கௌதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16 1947’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

கௌதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16 1947’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள படம் ‘ஆகஸ்ட் 16 1947’.

இப்படத்தில் அறிமுக நாயகி ரேவதி நடிக்க, குக் வித் கோமாளி புகழ், ஷர்மா ரிச்சர்ட், அஸ்தன் ஜேசன் ஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

என்.எஸ்.பொன்குமார் இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தை ஏப்ரல் 7, 2023 அன்று திரைக்கு வரும் என்று தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதனை கௌதம் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

மேலும், கௌதம் கார்த்திக், சிம்பு உடன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘பத்து தலை’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.

ஆகஸ்ட் 16 1947

Gautham Karthik’s ‘August 16 1947’ release date Announcement

‘லியோ’ படப்பிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பும் முக்கிய பிரபலம்

‘லியோ’ படப்பிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பும் முக்கிய பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்யின் ‘லியோ’ கடந்த மாத தொடக்கத்தில் காஷ்மீரில் சூட்டிங் தொடங்கியது. மைனஸ் டிகிரி வெப்பநிலையையும் மீறி படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது.
இயக்குனர் மிஷ்கின் காஷ்மீரில் தனது பகுதிகளை முடித்துவிட்டு சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு விமானத்தில் பறந்தார். தற்போது முக்கிய வேடத்தில் நடிக்கும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் தனது போர்ஷன்களை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அடுத்த மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் அர்ஜுன் ஆகியோர் இடம்பெறும் முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட உள்ளது.

Another important star returns home after completing ‘Leo’ shooting

முதன்முறையாக இணையும் ஹரிஷ் கல்யாண் & அட்டகத்தி தினேஷ்

முதன்முறையாக இணையும் ஹரிஷ் கல்யாண் & அட்டகத்தி தினேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்க்ஷ்மன் குமார் தயாரிப்பில் ‘லப்பர் பந்து’ என்ற ஒரு புதிய படம் உருவாக உள்ளது. இந்த படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது.

இதில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நாயகிகளாக நடிக்கிறார்கள்.

லப்பர் பந்து

இவர்களுடன் காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

கனா, நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட படங்களின் ரைட்டரும், எஃப்ஐஆர் போன்ற படங்களின் இணை இயக்குனருமான
தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்கவுள்ளார்.

‘லவ் டுடே’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த தினேஷ் புருஷோத்தமன் இந்த படத்தின் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

லப்பர் பந்து

ரன் பேபி ரன் படத்தில் பணியாற்றிய படத்தொகுப்பாளர் G.மதன் எடிட்டிங்கை மேற்கொள்ள, ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்

தயாரிப்பு மேற்பார்வையை பால்பாண்டி கவனிக்க, நிர்வாகத் தயாரிப்பு பணியை மேற்கொள்கிறார் ஷ்ரவந்தி சாய்நாத்.

இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற இருக்கிறது.

லப்பர் பந்து

Harish Kalyan and Attakathi Dinesh joining for the first time

‘தண்டகாரண்யம்’ படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட்

‘தண்டகாரண்யம்’ படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற படத்தை இயக்கியவர் அதியன் ஆதிரை.

அதியன் ஆதிரை தற்போது இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லெர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷனுடன் இணைந்து உருவாகி வரும் படம் ‘தண்டகாரண்யம்’.

இப்படத்தில் கலையரசன், அட்டகத்தி தினேஷ், ரித்விகா, வின்சு சாம், ஷபீர் கல்லரக்கல், பால சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, தொழில்நுட்பக் குழுவில் பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் துவங்கியது.

இந்நிலையில், ‘தண்டகாரண்யம்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.

Athiyan Athirai’s ‘Thandakaaranayam’ first schedule wrapped up

FRIENDSHIP GOALS : ஷிவின் – ரக்ஷிதா பகிர்ந்த லேட்டஸ்ட் வீடியோ வைரல்

FRIENDSHIP GOALS : ஷிவின் – ரக்ஷிதா பகிர்ந்த லேட்டஸ்ட் வீடியோ வைரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக் பாஸில் பங்கேற்ற சிலர் நிகழ்ச்சிக்கு வெளியே நல்ல நட்பைப் பேணி வந்தனர்.

பிக் பாஸ் சீசன் 6 இன் வலுவான போட்டியாளர்களான ஷிவினும் ரக்ஷிதாவும் சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி முடிந்த பிறகும் இப்போதும் தங்கள் நட்பைத் தொடர்கின்றனர். இருவரும் இன்னும் வெளியில் ஒன்றாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள், சமீபத்தில் ஷீரடிக்குச் சென்று சாய்பாபா கோவிலில் ஆசிர்வாதம் வாங்கி வந்துள்ளனர். அவர்கள் தங்கள் சுற்றுப்பயணத்தின் வீடியோ தொகுப்பை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். அது இப்போது வைரலாகி வருகிறது.

Shivin and Rakshitha share a super video from their recent adventure!

இதுக்கு தானே காத்திருந்தீங்க.; இன்று முதல் மீண்டும் மாஸ் காட்ட வரும் ‘தி லெஜண்ட்’

இதுக்கு தானே காத்திருந்தீங்க.; இன்று முதல் மீண்டும் மாஸ் காட்ட வரும் ‘தி லெஜண்ட்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் லெஜன்ட் சரவணன் நடித்து வெளியான திரைப்படம் ‘தி லெஜன்ட்’.

இப்படத்தில் சரவணன், ஊர்வசி ரவுடேலா, கீதிகா திவாரி, சுமன், விவேக், யோகிபாபு, நாசர், ரோபோ ஷங்கர், பிரபு, விஜயகுமார், லதா என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார்.

இப்படம் ஜூலை 2022 இல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இந்த படம் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர்கள் தற்போது அறிவித்துள்ளது. ‘தி லெஜன்ட்’ மார்ச் 3-ம் தேதி இன்று முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் என்ற ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தி லெஜண்ட்

‘The Legend’ OTT release date is here

More Articles
Follows