தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஹர ஹர மஹாதேவகி & இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயகுமார்.
இவை இரண்டும் அடல்ட் காமெடி வகையை சேர்ந்தது.
இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.
இதன்பின்னர்… இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை சந்தோஷ் ஜெயகுமார் தெலுங்கில் ரீமேக் செய்தார்.
அங்கு மோசமான விமர்சனங்களை பெற்றது.
இருட்டு அறையில் முரட்டு குத்து விமர்சனம்
தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார்.
இரண்டாம் பாகத்திற்கு இரண்டாம் குத்து என பெயர் வைத்திருக்கிறாராம்.
சென்சார் வேலை எல்லாம் முடிந்து படம் ரிலீஸுக்கு தயாராகவுள்ளதாம்.
இரண்டாம் குத்து படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. கோடை விடுமுறை ஸ்பெஷலாக படத்தை ரிலீஸ் செய்யவிருந்தனர்.
ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையால் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியவில்லையாம்.
இந்த நிலையில் தன் அடுத்த பட அறிவிப்பை வெளியிடவுள்ளார்.
இதன் டைட்டிலை நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிடவுள்ளார் என அறிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு தொடர்பான போஸ்டர் டிசைனில்… உறிச்சி வச்ச 2 வாழைப்பழம்.. டூ பீஸ் கேர்ள்ஸ்.. பீர் பாட்டில்.. கடற்கரை ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இப்பட தலைப்பு நாளை அக்டோபர் 1 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.
Gautham Karthik will annnounce IAMK directors next film details tomorrow