தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி, வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை பாக்ஸ் ஆபிஸில் படைத்து வருகிறது.
தற்போது வரை இப்படம் வெளியாகி மூன்று வாரங்களை கடந்துள்ளது.
மேலும் வார விடுமுறை நாட்களில் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி செல்வோரும் உண்டு.
இதுவரை சென்னையில் மட்டும் இப்படம் ரூ. 11 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.
தமிழகத்தில் ரூ. 100 கோடியை கடந்து தென்னிந்திய சினிமாவுக்கே சவால் விட்டுள்ளது.
ஆந்திராவில் ரூ. 33 கோடியும், கர்நாடகாவில் ரூ. 30 கோடியும் மற்றும் கேரளாவில் 14 கோடியும் வசூலித்துள்ளதாம்.
இந்தியளவில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளை சேர்த்து ரூ. 210 கோடியை தாண்டிவிட்டது.
இதில் விநியோகஸ்தர்களின் பங்கு மட்டும் ரூ. 100 கோடி என கூறப்படுகிறது.
மலேசியாவில் இதுவரை எந்தப் படமும் வசூலிக்காத அளவு ரூ 26 கோடிகளைக் குவித்துள்ளது.
மேலும் சிங்கப்பூர், இலங்கை, வளைகுடா நாடுகள், அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் கபாலி இன்னும் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
மேலும் உலகளவில் சாட்டிலைட் உரிமை, இதர விளம்பரங்கள், புரேமோஷன் ஆகியவற்றை சேர்ந்து, இப்படம் ரூ 650 கோடியை கடந்துவிட்டதாம்.
இந்தியாவைச் சேர்ந்த ஒரு முன்னணி வர்த்தக இதழ் ஒன்று இப்படம் ரூ 650 கோடி வரை வசூல் செய்துவிட்டது என தெரிவித்துள்ளது.
வருகிற 26ஆம் தேதி இப்படம் சீனா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் வெளியாகவுள்ளது.
எனவே ஒட்டு மொத்தமாக ரூ. 1000 கோடியை சூப்பர் ஸ்டார் படம் தொட்டாலும் ஆச்சரியம் இல்லை.