தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகர்தண்டா’ உட்பட பல படங்களைத் தயாரித்தவர் பைவ் ஸ்டார் கதிரேசன்.இவர் தற்போது ‘ருத்ரன்’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார்.
கதிரேசன் இயக்கி ராகவா லாரன்ஸ் நடித்து வரும் படம் ‘ருத்ரன்’.
இப்படத்தில் ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது.
இந்த நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ருத்ரன் படத்தின் தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு முடிவடைந்ததை உறுதிப்படுத்தும் வகையில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
மேலும் ‘ருத்ரன்’ படம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
Raghava Lawrence’s ‘Rudhran’ shooting has been completed