சல்மான்கான் உடன் நடித்தவர் ரஜினியுடன் இணைந்தார்

Pankaj_Tripathi_ரஞ்சித் இயக்கி வரும் காலா படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சூட்டிங் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

இதனிடையில் ஓரிரு நாட்கள் சென்னை வந்து செல்வார் ரஜினி என கூறப்படுகிறது.

இப்படத்தில் ரஜினியுடன் கோலிவுட் பிரபலங்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பலரும் இணைந்து நடித்து வருகின்றனர்.

பாலிவுட்டின் முக்கிய நடிகர் நானா படேகர் இணைந்துள்ள நிலையில் தற்போது மற்றொரு நடிகரான பங்கஜ் திரிபாதி போலீஸ் கேரக்டரில் நடிக்கிறாராம்.

காலாவில் வில்லனாக நடிக்கிறீர்களா? என்று கேட்டதற்கு.. வில்லன் இல்லை. ஆனால் இது ஒரு வித்தியாசமான கேரக்டர்தான்.

இதுவரை ரஜினியின் எந்தவொரு படத்தையும் நான் முழுவதுமாக பார்த்தது இல்லை. ரோபோ (எந்திரன்) படத்தில் கூட சில காட்சிகளைதான் பார்த்தேன்.

ஆனால் ரஜினி எனக்கு ஒரு முன்னோடி போல. அவருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழச்சி.

அவரின் எளிமை மற்றும் நேர்மை என்னை மிகவும் கவர்ந்துள்ளது” என்று தெரிவித்தார்.

சல்மான்கான் நடித்த தபாங்2 படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் பங்கஜ் திரிபாதி என்பது குறிப்பிடத்தக்கது.

Pankaj Tripathi teams up in The Role Of Cop In Rajinikanths Kaala

Overall Rating : Not available

Latest Post