நல்ல படைப்புகளை இறைவன் எனக்காக அனுப்பி வைக்கிறார்.. – எஸ்.ஜே. சூர்யா

நல்ல படைப்புகளை இறைவன் எனக்காக அனுப்பி வைக்கிறார்.. – எஸ்.ஜே. சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா இணைந்து நடித்துள்ள படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. இந்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது…

அனைவருக்கும் வணக்கம், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் உங்களிடம் ஒப்படைக்கிறோம்.

எல்லைகளை தாண்டி ரசிகர்களை சென்றடையும் விஷயம் இப்படத்தில் உள்ளது. கார்த்திக் சுப்பராஜ் படம் எந்த அளவு எதிர்பார்ப்புகளை உருவாக்கும் என்று நான் பார்த்துள்ளேன். அதிகம் பேசாத சந்தோஷ் நாராயணன் அவர்களே இந்த மேடையில் நிறைய பேசியுள்ளார். இந்த படம் அவ்வளவு பேச வைத்துள்ளது.

லாரன்ஸ் சார் நல்ல மனிதர். இந்த படத்தில் அவருடன் பணியாற்றியது ரொம்ப சந்தோஷம். கார்த்திக் சுப்பராஜ் சார் படைப்பும் காட்சிகளும் அப்படி இருக்கும். இறைவன் நல்ல நல்ல படைப்புகளை என்னை நோக்கி அனுப்பி வைக்கிறார். நான் இங்கு ஒரு நல்ல நடிகனா இருப்பதற்கு ‘இறைவி’ படம் மிகப்பெரிய காரணம். அதற்காக கார்த்திக் சுப்பராஜ் சார் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

நிறைய பேச வேண்டியது இருக்கிறது. கண்டிப்பாக பேசுவோம். இந்த படம் ரொம்ப நன்றாக வந்துள்ளது.

God sending me good scripts says SJ Suryah

கார்த்திக் சுப்புராஜ் ஸ்பேஸ் கொடுப்பார்.; ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ வேற மாரி.. – சந்தோஷ் நாராயணன்

கார்த்திக் சுப்புராஜ் ஸ்பேஸ் கொடுப்பார்.; ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ வேற மாரி.. – சந்தோஷ் நாராயணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ இன்னும் சரியாக ஒரு மாதத்தில் தீபாவளி வெளியீடாக உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அதன் முதல் பாடல் வெளியீடும் பத்திரிகையாளர் சந்திப்பும் சென்னை சத்யம் சினிமாசில் இன்று நடைபெற்றது.

‘ஜிகர்தாண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘மாமதுர’-யை இன்று மதியம் 12.12 மணிக்கு இசையமைப்பாளரும் நடிகருமான ஜி வி பிரகாஷ் இணையத்தில் வெளியிட்டார்.

எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் (ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ்) பேசியதாவது…

இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம், இந்த திரைப்படத்தின் 2023 தீபாவளி ரிலீசுக்கு காத்திருக்கிறோம். இந்த மேடையை தந்த கதிரேசன் சார் அவர்களுக்கு நன்றி. வெளியீட்டுக்கு ஒரு மாதத்துக்கு முன் உங்களை சந்தித்து ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினோம்.

நிறைய செலவில் இந்த படத்தை உருவாக்கி உள்ளோம். ராகவா லாரன்ஸ், எஸ்,ஜே. சூர்யா சார், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் அனைத்து குழுவினருக்கும் நன்றி. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று நம்புகிறோம். திரையரங்குகளில் இதை தீபாவளிக்கு பார்த்து விட்டு ஆதரவளிக்க வேண்டும்.

‘ஜிகர்தாண்டா 1’ தேசிய விருது வாங்கியது. ‘ஜிகர்தாண்டா டபுள் எக்ஸ்’-ம் நேஷனல் அவார்ட் வாங்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. எடிட்டிங், இசை எல்லாம் நன்றாக அமைந்துள்ளது. என்னுடைய ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் இல்லாமல் நான் இல்லை. எங்களுக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியதாவது…

அனைவருக்கும் வணக்கம், திகட்டாத பாடல் என்று இன்று வெளியிடப்பட்ட பாடலை சொன்னார்கள். அப்படிப்பட்ட ஒரு ஆல்பமே பண்ணியிருக்கிறோம். இந்த திரைப்படத்தை கண்டிப்பாக தியேட்டரில் வந்து பாருங்கள். கார்த்திக் சுப்பராஜ் உடன் படம் பண்ணும் போது எனக்கு தனி ஸ்பேஸ் கிடைக்கிறது.

கார்த்திக் சார் எனக்கு மிகப்பெரிய ஆதரவை அளிப்பவர். நல்ல இசை கொடுத்திருக்கிறேன் என்று நம்புகிறேன். நான் பணியாற்றிய படங்களில் மிகவும் பிடித்தவற்றில் இதற்கு தனி இடம் உண்டு.

இந்த படம் வேறு மாதிரி இருக்கும். எஸ் ஜே சூர்யா மற்றும் லாரன்ஸ் இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இது உங்களுக்கு கண்டிப்பாக கனெக்ட் ஆகும், நன்றி.

Jigarthanda Double x movie will be vera level says Santhosh Narayanan

விஜய் மீது புகார்..; ‘லியோ’ ரிலீசாகும் தியேட்டர்களில் முற்றுகை போராட்டம்

விஜய் மீது புகார்..; ‘லியோ’ ரிலீசாகும் தியேட்டர்களில் முற்றுகை போராட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள திரைப்படம் ‘லியோ’.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய், த்ரிஷா, மிஷ்கின், கௌதமேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

லலித்குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன் வெளியானது.

இந்த ட்ரெய்லரில் தே…்பையா என்ற ஒரு வார்த்தையை நடிகர் விஜய் பயன்படுத்தியிருந்தார். இது தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

விஜய் போன்ற முன்னணி நடிகர் ஒருவர்.. அதிகமான குழந்தைகளை ரசிகர்களாக வைத்திருக்கும் ஒரு நடிகர் இப்படி பேசலாமா ? என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் விஜய் பேசிய கெட்ட வார்த்தையை திரையிடக்கூடாது எனவும் அந்த காட்சியை நீக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை மீறி படம் வெளியானால் *லியோ ரிலீஸாகும் தியேட்டர்களை முற்றுகையிடுவோம்.* என தெரிவித்துள்ளனர்.

Leo movie controversy dialogue should be removed

பாஜக-வுடன் விஜய் மக்கள் இயக்கம் கூட்டணி.?; புஸ்ஸி ஆனந்த் அறிக்கை

பாஜக-வுடன் விஜய் மக்கள் இயக்கம் கூட்டணி.?; புஸ்ஸி ஆனந்த் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அடுத்த ஆண்டு 2024-ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்க தயாராகி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த பாஜகவுக்கு தற்போது இந்த தேர்தல் தமிழகத்தில் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது எனலாம்.

அதற்கு காரணம் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் அண்ணா மற்றும் ஜெயலலிதா குறித்து பேசிய பேச்சு சர்ச்சையானது. இதனையடுத்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிமுக தலைவர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் தன் நிலைப்பாட்டில் அண்ணாமலை உறுதியாக இருப்பதால் கூட்டணியை முறித்துக் கொண்டது அதிமுக.

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்துடன் பாஜக கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்… (X தள பதிவில்..)

இன்றைய அக்டோபர் 9 தினமலர் நாளிதழில் தளபதி @actorvijay விஜய் அவர்களது பெயரை இரண்டு அரசியல் கட்சிகளோடு அவ்வாறு தொடர்புபடுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு வெளியிடப்படுள்ள செய்தி எள்ளளவும் அறமற்ற பொய்யான செய்தி.

தளபதி அவர்களது பெயரை உள்நோக்கத்தோடு அவரது அரசியல் நிலைப்பாடு என்று தொடர்புபடுத்தி துளியும் உண்மையில்லாத தகவல்களை கொண்டு @dinamalarweb தினமலர் நாளிதழில் வெளியாகியுள்ள இந்த பொய்யான செய்திக்கு தளபதி அவர்கள் சார்பாக அதிகாரப்பூர்வமாக மறுப்பை தெரிவித்துக்கொள்கிறோம்.!

@BussyAnand @Jagadishbliss @RIAZtheboss #TVMI

Bussy Anand statement about BJP and Vijay party alliance

‘லியோ & ஆண்டனி’ கூட்டணி.; விஜய்யுடன் இணைந்து வரும் ஜோஜு ஜார்ஜ்

‘லியோ & ஆண்டனி’ கூட்டணி.; விஜய்யுடன் இணைந்து வரும் ஜோஜு ஜார்ஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்தியா திரைப்படமான ‘ஆண்டனி’ படத்தின் டீசர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்துடன் அக்டோபர் 19 அன்று பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

புகழ் பெற்ற இயக்குனர் ஜோஷி இயக்கிய ‘ஆண்டனி’ படத்தை ஐன்ஸ்டின் மீடியா, நெக்ஸ்டல் ஸ்டுடியோ மற்றும் அல்ட்ரா மீடியா என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகியவற்றின் கீழ் ஐன்ஸ்டின் சாக் பால் தயாரித்து சுஷில் குமார் அகர்வால், நிதின் குமார் மற்றும் ரஜத் அகர்வால் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படம் உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள உணர்ச்சிப்பூர்வமாக படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஜோஜு ஜார்ஜ், கல்யாணி பிரியதர்சன், செம்பன் வினோத் ஜோஸ், நைலா உஷா உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள ‘ஆன்டனி’ படம் மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் நவம்பர் 23, 2023 அன்று வெளியாகிறது.

ஆண்டனி மற்றும் அவரது நண்பர்கள் சிறு கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், ஆண்டனி எதிர்பாராத விதமாக ஒரு கொலை செய்து விடுகிறார். இதன் பிறகு என்ன ஆனது என்பதை உணர்ச்சிகள் நிரம்ப சொல்லி இருக்கும் படம் தான் ஆண்டனி.

இப்படத்தில் ஆண்டனி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜோஜு ஜார்ஜ், “ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டதில் இருந்தே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இயக்குனர் ஜோஷி உடன் மீண்டும் ஒருமுறை இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களின் முந்தைய படமான ‘பொரிஞ்சு மரியம் ஜோஸ்’ எனக்கு மிகப்பெரிய வெற்றியாகவும், சினிமா வாழ்க்கையின் மைல்கல்லாகவும் அமைந்தது, ‘ஆண்டனி’ நிச்சயம் உங்களை ஏமாற்றாது என்று கூறினார்.

இயக்குனர் ஜோஷியின் படத்தில் முதன் முறையாக நடிக்கும் கல்யாணி பிரியதர்சன் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார், “படத்தின் கதைக்களம் தனித்துவமானது, வழக்கத்திற்கு மாறானது மற்றும் அதே நேரத்தில் நம்மை இணைக்கக்கூடிய உணர்ச்சிகளால் நிரம்பியுள்ளது.

மேலும் பார்வையாளர்கள் என்னை இதுவரை எப்படி பார்த்தார்கள் என்பதற்கு நேர்மாறாக எனது பாத்திரம் உள்ளது. ஜோஷி சார் ஆண்டனி படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கினார், இதைவிட த்ரில்லான ப்ராஜெக்ட்டை நான் கேட்டிருக்க முடியாது என்று உணர்ந்தேன்.

அப்படிப்பட்ட அனுபவமுள்ள இயக்குனருடன் வழக்கத்திற்கு மாறான படமொன்றில் பணியாற்றுவது பெருமையாக இருக்கிறது மற்றும் உணர்வுபூர்வமாக இந்த படம் எதிரொலிக்கும்” என்று கூறினார்.

ரெனதீவின் ஒளிப்பதிவு, ஜேக்ஸ் பிஜோயின் மனதைக் கவரும் இசை, ஷியாம் எடிட்டிங் மற்றும் ஜோஷியின் இயக்கத்தில் உருவாகும் இந்த ஆண்டனி படம் நிச்சயம் மற்ற படங்களில் இருந்து வேறுபட்டு இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஆண்டனி படத்தின் டீசர் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. மேலும் படம் நவம்பர் 23 வெளியாகிறது.

கூடுதல் தகவல்…

‘ஜோஜூ ஜார்ஜ்’ ஏற்கனவே தனுஷ் உடன் ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்திருந்தார். மேலும் ‘புத்தம் புது காலை விடியாதா’ மற்றும் ‘பபூன்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

ஆண்டனி

Antony teaser joins with Leo movie screening

சேத்தன் – நயன்தாரா நடிக்கும் ‘ஜென்டில்மேன் 2’ ஷூட்டிங்.; அமைச்சர் ஆரம்பித்து வைத்தார்

சேத்தன் – நயன்தாரா நடிக்கும் ‘ஜென்டில்மேன் 2’ ஷூட்டிங்.; அமைச்சர் ஆரம்பித்து வைத்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெகா தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமோன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் ‘ஜென்டில்மேன்”.

ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்-9) சத்யா ஸ்டுடியோவில் துவங்கியது.

தமிழக தகவல் ஒளிபரப்பு மற்றும் செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு அமைச்சர் எம்.பி.சாமிநாதன் ஸ்விட்ச் ஆன் செய்ய, எம்.ஜி.ஆர்-ஜானகி காலேஜ் மற்றும் சத்யா ஸ்டுடியோ தலைவர்
டாக்டர்.குமார் ராஜேந்திரன் கிளாப் அடிக்க, கவிப்பேரரசு வைரமுத்து ஆக்‌ஷன் சொல்ல.. படபிடிப்பு ஆரம்பமானது.

முதல் காட்சியில், நாயகன் சேத்தன், நாயகி நயன்தாரா சக்ரவர்த்தி முதல் ஷாட்டில் பங்கு பெற்றனர்.

எனது ஆரம்ப காலகட்டங்களில் எம்.ஜி.ஆர் நடித்த பல படங்கள், சத்யா ஸ்டுடியோவில் வளர்ந்த சத்யா மூவீஸ் பல படங்களை நான் வினியோகம் செய்துள்ளேன்.

என் வாழ்க்கையின் உயர்வுக்கு முக்கிய பங்களித்த இந்த சத்யா ஸ்டியோவில் #ஜென்டில்மேன்-ll
படபிடிப்பு துவங்கியதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்..” என்றார் மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்.

தொடர்ந்து சென்னையிலேயே 25 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

கதை ; K.T.குஞ்சுமோன்
இயக்கம் ; A.கோகுல் கிருஷ்ணா
ஒளிப்பதிவு ; அஜயன் வின்சென்ட்
இசை ; M.M.கீரவாணி
பாடல்கள் ; கவிப்பேரரசு வைரமுத்து
கலை ; தோட்டா தரணி
படத்தொகுப்பு ; சதீஷ் சூர்யா
ஒலிப்பதிவாளர் ; தபஸ் நாயக்
ஸ்டண்ட் ; தினேஷ் காசி
நடனம் ; பிருந்தா
ஆடை வடிவமைப்பு ; பூர்ணிமா
புராஜெக்ட் வடிவமைப்பு ; மற்றும் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் ; C.K.அஜய் குமார்
மக்கள் தொடர்பு ; ஜான்சன்
தயாரிப்பு மேற்பார்வை ; சரவண குமார், முருக பூபதி
விளம்பர வடிவமைப்பு ; பவன் சிந்து கிராபிக்ஸ்
விளம்பரம்: மூவி பாண்ட்

*நடிகர்கள்*

சேத்தன்
நயந்தாரா சக்கரவர்த்தி
பிரியா லால்
பிராச்சிகா
சித்தாரா
சுதா ராணி
ஸ்ரீ ரஞ்சனி
சத்யபிரியா
சுமன்
அச்சுத குமார்
மைம் கோபி
புகழ்
படவா கோபி
முனீஸ்ராஜா
ராதாரவி
பிரேம்குமார்
இமான் அண்ணாச்சி
வேலா ராமமூர்த்தி
ஸ்ரீராம்
ஜான் ரோஷன்
ஆர் வி உதயகுமார்
கே.ஜார்ஜ் விஜய் நெல்சன் மற்றும் பலர்

*படப்பிடிப்பு நடைபெறும் இடங்கள்*

சென்னை, ஹைதராபாத், துபாய், மலேசியா & ஸ்ரீலங்கா.

Gentleman 2 shooting started from today

More Articles
Follows