக்க, வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க, தெலுங்கு நடிகர் சுனில் வர்மா மற்றும் நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

எஸ்.ஜே.சூர்யா, கடந்த வாரம் தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பை முடித்திருந்தார்.

தற்போது இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடியும் தருவாயில் உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்து இருந்தார்.

இப்படத்தை மினி ஸ்டுடியோ சார்பாக வினோத் பிரம்மாண்டாக தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் ‘மார்க் ஆண்டனி’ டீசர் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அதில் செம மாஸாக ஸ்டைலாக எஸ்.ஜே. சூர்யா போஸ் கொடுத்துள்ளார்.

மார்க் ஆண்டனி

MarkAntony Teaser release update by sj suryah

வைரலாகும் ராம்சரண் – உபாசனா தம்பதியரின் வளைகாப்பு ஸ்டில்ஸ்

வைரலாகும் ராம்சரண் – உபாசனா தம்பதியரின் வளைகாப்பு ஸ்டில்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் மற்றும் அவரது அன்பான மனைவி உபாசனா காமினேனி கொனிடேலா ஆகிய இருவரும் கடந்த வார தொடக்கத்தில் ‘வேனிட்டி ஃபேர்: எனும் சர்வதேச யூட்யூப் சேனலில் வெளியான ஆஸ்கார் விருதுக்கான விழாவில் கலந்து கொள்வதற்கு தயாராகும் காணொளி, அதிக அளவிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது.

அதன் போது தனது கர்ப்பிணியான மனைவி உபாசனாவின் கைகளை மடக்கி, அவர்கள் நடந்த தருணங்களை… உண்மையிலேயே அனைவராலும் விரும்பப்பட்டது.

 ராம்சரண் - உபாசனா

இந்நிலையில் துபாயில் திருமதி உபாசனா காமினேனி கொனிடேலா ராம் சரணுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த கொண்டாட்ட விழாவில் இரு தரப்பினரின் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் ராம்சரண்- உபாசானா காமினேனி கொனிடேலா தம்பதிகளுடன் பிங்கி ரெட்டி, சானியா மிர்சா, கனிகா கபூர், அல்லு அர்ஜுன், ராம் சரணின் பெற்றோர்களான சிரஞ்சீவி மற்றும் சுரேகா கொனிடேலா, அவரின் சகோதரிகளான சுஷ்மிதா மற்றும் ஸ்ரீஜா, உபாசனாவின் தாயார் திருமதி சோபனா காமினேனி, சங்கீதா ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 ராம்சரண் - உபாசனா

இந்நிகழ்வில் திருமதி உபாசனா காமினேனி கொனிடேலா ஒரு பிங்க் வண்ண உடையில்… தளர்வான ஸ்டைலில் ஜொலிக்க… ராம் சரண் கருப்பு வண்ண உடையில் ஸ்மார்ட் சினோஸ் எனப்படும் வெள்ளை சட்டையிலும் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

இந்த பிரத்யேக புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்த தம்பதிகளுக்கு அனைவரும் அன்பான ஆசீர்வாதத்தை வழங்குவதையும் காண முடிகிறது. ராம் சரணும் உபாசனாவும் கடந்த சில காலமாக அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர்களாக இருந்தனர். அதற்கான உண்மையான காரணத்தை இந்த புகைப்படங்கள் வெளிப்படுத்துகிறது.

 ராம்சரண் - உபாசனா

Ram Charan and Upasana couple Baby Showers

More Articles
Follows