‘அண்ணாத்த’ அல்டிமேட்..; படத்தை பார்த்துவிட்டு ரஜினிக்கே ஷாக் கொடுத்த டீம்

‘அண்ணாத்த’ அல்டிமேட்..; படத்தை பார்த்துவிட்டு ரஜினிக்கே ஷாக் கொடுத்த டீம்

ரஜினிகாந்த் நடிப்பில், சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் திரைப்படம் ’அண்ணாத்த’.

இமான் இசையில் இப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

முத்து, வீரா படங்களுக்கு பிறகு நீண்ட வருட இடைவெளிக்கு பிறகு ரஜினியுடன் மீனா நடித்து வருவதால் அவர்களது ரசிகர்கள் இந்த சூப்பர் ஜோடியை திரையில் காண ஆர்வமாக உள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை வடபழனியிலுள்ள ஃபோரம் மாலில் நடந்து முடிந்தது.

இதனையடுத்து தன் டப்பிங் பணியை ரஜினிகாந்த் முடித்து கொடுத்தார்.

இந்த நிலையில் தற்போது மீனா தன்னுடைய டப்பிங் பணியை செய்து முடித்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார்.

இவர்களைத் தொடர்ந்து நடிகை குஷ்பூவும் தன் டப்பிங் பணிகளை மேற்கொள்கிறார்.

ரஜினியை திரையில் காண ஆவலாக இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார் குஷ்பூ.

இந்த நிலையில் ‘அண்ணாத்த’ தயாரிப்பு நிறுவனம் சிலருக்கு படத்தை போட்டுக் காட்டியதாம்.

அவர்கள்.. அல்டிமேட் அண்ணாத்த  என படத்தை பாராட்டி ரஜினிக்கும் போன் செய்தார்களாம்.

Latest big update on Super Star Rajinikanth’s Annaatthe is here – check out!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *