தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அண்ணாத்த’.
இந்தப் படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
ரஜினி படத்திற்கு இமான் இசையமைப்பது இதுவே முதன்முறை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 10 காலை 11 மணிக்கு ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டர் வெளியானது.
அதன்படி நேற்று காலையில் அண்ணாத்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் அடுத்த நிமிடமே அதனை ப்ளக்ஸ் பேனர்கள் போஸ்டர் என ரஜினி ரசிகர்கள் அடிக்கத் தொடங்கினர்.
அதுபோல் ஆட்டோக்களிலும் சிலர் ரஜினி அண்ணாத்த ஸ்டிக்கர்கள் ஒட்டி அதனை போட்டோ எடுத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.
பர்ஸ்ட் லுக் பேனருடன் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.
இந்த நிலையில் கிடா (ஆடு) பலி கொடுத்து அந்த ஆட்டை தலையில்லாமல் எடுத்து அந்த உடம்பை ரத்தம் ரத்தம் தெறிக்க அண்ணாத்த போஸ்டரில் அபிஷேகம் செய்துள்ளனர்.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அதை சமூக ஆர்வலர்கள் திட்ட தீர்த்து வருகின்றனர்.
Netizens slams Rajini fans for celebrating annaatthe first look release