ரசிகர்களின் ரசிப்புத்தன்மை அதிகம்.; எமோஷனலுக்கும் அப்ளாஸ்.. SJ சூர்யா

ரசிகர்களின் ரசிப்புத்தன்மை அதிகம்.; எமோஷனலுக்கும் அப்ளாஸ்.. SJ சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்ற நடிகர் மற்றும் இயக்குந‌ர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது…

வெற்றியை பகிர வேண்டிய நேரம் இது. பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி. மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட‌ ஊர்களுக்கு சென்று தியேட்டர் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என்று பார்த்தோம்.

ரசிப்புத் தன்மை தற்போது முன்பை விட மிகவும் அதிகமாகி உள்ளது. ஒரு நகைச்சுவை காட்சிக்கு கைத்தட்டல் வரலாம், ஆனால் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளுக்கு வரும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக உள்ளது.

இப்படத்தை வெளியிட்ட ரெட் ஜெயின்ட் நிறுவனத்திற்கு மிக்க நன்றி. “நம்ம பேசக்கூடாது, நம்ம படம் பேசனும்” என்று கார்த்திக் சுப்பராஜ் சொல்வார்.

அதே மாதிரி இந்த படம் பேசுகிற‌து. லாரன்ஸ் அவர்கள் எனது மிகப்பெரிய நண்பர், நல்ல மனிதர், நல்ல பெயரை அவர் சம்பாதித்திருக்கிறார்.

தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் அவர்களின் குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்த திரைப்படத்தில் எல்லாமே நன்றாக‌ அமைந்தது. அனைவ‌ருக்கும் பிடித்த‌ மாதிரி அமைந்திருக்கிறது. நல்ல கதையை இயக்குந‌ர் திரையில் காட்டியிருக்கிறார்.

sj suryah speech at Jigarthanda XX movie Thanks giving meet

ஆசைப்பட்ட படங்கள் சில நேரம் கிடைக்கும்..; ‘ஜிகர்தண்டா XX’ குறித்து சந்தோஷ் நாராயணன்

ஆசைப்பட்ட படங்கள் சில நேரம் கிடைக்கும்..; ‘ஜிகர்தண்டா XX’ குறித்து சந்தோஷ் நாராயணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், ரெட் ஜெயின்ட் மூவீஸ் வெளியீட்டில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 அன்று வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் கல் ராமன் எஸ் சோமசேகர், கல்யாண் சுப்பிரமணியம் மற்றும் அலங்கார் பாண்டியன் ஆவர்.

இப்படத்தின் நன்றி தெரிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

சட்டானி பாத்திரத்தில் நடித்த விது பேசியதாவது…

வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. பத்திரிகையாளர் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி. சீனியர்களுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. லாரன்ஸ் சார் மற்றும் எஸ் ஜே சூர்யா அவர்களுடன் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

எடிட்டர் ஷபிக் முகமது அலி பேசியதாவது…

அனைவருக்கும் நன்றி. ஸ்டோன் பெஞ்ச் குடும்பத்தை சேர்ந்தவன் நான். கார்த்திக் சுப்புராஜ் சாரால் தான் நான் இன்றைக்கு இந்த இடத்தில இருக்கிறேன். பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி, நீங்கள் இந்தப்படத்தை பத்தி பேசியிருக்கவில்லை என்றால் நான் இங்க பேச முடிந்திருக்காது.

நடிகர் நவீன் சந்திரா பேசியதாவது…

பத்திரிகையாளர் நண்பர்களுக்கும் இந்த‌ வெற்றியை கொடுத்த ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் மிகப்பெரிய நன்றி. எனக்கே என்னுடைய கேரக்டர் மீது வெறுப்பு வரும் அளவிற்கு கதை இருந்தது. எஸ் ஜே சூர்யா சார் மற்றும் லாரன்ஸ் சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்.

இந்த பாத்திரத்தை எனக்கு கொடுத்த‌ கார்த்திக் சுப்புராஜ் சாருக்கு மிக்க நன்றி. ‘ஜிகர்தண்டா’ திரைப்படம் பார்த்தவுடன் கார்த்திக் சுப்புராஜ் சார் திரைப்படத்தில் ஒரு சீன் மட்டுமாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன், இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய கதாபாத்திரம் கொடுத்ததற்கு மிகவும் நன்றி.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியதாவது…

திரையுலகில் எந்த மாதிரி படம் செய்ய வேண்டும் என்று தொழில்நுட்ப கலைஞர்கள் இடையில் விவாதம் இருந்து கொண்டே இருக்கும், நாம் ஆசைப்பட்டு செய்ய வந்த படங்கள் சில சமயங்களில் தான் கிடைக்கும்.

அந்த மாதிரி படம் மக்களுக்கும் பிடித்திருப்பது மகிழ்ச்சி. கார்த்திக் சுப்பராஜ் மாதிரியான இயக்குநர் தொடர்ந்து ஒரே விஷயத்தை செய்யாமல், அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் சினிமாவை செய்வார்கள் அவருடன் நானும் இருப்பது மகிழ்ச்சி.

எங்கள் டீமில் இந்தப்படத்தின் இசைக்காக நிறைய உழைத்தோம். கார்த்திக் படம் மீண்டும் தியேட்டரில் எப்போது வரும் என காத்திருந்தோம். இந்தப்படத்தை இப்போது தியேட்டரில் மக்கள் கொண்டாடுவது மகிழ்ச்சி. படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி.

தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசியதாவது…

இங்கு வந்திருக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு நன்றி. பத்திரிகையாளர் காட்சியிலேயே இப்படத்திற்கு நீங்கள் மனதார பாராட்டு தெரிவித்தீர்கள். ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தை பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டேன். இந்த திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்ததற்கு அனைவருக்கும் நன்றி. ஸ்டோன்பெஞ்ச் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல். இந்த திரைப்படத்தை பொறுத்தவரை நான் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. ரெட் ஜெயின்ட்டுக்கு மிக்க நன்றி. கார்த்திக் சுப்ப‌ராஜ் அவர்களுக்கு மிகவும் நன்றி. மக்களிடம் இந்த திரைப்படம் மிகப்பரிய அளவில் சென்றடைந்துள்ளது, அனைவரும் ரசிக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

I got Jigarthanda XX as per my wish says Santhosh Narayanan

முதன்முறையாக ஷாரூக்குடன் இணைந்து மேஜிக் செய்யபோகும் ராஜ்குமார் ஹிரானி

முதன்முறையாக ஷாரூக்குடன் இணைந்து மேஜிக் செய்யபோகும் ராஜ்குமார் ஹிரானி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி… : திரை ரசிகர்கள் கொண்டாட அவரது பெயர் மட்டுமே போதும்!! மக்களின் இதயங்களைத் தொடும் அழகான சினிமாவை தொடர்ந்து வழங்கியவர், திரையுலக மாஸ்டர் கதாசிரியர், இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

பார்வையாளர்களின் மனதில் நீங்காத அளவில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வழங்கி, ப்ளாக்பஸ்டர் வெற்றிச் சாதனையையும் படைத்துள்ளார்.

‘சஞ்சு,’ ‘பிகே,’ ‘3 இடியட்ஸ்,’ போன்ற கிளாசிக் படங்கள் மற்றும் அனைவரும் கொண்டாடிய ‘முன்னா பாய்’ என, ஹிரானி அனைத்து வயதினரும் எப்போதும் கொண்டாடும் சினிமா ரத்தினங்களை தொடர்ந்து வழங்கி வந்துள்ளார்.

இப்போது, ஷாருக்கானுடனான அவரது முதல் முறையாக இணைந்திருக்கும் ‘டங்கி’ மூலம், மீண்டும் திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்தவுள்ளார்.

ரசிகர்கள் நகைச்சுவை கலந்த மனம் மயக்கும் ஒரு இனிதான பயணத்திற்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளலாம்.

உணர்ச்சிபூர்வமான அம்சங்களுடன் நகைச்சுவை, கலந்து சமூகச் செய்தியை சொல்லும் வகையில் கதைகளை வடிவமைக்கும் ஹிரானியின் தனித்துவமான திறன் தான், அவரது திரைப்படங்களை பொழுதுபோக்கிற்கும் மேலாக ஒரு உன்னத படைப்பாக உருவாக்குகிறது.

அவரது படங்கள் கலாச்சார அடையாளமாகவும் அவற்றை நோக்கிய, உரையாடல்களைத் தூண்டுவதாகவும், சமூகத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அவரது படங்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதில் ஆச்சரியமில்லை.

ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழுவைக் கொண்ட ‘டங்கி’ திரைப்படத்தில் நகைச்சுவை, இதயம் வருடும் அழகான அனுபவம் என மீண்டும் திரையில் ஒரு காவியத்தை காட்டவுள்ளது.

மேலும் இது இந்த டிசம்பரில் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை மகிழ்விக்க வருகிறது டங்கி.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர்.

அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ள, “டங்கி” திரைப்படம், டிசம்பர் 2023 இல் வெளியிடப்பட உள்ளது.

First time Rajkumar Hirani teamsup with Shahrukh for Dunki

சில நொடிகளில் படத்தில் புதுமை.; பெரிய நடிகரின் படங்கள் தோல்வி.. ரிச்சர்ட்

சில நொடிகளில் படத்தில் புதுமை.; பெரிய நடிகரின் படங்கள் தோல்வி.. ரிச்சர்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘சில நொடிகளில்’.

இந்த படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் வினய் பரத்வாஜ்…

“நான் இந்தியாவை விட்டு சென்று 18 வருடங்கள் ஆகிவிட்டது. சிங்கப்பூரில் செட்டில்ட். நல்ல பேங்க்கிங் வேலை இருந்தது. எனக்குப் பிரியமான ஒருவரை கேன்சரால் இழந்து விட்டேன். அதனால், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த யூடியூப்பில் வீடியோக்கள் போட ஆரம்பித்தேன்.

சென்னையிலும் இது தொடர்பாக பல நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன். நல்ல வரவேற்பு இருந்தது. சிங்கப்பூரில் ஸ்டார் விஜய், கலர்ஸ் தமிழுக்காக நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கினேன். அதன் பிறகு குறும்படம் இயக்குவதற்கான வாய்ப்பும் கிடைத்தது.

எனக்குள் இருந்த இயக்குநரை அப்போதுதான் உணர்ந்தேன். மீடியா குளோபல் ஒன் நிறுவனம் கோவிட் சமயத்தில் எனக்கு கால் செய்து லண்டனில் செய்வது போன்ற ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள் எனக் கேட்டார்கள். வழக்கமான த்ரில்லர் கதைகளைப் போல இல்லாமல் வித்தியாசமான ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.

த்ரில்லர், மிஸ்ட்ரி, காதல் என எல்லாமே இதில் உண்டு. இசை எனக்குப் பிடிக்கும். அதனால்தான் ஐந்து இசையமைப்பாளர்கள் இந்தப் படத்தில் உள்ளனர். தர்ஷாவின் பாடல் இன்று வெளியாகியுள்ளது. அவர் மிகவும் திறமையானவர்.

வித்தியாசமான யாஷிகாவை இந்தப் படத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள். கீதா மலேசியாவில் பாப்புலரான ஆர்.ஜே. சிறந்த தயாரிப்பாளர் என்றாலும், அவரை நடிகராக எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் படத்தில் ஏற்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார்.

படத்தில் வித்தியாசமான கீதாவைப் பார்ப்பீர்கள். படத்தை எடுப்பதை விட அதற்கு நல்ல புரோமோஷன் செய்து டிஸ்டிரிபியூட் செய்வதுதான் பெரிய விஷயம். அது இந்தப் படத்திற்கு சிறப்பாகவே நடந்துள்ளது.

மோகன் ஜி படங்களுக்கு நான் பெரிய ரசிகன். எங்கள் படம் பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். செலிபிரிட்டி நிகழ்ச்சியின் ஹோஸ்ட்டாக இதற்கு முன்பு பல பிரபலங்களை சந்தித்து இருக்கிறேன்.

அதில் இருந்து சொல்கிறேன். ரிச்சார்ட் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். சிறந்த மனிதர். அவரை இந்தப் படத்தில் வித்தியாசமான நடிகராகப் பார்ப்பீர்கள். இது என்னுடைய முதல் தமிழ்ப் படம். இந்தப் படம் திரையரங்குகளில் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது. உங்கள் அன்பும், ஆதரவும் வேண்டும்”.

நடிகர் ரிச்சார்ட் ரிஷி பேசியதாவது…

“படத்தில் ஐந்து அற்புதமான பாடல்களைக் கொடுத்த இசையமைப்பாளர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் நிறைய புது விஷயங்களைச் செய்திருக்கிறோம். உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். கண்டிப்பாக தியேட்டரில் இந்தப் படத்தைப் பாருங்கள். சின்னப் படங்கள் எல்லாம் நிறைய ஜெயித்திருக்கிறது. பெரிய படங்கள் எல்லாம் நிறைய தோற்றிருக்கிறது. அதனால், படங்களுக்கு ஆதரவு கொடுங்கள்” என்றார்.

Actor Richard talks about Big movies flop and Small movies hit

யாஷிகா உடன் திருமணமா.? 3வது முறையாக ரிச்சர்டுடன் இணைகிறேன்.. – மோகன். ஜீ

யாஷிகா உடன் திருமணமா.? 3வது முறையாக ரிச்சர்டுடன் இணைகிறேன்.. – மோகன். ஜீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘சில நொடிகளில்’.

இந்த படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற ‘திரெளபதி’ பட இயக்குநர் மோகன்.ஜி. பேசியதாவது…

“என்னுடைய ஹீரோ ரிச்சார்ட் சாருடைய படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்வது மகிழ்ச்சி. இதுபோன்ற விழா அவருக்கு நடக்க வேண்டும் அதில் நான் கலந்து கொள்ள வேண்டும் என நான் நீண்ட நாள் காத்திருந்தேன்.

கடினமான ஒரு சமயத்தில் நான் போய் அவரிடம் நின்றபோது எனக்கு உதவுவதற்காக படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். படம் ரிலீஸின் போதும் எதிர்பாராத சில பிரச்சினைகள் வந்தது.

அப்போதும் நான் அவரிடம்தான் போனேன். எனக்கு எல்லாவிதத்திலும் பக்கபலமாக நின்றார். அப்படி உருவானதுதான் ‘திரெளபதி’. அவர் இல்லை என்றால் ‘திரெளபதி’ இல்லை. அந்தப் படம் 18 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வசூல் செய்தது.

அதேபோல, அடுத்த படமான ‘ருத்ரதாண்டவ’மும் 13 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வசூல் செய்தது. மூன்றாவது படம் ஒரு கேப் விட்டு பண்ணலாம் என்றார். அதனால்தான் செல்வா சாருடன் ‘பரகாசூரன்’ செய்தேன்.

நானும் ரிச்சரட் சாரும் மூன்றாவது முறையாக இணைய இருக்கிறோம். அதுகுறித்தான அறிவிப்பு விரைவில் வரும். சினிமாவில் நான் ஐந்து வருடம் பயணித்தது அவரால்தான். திடீரென இவர் யாஷிகாவுடன் ஃபோட்டோ போட்டதும், ‘என்ன சாருக்கு கல்யாணமா?’ என நிறைய பேர் என்னிடமும் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

அவரிடம் நான் கேட்டபோது, சிரித்தார். பின்புதான் படத்திற்கான புரோமோஷன் எனப் புரிந்தது. ரிச்சார்ட் சாரை இது போல திரையில் ஸ்டைலிஷாகப் பார்ப்பது மகிழ்ச்சி. 24ஆம் தேதி படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

Richard stood with me every hard situations says Mohan G

‘சில நொடிகளில்’ பட சூட்டிங் நிறைய சவால்கள்.. – ‘புன்னகை பூ’ கீதா

‘சில நொடிகளில்’ பட சூட்டிங் நிறைய சவால்கள்.. – ‘புன்னகை பூ’ கீதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘சில நொடிகளில்’.

இந்த படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற படத்தின் தயாரிப்பாளர், நடிகை ‘புன்னகை பூ’ கீதா பேசியதாவது…

“‘சில நொடிகளில்’ படத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கும் கொடுக்கப் போகும் ஆதரவுக்கும் நன்றி. படம் ஒரு அழகான ஜர்னி. டீமும் அந்த அனுபவத்தைக் கொடுத்தது.

வினய் ரொம்பவும் பொறுமையான நபர். ரிச்சர்ட் ப்ளஸன்ட்டானவர். யாஷிகா அவ்வளவு ஒத்துழைப்பு கொடுத்தார். ஒரு காட்சியில் பெட்டிக்குள் அவர் மடங்கி உட்கார வேண்டும். அவர் காலில் ஏற்கனவே பிளேட் உள்ளது.

அப்படி உட்காருவது மிகவும் கஷ்டம். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாது அவ்வளவு நேரம் உட்கார்ந்து இருந்தார். படம் உங்களுக்கும் பிடிக்கும்.

படத்தில் எனக்கு இருந்த சவால் ‘பட்டாசு பூவே’. அந்த பாடலுக்காக வரவேண்டிய சல்சா டான்ஸருக்கு கடைசி நேரத்தில் விசா கிடைக்காமல் போனது.

அதனால் எங்களுக்கு லோக்கலில் கிடைத்தவரை உடனடியாக வரவைத்து ஒன்பதை மணி நேரத்தில் ரிகர்சல் செய்து அந்தப் பாடலை எடுத்தோம். இன்னும் கொஞ்சம் நேரம் கிடைத்திருந்தால் நன்றாக எடுத்து இருக்கலாமோ என்ற ஆதங்கம் இருக்கிறது.

அந்த பாடல் சமயத்தில்தான் லண்டனில் எனக்கு கோவிட் வந்தது. அதன் பிறகு தான் தெரிந்தது செட்டில் நிறைய பேருக்கு தெரியாமலே கோவிட் இருந்தது என்று. இதுபோன்று சில சவால்களும் படத்தில் எனக்கு இருந்தது”.

தயாரிப்பாளர் ஜெயக்குமார்…

“”இந்தப் படம் முழுக்க லண்டனில் படமாக்கினோம். 35 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தினோம். நிறைவான ஒன்றாக இருந்தது. இயக்குநர் வினய் எதையும் திட்டமிட்டு செய்யக் கூடியவர். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல இயக்குநர் கிடைத்துவிட்டார் என்றுதான் சொல்வேன்.

கெளதம் மேனனையும் நாங்கள்தான் அறிமுகம் செய்தோம். ரிச்சார்டும் சிறப்பாக நடித்துள்ளார். கீதா மேமுக்கு சினிமா மீது நேசமும் அர்ப்பணிப்பும் அதிகம். யாஷிகாவும் நன்றாக நடித்துள்ளார். இசையும் இந்தப் படத்தில் சிறப்பாக வந்துள்ளது. நன்றி”.

Faced many challenges in Sila Nodigalil says Geetha

More Articles
Follows