சூட்டிங் அப்டேட் : ‘கிரிமினல்’ கௌதம் – சரத் உடன் இணைந்த ரவீணா

சூட்டிங் அப்டேட் : ‘கிரிமினல்’ கௌதம் – சரத் உடன் இணைந்த ரவீணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் தக்ஷிணாமூர்த்தி இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்து வரும் படம் ‘கிரிமினல்’.

இப்படத்தில் ரவீனா ரவி, சரத்குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

கிரிமினல்

இப்படத்தை பார்ஸா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

மேலும், இதனை படக்குழுவினர் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்கள்.

கிரிமினல்

Gautham Karthik’s ‘Criminal’ shooting has been completed

BREAKING NEWS : 12 வருடங்களுக்கு பிறகு மும்பை கிரிக்கெட்டில் பங்கேற்ற ரஜினிகாந்த்

BREAKING NEWS : 12 வருடங்களுக்கு பிறகு மும்பை கிரிக்கெட்டில் பங்கேற்ற ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் காலேவின் அழைப்பின் பேரில் நடிகர் ரஜினிகாந்த், முதல் ஒருநாள் போட்டியைப் பார்க்க ஒப்புக்கொண்டார்.

ரஜினிகாந்த் மார்ச் 17 இன்று தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் ஒருநாள் போட்டியைக் காண மும்பை வந்தடைந்தார். ரஜினிகாந்தை எம்.சி.எஸ் தலைவர் வரவேற்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய எம்.சி.எஸ் தலைவர், ரஜினிகாந்தை அழைத்ததாகவும், சூப்பர் ஸ்டார் வான்கடே மைதானத்திற்கு வருகை தந்தால் அது மிகப்பெரிய கவுரவமாக இருக்கும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்டு ரசிக்கிறார்.

மேலும், ரஜினிகாந்த் கடைசியாக 2011 உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியை மும்பையில் நேரடியாகப் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த்

Rajinikanth watches the India vs Australia ODI in Mumbai Wankhede stadium.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ‘வெப்பன்’..; மகிழ்ச்சியில் வசந்த் ரவி

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ‘வெப்பன்’..; மகிழ்ச்சியில் வசந்த் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குகன் சென்னியப்பன் இயக்கத்தில், வசந்த் ரவி மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வெப்பன்’.

இப்படத்தில் வசந்த் ரவி, சத்யராஜ், ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை மற்றும் தன்யா ஹோப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், ‘வெப்பன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக பட தயாரிப்பாளர்கள் தற்போது வெளிப்படுத்தியுள்ளனர் மற்றும் இறுதி படப்பிடிப்பு அட்டவணையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் வெளியீட்டு தேதியை பட தயாரிப்பாளர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை.

மேலும், சமூக ஊடகங்களில், இப்படத்தின் புதிய போஸ்டரைப் பகிர்ந்த நடிகர் வசந்த் ரவி, ” ‘வெப்பன்’ படத்தின் அடுத்த தோற்றம். இந்த படத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி, ‘வெப்பன்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் ஒரு “சூப்பர் ஹ்யூமன் சாகா” ஒரு ஆரம்பம். .” என்று எழுதி இருந்தார்.

Final shoot schedule of ‘Weapon’ begins!

‘சப்தம்’ பட அப்டேட் : 90s நட்சத்திரங்களை களமிறக்கும் அறிவழகன்

‘சப்தம்’ பட அப்டேட் : 90s நட்சத்திரங்களை களமிறக்கும் அறிவழகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடித்து வரும் படம் ‘சப்தம்’.

இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

‘சப்தம்’ படத்தின் முதல் ஷெட்யூல் சில வாரங்களுக்கு முன்பு மூணாறில் முடிவடைந்த நிலையில், நடிகை லட்சுமி மேனன் தினங்களுக்கு முன்பு ‘சப்தம்’ படப்பிடிப்பில் இணைந்தார்.

இப்படத்தின் இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது மற்றும் நடிகை லைலா சமீபத்தில் அணியில் இணைந்தார்.

இந்நிலையில், தற்போது நடிகை சிம்ரன் ‘சப்தம்’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

மேலும், சிம்ரனும் ‘சப்தம்’ படத்தின் அவரது பகுதிகளின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார்.

நடிகை சிம்ரனை ‘சப்தம்’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்ததை இயக்குனர் அறிவழகன் தனது ட்விட்டர் பக்கத்தில், ” ‘சப்தம்’ படத்திற்கு சிம்ரனை வரவேற்கிறேன்” என்று எழுதி இருந்தார்.

Simran joined the shooting of ‘Sabdam’ movie

தனுஷ் படத்தில் இணைந்த சூர்யா – கார்த்தி பட நடிகர்

தனுஷ் படத்தில் இணைந்த சூர்யா – கார்த்தி பட நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் தனுஷுடன் கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஜிவி .பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், நடிகர் வினோத் கிஷன் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குற்றாலத்தில் நடந்து வரக்கூடிய படப்பிடிப்பு அட்டவணையில் இணைந்துள்ளார்.

வினோத் கிஷன், பாலாவின் ‘நந்தா’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி , ‘நான் மகான் அல்ல’ படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடித்த பிறகு அவரது புகழ் அதிகரித்தது.

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

வினோத் கிஷன்

Actor Vinoth Kishan joins the cast of ‘Captain Miller’

கல்பாக்கத்தை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா செல்லும் ‘இந்தியன் 2’ படக்குழு

கல்பாக்கத்தை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா செல்லும் ‘இந்தியன் 2’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, சித்தார்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில், கமல்ஹாசன் கல்பாக்கத்தில் உள்ள சத்ராஸ் டச்சு கோட்டையில் ஒரு வாரத்திற்கும் மேலாக ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் இருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் கல்பாக்கம் ஷெட்யூல் இப்போது முடிவடைந்துவிட்டதாகவும், சிறிய இடைவெளிக்குப் பிறகு ‘இந்தியன் 2’ அணி தென்னாப்பிரிக்காவுக்குச் செல்லும் எனத் தெரிகிறது.

மேலும், தென்னாப்பிரிக்காவை தொடர்ந்து, ‘இந்தியன் 2’ அணி தாய்லாந்து செல்லவிருக்கிறது.

வெளிநாடுகளில் மட்டும் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Kamal Haasan’s ‘Indian 2’ Kalpakkam schedule wrapped up

More Articles
Follows